Friday, September 22, 2006

துபாயிடம் இருந்து பறிப்பு

இன்று காலை தமிழ் செய்தியில் கேட்டது

Photobucket - Video and Image Hosting

தொடர்ந்து 19 வது ஆண்டாக சிங்கப்பூர் விமான நிலையம் உலகத்தில் தலைசிறந்த விமான நிலயமாக பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அதோடில்லாமல் திறந்தவெளி சுங்கை தீர்வில் இதற்கு முன்பு முதல் இடத்தில் இருந்த துபாய் விமானநிலையத்தை கீழே இறக்கிவிட்டு அந்த இடத்தையும் இந்த விமான நிலயம் பெற்றுள்ளது.

சின்ன நாடு,

சிறிய ஜனத்தொகை,

பல இனம்,

தேசிய இயற்கை வளம் இல்லை,

குடிதண்ணீருக்கு வேறு நாடுகளை பார்க்கவேண்டிய நிலமை.(5 ஆண்டுகளுக்கு முன்பு கூட)

விவசாயம் கிடையாது.

இப்படி பல குறைபாடுகள் சில வேற்றுமைகள் இருந்தும் எப்படி இவர்களால் சாதிக்கமுடிந்தது?

கற்போம் இவர்களிடம் இருந்து.

தெரியாதைதான் கற்கமுடியும்.

திறமை காட்டி உலகை தன்பக்கம் சிறிது திரும்பிப்பார்க்க வைத்த இந்த மக்கள் மற்றும் அரசாங்கத்தையும் வியக்காமல் இருக்கமுடியவில்லை.

முடிந்தால் நமது நாட்டின் ஒரு சிறிய பகுதியையாவது இந்த மாதிரி மாற்றிக்காட்டவேண்டும்.

இது என் சிறிய அவா கூட!!

8 comments:

Anonymous said...

எழுதிக்கொள்வது: கால்கரி சிவா

குமார், சிங்கபூர் என்னை மிகவும் வியக்கவைத்த நாடு. வந்து 7 வருடங்கள் ஆகிவிட்டது. என்னன்ன மாற்றங்களோ
கால்கரி சிவா

19.33 21.9.2006

வல்லிசிம்ஹன் said...

எழுதிக்கொள்வது: ரேவதி நரசிம்ஹன்

குமார்இநம்ம ஊரும் அந்த மாதிரி ஆகும்.பொறுமை தேவை. நாங்க பார்க்காட்ட கூட நீங்கள் எல்லாம் பார்க்க வர வேண்ட

7.27 22.9.2006

வடுவூர் குமார் said...

வாங்க கால்கரி சிவா,
தினமும் மாற்றம் தான்.சில இடங்களுக்கு வெகு நாட்கள் கழித்து போனால் இடித்து புதிதாக ஒன்று உருவாகியிருக்கும்.

வடுவூர் குமார் said...

வாங்க ரேவதி நரசிம்ஹன்,
பக்கத்துல இருக்கிறவங்க சைகிளில் முன்னேறி போகும் போது காரை வச்சுக்கிட்டு வேடிக்கை பார்க்கிறது போல இருக்கு.
வருகைக்கு நன்றி

ச.சங்கர் said...

குமார்...
உங்கள் ஆதங்கம் புரிகிறது....சமீபத்தில் சிங்கப்பூர் வந்திருந்தேன்...பர்த்ததும் ஏன் எல்லோரும் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள் இந்த ஊரைப் பற்றி என்று ஓரளவு புரிந்தது...சிங்கப்பூர் ஏர் போர்ட்டை அவர்கள் மிகப்பெரிய ஷாப்பிங் மால் (பன்னாட்டு வர்த்தக மையமாக)...profit centre என்றுதான் பார்க்கிறார்களே தவிர விமான நிலையமாக அல்ல...பொது வசதி..பப்ளிக் சர்வீஸ் என்றெல்லாம் டகால் பாஜி காட்டாமல் இப்படி விமான நிலையத்தை பராமரிக்க என்ன தேவை அதை லாபகரமாக எப்படி நிறைவேற்றலாம் என்று எண்ணி அப்படி செய்வதே இவர்களுடைய வெற்றியின் அடிப்படை என்று எனக்கு தோன்றுகிறது...சரியா

stratagical location of this country and one party politics(rule) also play a vital role in Singapore development..I believe

வடுவூர் குமார் said...

வாங்க சங்கர்
ஓரளவு உண்மையே.எதிலும் பணம் எங்கு பணம்.இவர்கள் பார்வை இப்படிதான் இருக்கும்.ஏன் இங்கு இருக்கும் பல நபர்களின் நோக்கமே வந்த கொஞ்ச நாளில் மாறிவிடும் தான்.
இந்த முன்னேற்றத்துக்கு காரணம்.. தேவை மற்றும் சமயத்துக்கு தகுந்த மாதிரி மாற்றிக்கொள்வது.எந்த தலைவரும் ஒரே புளியமரத்தை வாழ்நாள் முழுவதும் உலுக்கிக்கொண்டிருப்பதில்லை.
சிங்கப்பூரை காப்பாற்றவேண்டும், உயர்த்தவேண்டும் என்ற வேட்கை.இப்படி ஏதோதோ சொல்லிக்கொண்டு போகலாம்.
தீர்கமான சிந்தனை,உழைப்பு..உழைப்பு(முப்பது வயதுக்கு குறைந்த யாருக்கும்) எந்த சலுகையும் காட்டாத அரசாங்கம் அமைந்தால் எந்த உச்சத்தையும் நம்மாலும் தொடமுடியும்.
நம்புவோம்...நடக்கும்.

ச.சங்கர் said...

""எந்த தலைவரும் ஒரே புளியமரத்தை வாழ்நாள் முழுவதும் உலுக்கிக்கொண்டிருப்பதில்லை"""

:))))

""சிங்கப்பூரை காப்பாற்றவேண்டும், உயர்த்தவேண்டும் என்ற வேட்கை""""

அவங்களுக்கு இல்லாட்டி கூட நம்ம தலைவருக்கு இருக்கு...மாப்பிள்ளை ஊராச்சே :))

நன்றி

அன்புடன்...ச.சங்கர்

வடுவூர் குமார் said...

வாங்க சங்கர்,

"பொடி"

வச்சு எழுதிரீங்களே!!!