Friday, September 15, 2006

மேட்டூர் நண்பர்கள்(1987-1988)

மேட்டூர் வந்த போது நான் பிரம்மச்சாரியாக இருந்ததால் "செட்ராஸ்"அருகே கம்பெனி பார்த்த ஒருவீட்டில் 8 பேர் தங்கியிருந்தோம்,பக்கத்திலேயே Mess,அதனால் சாப்பாட்டுக்கும் பிரச்சனையில்லை இல்லாமல் இருந்தது.

காலை மாலை இரு வேலைகளிலும் ஜீப் வந்து அழைத்துப்போய் திரும்ப கொண்டுவிடும்.
இந்த Site யில் அமைந்த சில நண்பர்களை பார்த்துவிட்டு பிறகு சிமினி பக்கம் வருவோம்.

அலுவலகம் என்னும் போது அதில் முதலாவாதாக ஞாபகம் வருவது "திரு.s.அருணாச்சலம்." இவர் சொந்த ஊர் சீர்காழி,வாய்காங்கரை தெரு (Canal Street).புத்தூர் பாலிடெக்னிக்கில் சிவில் முடித்துவிட்டு ECCக்கு வந்தவர்.இவரும் என்னைப்போல் அரசாங்கம் சார்ந்த வேலையில் கொஞ்ச நாட்கள் இருந்துவிட்டு ECC க்கு வந்ததாக ஞாபகம்.எனக்கு 3 அல்லது 4 ஆண்டுகள் முன்பே இங்கு சேர்திருந்தார்.
Photobucket - Video and Image Hosting

இடதுபக்கம்:ஜோதி நடுவில்:அருணாசலம் வலது பக்கம்:நான்
என்னுடைய முதல் Site யில் அலுவலகத்தில் அவரிடம் பணி கற்றுக்கொண்டு அவருடனேயே வேலை செய்தேன்.ரொம்ப அனியாயத்துக்கு பொறுமைசாலி.பல அதிகாரிகள் தங்கள் கோபங்களை சுலபமாக இவரிடம் காட்டியும் ஒன்றுமே நடக்காத மாதிரியிருந்து சமாளிப்பார்.

பக்கத்தில் இருக்கும் எனக்கு பொருக்கமுடியாது.
என்ன "அருணாசலம்,அவர் வந்து இந்த மாதிரி கத்திட்டு போரார் நீங்க சும்மா இருக்கீங்க? சொல்ல வேண்டியது தானே அதை நீங்கள் பண்ணவில்லை என்று".
வெறுமனே ஒரு சிரிப்பை விட்டுவிட்டு தொடர்ந்து வேலையை பார்ப்பார்.இது தான் அவர் குணம்.கை சுத்தம். பல பெரியவர்களிடம் வேலைசெய்து நல்ல பேர் எடுத்திருந்ததாலும் பல அதிகாரிகளும் அவருடைய வேலை திறனுக்காகவே அவரை வைத்துக்கொள்வார்கள்.இவர் இந்த வேலைக்குத்தான் என்று முத்திரை குத்தமுடியாத மனிதர்

என்னுடைய முதல் siteக்கு பிறகு நான் எங்கெங்கோ சுத்தியபிறகு இவரை மேட்டூரில் சந்தித்தேன்.அப்போது தான் கல்யாணம் செய்துகொண்டிருந்தார்,கொஞ்சம் "காலம்" கடந்த பிறகு.

நாங்கள் இருவரும் ஒரே Siteயில் இருந்தாலும் வெவ்வேறு Projectயில் இருந்தோம்.எனக்கு சிமினி அவருக்கு கூலிங் டவர்.அருகில் இருந்தாலும் எப்போதாவது தான் பார்த்துக்கொள்வோம்.

ஒரு தடவை
ஆந்திராவில் இருந்த போது..
ஊருக்கு வருவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன்.
அப்போது ஏதோ பேசிக்கொண்டிருக்கும் போது "என்ன ஆத்துல ஏதாவது பொண்ணு பாக்க ஆரம்பிச்சிட்டாளா?" என்றார்.

தெரியலை.தங்கைக்கு முடித்த பிறகு தான் என்றேன்.

சரி நீ போகும் வழியில் மதுராந்தகம் இறங்கி இந்த லெட்டரை எனக்கு தெரிஞ்சவா "ஏரி காத்த ராமர்" கோயிலுக்கு எதிர்தமாதிரி ஆத்தில் இருக்கா,கொடுத்துட்டு போ-என்றார்.கூடுதலாக அவாத்தில் ஒரு பெண் இருக்கா பாத்துக்கோ,பிறகு பேசிக்கலாம் என்றார்.

போனேன்,கொடுத்தேன், கொஞ்ச நேரம் பேசிவிட்டு கிளம்பிவிட்டேன்.அந்த மாமா, "இது எங்காத்துக்காரி" என்று மாமியை காண்பித்துவிட்டு,பொண்ணை கண்ணில் கூட காட்டவில்லை.வீட்டில் இருந்த வெளிச்சத்துக்கு காண்பித்திருந்தாலும் தெரிந்திருக்காது.ஒரு வேளை நான் போன சமயத்தில் அவுங்க வீட்டில் இல்லையோ என்னவோ?

நான் என்ன பெண் பார்க்க வருகிறேன் என்று சொல்லிவிட்டா போனேன்?அவுங்க பொண்ணை கூப்பிட்டு காண்பிக்க!!

பிறகு அது அப்படியே போய்விட்டது.

எனக்கும் வெவ்வேறு இடங்களில் வேலையிருந்ததால் இது சுத்தமாக மறந்துவிட்டது.
அதற்கு பிறகு மேட்டூர் வந்தபிறகு திரும்பவும் ஒரு ஜாதகம் சீர்காழில் இருந்து வந்திருப்பதாக வீட்டில் இருந்து கடிதம் வந்தது.

அப்போதெல்லாம் ஏது தொலைபேசி ஒரு சாதாரணமான குடும்பத்துக்கு..

சீர்காழி என்றதும் இவர் ஞாபகம் தான் வந்தது.அதுவும் அந்த சமயத்தில் இவர் அங்கு போவதாக இருந்ததால் விபரங்கள் சொல்லி அனுப்பியிருந்தேன்.
"பொண்ணு எப்படி? என்னோட வேலைக்கு ஒத்துவருமா? என்று சும்மா விஜாரித்து வாருங்கள்" என்று.

காரணம் சொல்லவேண்டாம்,பிறகு முடியாவிட்டால் உங்களுக்கு கெட்டபேர் அதனால் சாதரணமாக விஜாரித்து பொண்ணையும் பார்த்துவிட்டு வாருங்கள் என்றேன்.

பார்த்தார்களா? இல்லையா?

அடுத்த பதிவில்..

4 comments:

 1. ச்சும்மா ஒரு கெஸ் பண்ணட்டுமா?

  இது அதே பெண்தான். ஏரி காத்த ராமர் கோயிலுக்கு எதுத்தாம்.
  இப்ப மிஸ்ஸஸ் குமார்:-)

  சரியா?

  ReplyDelete
 2. இல்லங்க துளசி.
  அவுங்க வேற,அதிஷ்டக்காரியாக இருக்கக்கூடும்.
  :-))
  இப்ப இருக்கிறவரங்களுக்கு என்ன பதில் சொல்வது???
  மாட்டிவிடீங்களே!!

  ReplyDelete
 3. இப்படி மதுராந்தகம், சீர்காழின்னு பாலா
  ரு, காவிரின்னு சர் சர்ன்னு சீன் மாறி மாறி வருது லெனின் விடி விஜயன் எடிட்டிங் மாதிரி

  துளசியக்கா பண்ண guessஏ உங்களை வீட்டுல பதில் சொல்ல ஏரிகாத்த ராமரைக் கூப்பிட வேண்டியதாயிட்டதால ஐயம் நோ கெஸ்ஸிங்.

  1987-88 என்னோட இரண்டாமாண்டு கல்லூரிக்காலம்.

  அன்புடன்,

  ஹரிஹரன்

  ReplyDelete
 4. ஹரி
  அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.
  என்னிடம் மறைக்க,இழக்க ஒன்றும் இல்லை.அதனால் கவலை இல்லை.
  என்ன?சிலதை சொல்லாமல் விட்டுவிடுவேன்.
  :-))
  :-))

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?