Monday, December 10, 2007

இதுவும் Design தான்.

இந்த இடம் சிங்கையில் சோ சு காங்க் என்ற இடத்தில் உள்ளது.தினமும் இந்த இடத்தை கடக்கும் போது எரிச்சலாக வரும்.ஏதோ ஒரு கத்துக்குட்டி கொடுத்த Design ஐ கண்ணை மூடிக்கொண்டு அமல்படுத்தியிருக்கிறார்கள்.

மிதி வண்டியை இப்போது பலர் உபயோகப்படுத்துவதால் ரயில் மற்றும் பேருந்து சேரும் இடத்திலும் அவர்களுக்கு என்று ஓரிடம் ஒதுக்கி அங்கு அதை செயின் போட்டு கட்டுவதற்கான வசதி செய்துகொடுத்திருக்கிறார்கள்.அது எப்போதும் நிரம்பி வழியும்.காலையில் முதலில் சென்றால் நிறுத்த இடம் கிடைக்கும் இல்லாவிட்டால் கஷ்டம் தான்.



மேலே உள்ள படத்தை பாருங்கள்.(பெரிதாக்கி பார்க்க அதன் மேல் சொடுக்குங்கள்)

முதலில் 2 மிதிவண்டிகள் எதிரெதிரே வைக்கமுடியாது.

இரண்டாவது எல்லா இடங்களில் மிதிவண்டி இருந்தால் உள்ளே வைத்திருக்கும் வண்டியை முதலில் வந்தால் எடுக்கமுடியாது.

Design என்பது எப்படி இருக்ககூடாது என்பதற்கான சிறந்த உதாரணம் இது.

என்ன அந்தூரிலும் இப்படியா? என்கிறீர்களா?

இங்கும் மனிதர்கள் தானே இருக்கிறார்கள்.இதை இவ்வளவு நாள் எப்படி விட்டு வைத்திருக்கிறார்கள் என்பது தான் புரியவில்லை.

தவறு என்று தெரிந்தவுடனே மாற்றுபவர்கள் இவர்கள்.

6 comments:

காட்டாறு said...

எனக்கு நாகேஷ் வசனம் தான் ஞாபகத்துக்கு வருது... தப்பை கண்டுபிடிக்கவே நாம் இருக்கும் போது.... எப்படி சிங்கைல விட்டு வச்சாங்க....ச்ச்ச்ச்சும்மா வம்பு...;-)

வடுவூர் குமார் said...

காட்டாறு
இங்கு அப்படித்தான் "தவறு" என்று வரும் போது அதில் பாடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு போய்க்கொண்டு இருப்பார்கள்,ஆனால் இதை எப்படி இவ்வளவு நாள் விட்டார்கள் என்று தெரியவில்லை.

சத்ரியன் said...

அடடா...சிங்கப்பூர்லயும் இந்த பிரச்சனையா?...
ஆனா அவங்களோட வெற்றியே நீங்க சொன்ன "தவறு என்று தெரிந்தவுடனே மாற்றுபவர்கள் இவர்கள்" தான்.

வாழ்த்துக்கள் குமார் சார்

வடுவூர் குமார் said...

வாங்க சத்ரியன்.
முதல் வருகைக்கு நன்றி.

cheena (சீனா) said...

இந்தியாவில் தமிழ்நாட்டில் இந்த மாதிரி தவறுகள் எல்லாம் கிடையாது

வடுவூர் குமார் said...

சீனா
இந்தியாவில் சைக்கிள் வைக்க தான் காண்ட்ரேக்ட் கொடுத்து இடமும் கொடுக்கிறோமே!!