Monday, December 24, 2007

வைரமுத்து

இரண்டு நாட்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் பேனியன் அமைப்புக்காக ஒரு நிகழ்ச்சியை இதில் ஒளிபரப்பினார்கள்.இது புது நிகழ்ச்சியா? பழைய நிகழ்ச்சியா? என்று தெரியாது.பார்க்க நேர்ந்த போது பிடித்து வைத்தது.

இதில் கலந்துகொண்ட பல திரைப்பட நடிகர்களில் கமலஹாசனை பெருமைப்படுத்தும் நிகழ்ச்சியாக போய்விட்டதை அவரே சொல்லியிருந்தார்.அப்போது திரு.வைரமுத்துவின் ஒரு கவிதைக்கு இசை அமைத்து அனைவரும் பாடினார்கள்.அதற்கு முன் அவர் பேசிய சலனப்படத்தை கீழே பாருங்கள்.

எனக்கென்னவோ விவேக்கின் "வெள்ளை தான் எனக்கு பிடிச்ச கலர்" என்ற பாட்டை அவரே பாடியது வெகுவாக கவர்ந்தது.



நன்றி: விஜய் தொலைக்காட்சி.

5 comments:

cheena (சீனா) said...

பான்யன் - ஆலமரம் - என்ற அமைப்புக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி - வைரமுத்துவின் உரை அருமை. மனநிலை திரிந்து போனவர்கள் - புதிய சொல்லாக்கம் - விவேக்கின் வெள்ளை தான் எனக்குப் பிடிச்ச கலரு என்ற பாடல் வருமென் நினைத்தேன் - வரவில்லை

வடுவூர் குமார் said...

சீனா,விவேக் பாடலை ரிக்கார்ட் பண்ணவில்லை.
வேறு யாராவது போடுகிறார்களா என்று பார்ப்போம்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நம் கருப்பட்டியின் வரிகள் அருமை

வடுவூர் குமார் said...

வாங்க ஜோதி பாரதி
அன்று இவரை விட விவேக்கைத்தான் ரசித்தார்கள்.
என்ன பண்ணுவது ரசிகர்களில் விருப்பம் மாறிக்கொண்டே வருகிறதே!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நேரம் இருந்தால் எனது வலைப்பூவிற்கு வந்து பாருங்கள்.
நன்றி!