அது இது தான்.
இந்த பிராஜட் தொடங்கிய சமயத்தில் எங்கள் சென்னை கிளையில் "பரிந்துரைக்கு சன்மானம்" என்ற புது கொள்கையை கொண்டுவந்தது.
அதன்படி Site யில் கண்டுபிடித்து வெற்றிகரமாக செயல்படுத்தும் "கண்டுபிடிப்புகளுக்கு" சன்மானம் வழங்கப்படும் என்று.
இப்படி ஒன்று இருக்கிறது என்று பல நாட்களுக்கு பின்பு தான் தெரியவந்தது.
அதற்கு முன்பே என் உயர் அதிகாரி "திரு.U.R.ஹரிஹர சுப்பிரமணியம்" என்பார் அதற்கு தேவையான கடிதங்களை,முயற்சிகளையும் விவரித்து அவரே தயாரித்து எங்களது மெயின் அலுவலகத்துக்கு அனுப்பியிருந்தார் போலும்.
சில மாதங்கள் கழித்து அதை அங்கிகரித்து கீழே போட்டுள்ள மாதிரி கம்பெனி "News Letter" யில் போட்டு Rs 5000/- கொடுத்தார்கள்.

இதன் வெற்றிக்கு நான் மட்டும் பொருப்பள்ள.என்னுடன் வேலை பார்த்த சக ஊழியர்கள்,தொழிலாள நண்பர்களுக்கும் இதில் நிறைய பங்குள்ளது.
இதை எனக்கு உறைக்க வைத்தான் ஒரு நண்பன்.அதை எப்படி/எங்கே என்று பார்ப்போமா?
இந்த அங்கீகாரம் கிடைத்தவுடன் ஒரு சின்ன மீட்டிங் Site உள்ளேயே எங்கள் தலைமை அதிகாரி ஏற்பாடு செய்திருந்தார்.எல்லோரும் சிலாகித்து பேசி முடிந்த பிறகு..
வெங்கடேசா "இந்த பணம் உன்னுடைய உழைப்பில் மட்டும் வந்தது அல்ல,உன்னுடன் வேலை செய்த சிலரின் பங்குள்ளது அதனால் இதை அவர்களுடன் பங்கு போட்டுக்கொள்வது தான் சிறந்தது" என்றான் என் நண்பன்.இவரை "நண்பன்" என்ற பொட்டிக்குள் அடைப்பது அவ்வளவு சரியல்ல இருந்தாலும் இப்போதைக்கு அப்படியே வைத்துக்கொள்வோம்.
ஒரு நண்பனுக்கு அழகு தவறு செய்யும் போது "இடித்துரைக்கவேண்டும்".அதைத்தான் அவன் செய்தான்.
என்னுடைய ஆரம்ப கால L&T-ECC வாழ்கையில் இருந்து என்னை பார்த்துக்கொண்டிருக்கான்.
அதுவும் பிற்காலத்தில் அவருடைய ஊரில் இருந்து என்னுடைய மனைவியும் வந்தார் என்பதால் அவர்மீது ஒரு Soft Corner.
சரி,அவர் சொன்னமாதிரி பணத்தை பங்கு போட்டுக்கொண்டாயா?
நான் கேட்காத,எதிர்பார்க்காத பணம் கிடைத்தபோது அதை அவர்களுடன் பங்கிட்டுகொள்வது தானே ஞாயம்.அதைத்தான் செய்தேன்.எவ்வளவு என்று சரியாக ஞாபகம் இல்லை.
இந்த அங்கீகாரம் தான் என்னுடைய ECC வாழ்க்கையில் முதல் மையில் கல்.
பரமபத்தில் ஏணியை மிதித்தேன்.
கொஞ்சம் பொருத்துக்கொள்ளுங்கள்--சுய விளம்பரமாக இருக்கிறது இது.
இதை எதற்கு போடுகிறேன் என்றால்,கட்டுமான துறையில் கூட இந்த மாதிரியான "தட்டிக்கொடுத்தல்" நடைமுறைக்கு வந்தது என்பதை காண்பிக்கதான்.
இந்த "Suggestion Scheme" இன்றளவும் பல கம்பெனிகளில் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.சின்ன கண்டுபிடிப்புகள் மூலம் பல வெற்றிகள் அடையப்பட்டுள்ளன.அதற்கு இது ஒரு உதாரணம்.
எல்லா துறைகளில் சொல்வது போல்,கண்ணையும் காதையும் திறந்து வைத்துக்கொண்டாலே, பல பரிந்துரைகள் வெற்றி பெற வாய்ப்பு உண்டு.
மேட்டூர் பற்றி எழுதிய தொடரில் எங்களுடைய Client பற்றி எழுதியிருந்தேன்.மேலும் வரும் தொடர்களில் என்னுடன் பணிபுரிந்த
இன்னும் பல சுவாரஸ்யமானவர்களை பற்றி எழுத உள்ளேன்.
அடுத்த பதிவுக்கு வாருங்கள்.
8 comments:
எழுதிக்கொள்வது: செந்தழல் ரவி
///எல்லா துறைகளில் சொல்வது போல்,கண்ணையும் காதையும் திறந்து வைத்துக்கொண்டாலே, பல பரிந்துரைகள் வெற்றி பெற வாய்ப்பு உண்டு.///
முற்றாக சரி.
9.37 13.9.2006
குமார்,
உயர் அதிகாரிகள் அங்கீகரிகின்ற மனோபாவத்தோடு பரிசளித்து ஏற்றிவிடும் பரம்பத ஏணிகளாக அமைந்துவிட்டால் உருப்படியான கண்டுபிடிப்புக்களைப் பொறுப்போடு நிறுவனத்திற்குச் சமர்ப்பிக்க முடியும்.
Recognition-Rewards-Ownership these are great motivators to become more efficient at work.
வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ஹரிஹரன்
குமார்,
இந்த மாதிரி கிடைச்ச பரிசு/பாராட்டு இதுகளைப் பகிர்ந்து கொள்ளாததாலேதான்
வேலை செய்யற இடங்களிலே பலசமயம் காழ்ப்புணர்ச்சி வந்துருது.
நல்லவேளையா நீங்க அந்தக் கூட்டத்துலெ இல்லை.
சந்தோஷமா இருக்கு.
துளசி-அது அந்த நல்ல நண்பன் செய்த நல்ல காரியம்.அவன் எடுத்துரைக்காவிட்டால் நானும் அந்த கூட்டத்தில் தான் இருந்திருப்பேன்.
ஹரி,
எனக்கு அமைந்த உயரதிகாரிகள் எல்லாம் கலந்து கட்டிதான் இருந்தது.(கலந்து கட்டி-இங்கும் கட்டுமானத் துறை பாஷைதான் வருகிறது)
என்னை அழ வைத்தவர்களும் உண்டு இந்த மாதிரி தூக்கிவிட்டவர்களும் உண்டு.
வாழ்த்துக்களுக்கு நன்றி.
எழுதிக்கொள்வது: SP.VR.SUBBIAH
எல்லா துறைகளில் சொல்வது போல்,கண்ணையும் காதையும் திறந்து வைத்துக்கொண்டாலே, பல பரிந்துரைகள் வெற்றி பெற வாய்ப்பு உண்டு//
ஆமாம் நண்பரே உண்மை
நல்ல பதிவு
14.31 13.9.2006
நன்றி,செந்தழல் ரவி.
தங்கள் வருகைக்கு நன்றி சார்.
Post a Comment