Friday, September 08, 2006

"பளிச்"

இந்த தலைப்பை போன பதிப்பில் பின்னூட்டம் இட்ட திருமதி.துளசியிடம் இருந்து கடன் வாங்கியுள்ளேன்.

பறவைப்பார்வையில் சிமினியின் உட்பகுதி-பாதிதான் காட்டியுள்ளேன்.
Photobucket - Video and Image Hosting

வழி பிறந்தது என்று போன பதிவில் சொல்லியிருந்தேன்...

ஆதாவது செங்கல் சுவர் கட்டும்போது சில சமயம் துவாரங்கள்( Openings) விட வேண்டியிருக்கும்,அந்த மாதிரி இடங்களில் கொத்தனார் சில கற்களை வைத்து அதற்கு சிமின்டு கலவை போடாமல் வெறும் மணல் மட்டும் போட்டு அல்லது அது கூட இல்லாமல் வெறும் கல்லை மாத்திரம் வைப்பார்கள்.

இப்படி வைப்பதனால் தேவைப்படும்போது மிக சுலபமாக அதை எடுத்துவிட்டு ஜன்னலோ இல்லை வென்டிலேட்டரோ வைத்துக்கொள்ளலாம்.உடைக்கும் செலவு,கல்லின் செலவை மிச்சப்படுத்தலாம்.இதை "பொய் கல்" என்று சொல்வார்கள்.இந்த மாதிரி ஒர் நடைமுறை இருப்பதை இந்த வேலை செய்வதற்கு சுமார் 3 வருடங்கள் முன்பு ஒரு Meeting நடக்கும் போது எங்கள் தலைவர் சொன்னது ஏதோ ஒரு மூலை(ளை)யில் ஒட்டிக்கொண்டிருந்தது.

"பளிச்"

இந்த கார்பல் கம்பி வெளியே தெரிய ரம்பித்து 10 மணி நேரத்துக்குள் கான்கிறீட்டை கொத்தி,கம்பி கட்டி & சாரம் அடித்து கடைசியாக கான்கிரீட் போடவேண்டும்.
முதல் வேலை-கான்கிரீட்டை உடைப்பது.அந்த சின்ன இடத்தில் பல ட்களை வைத்து வேலை பார்த்தாலும் குறைந்தது 6 மணி நேரம் கும்.இதை குறைத்தாலே பாதி கிணறு தாண்டிய மாதிரி என்று தெரிந்தது.அப்போது தான் மேலே சொன்ன "மணல்-பளிச்" வந்தது.தாவது திரும்ப நிமிர்க்ககூடிய கம்பியை கான்கிறீட் போட்டு மூடாமல் மணலை போட்டு மூடவேண்டும்.சின்ன சின்ன பிளைவுட்டை வைத்து கானிகிரீட்டை தடுத்து மீதமுள்ள இடத்தில் மணலை கொட்டினோம்.

படத்தைப் பார்க்கவும்.(Plan-பறவைப்பார்வையில்)
Photobucket - Video and Image Hosting

10மணி நேரம் கழித்து அந்த இடம் வெளியே வந்தவுடன் தண்ணீர் குழாய் மூலம் அதை கழுவிவிட்டால் முடிந்தது கதை.இதை செய்வதற்கு அரை மணி நேரம் கூட காது.

5 1/2 மணி நேரம் மிச்சம் பிடித்தாயிற்று.

கம்பியை நிமிர்த்துவது,கட்டுவது,சாரம் அடிப்பது என்ற மற்ற வேலைகள் சுலபமாக எங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி அமைக்கமுடிந்தது.

நிமிர்த்து கட்டிய கம்பியை படத்தில் பார்க்கவும்.(பறவைப் பார்வையில்)

Photobucket - Video and Image Hosting

இது அவ்வளவும் என்னுடைய "பாஸ்"க்கு சொல்லப்பட்டது அதோடு இல்லாமல் எங்கள் Client யிடம் சொல்லி தேவையான அனுமதியையும் வாங்கினோம்.அவர்களும் அவ்வளவு சீக்கிரம் கொடுக்கவில்லை.முதல் தடவை பார்ப்போம் சரியாக வந்தால் மற்ற உயரங்களிலும் போடலாம் என்றார்கள்.முதலில் சொன்ன திரு.சத்தியமூர்த்தியின் பங்கும் இதில் உள்ளது.

இது போட்டால் தான் இதன் தொடர்புள்ள வேலைகளை முன்னமே ஆரம்பிக்க முடியும்.
முதல் தடவை அந்த லெவலை நெருங்கும் போது என்னுடைய shift மாறிப்போனது.சக மேற்பார்வையாளரிடம் கொடுத்துவிட்டு போனேன்.

அந்த சக மேற்பார்வையாளர் பெயர் "ஹரிஸ் சிங் ராவத்"-அப்போது தான் பாலிடெக்னிக் முடித்துவிட்டு நைனிடாலிருந்து மேட்டூருக்கு வந்திருந்தான்.தமிழ் சுத்தமாக தெரியாது.சாப்பாடும் ஒத்துவரவில்லை.எனினும் எங்களுடன் ஒட்டிக்கொண்டுவிட்டான்.

எல்லாம் சரியாக இருந்தாலும் எவ்வளவு முனைப்புடன் செய்வார்கள் என்ற சந்தேகத்துடனே வீட்டுக்கு போனேன்.

மறுநாள் வேலைக்கு போன போது சந்தோஷமான செய்தி சொன்னார்கள்.25 இடங்களில் போட வேண்டியது 16 இடங்களில் மட்டும் தான் முடிந்தது.முதல் தடவை என்பதால் சின்ன சின்ன பிரச்சனைகள்.

பிரச்சனைகளை களைந்த பிறகு... சுமூகமாக எல்லா மட்டங்களிலும் போட்டோம்.இதன் விளைவாக நாங்கள் சேமித்த நாட்கள் சுமார் 60.

1988-நவம்பர் மாதம் வாக்கில் 220மீட்டர் உயரத்தை வெற்றிகரமாக தொட்டுவிட்டோம்.
பலர் முகங்களில் சந்தோஷக்களை தாண்டவமாடியது.

சுமார் 2 மாதங்களை சேமித்தாயே ஏதாவது கிடைத்ததா?

கிடைத்தது. அது அடுத்த பதிவில்.

No comments: