Sunday, April 06, 2008

சதுரகிரி

சந்திரபுரியில் கோரக்க சித்தர்

போன வாரம் முழுவதும் இந்த புத்தகம் தான் படித்துக்கொண்டிருந்தேன்.பேரை பார்த்தாலே ஒரு மாதிரியா இருக்கே புரியுமோ புரியோதோ என்று தான் எடுத்துவந்தேன்.

இதை எழுதியவர் திரு கமலக்கண்ணன் என்று போட்டிருந்தது,சரி நம் பதிவர்களில் இவர் பெயர் கொண்டவர் ஒருவர் இருக்கிறாரே அவராக இருக்குமோ என்று நினைத்தேன்.முழுவதும் படித்த பிறகு தான் தெரிந்தது இவர் 79 வயதுக்காரர் என்று.

இந்த ஊர் "வத்திராய்பு" என்ற ஊருக்கு பக்கத்தில் இருக்கிறதாம்.நம்மில் சில பதிவர்கள் இந்தூரில் இருந்து வந்தவர்கள்.

இந்நூலில் ஒரு பகுதியில் வானில் பறப்பது எப்படி என்று சொல்லியிருப்பதை படிக்கும் போது கொஞ்ச நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் சித்தர் வானில் பறந்தார் என்ற வீடியோ நினைப்புக்கு வந்தது.அந்த வீடியோ பார்த்தபோது எனக்கும் சந்தேகமாகத்தான் இருந்தது,இப்படியெல்லாம் நடக்குமா? என்று.

கீழே உள்ள படத்தை பாருங்கள்.



அது மட்டுமா? மறைந்து போவது எப்படி இன்று கீழே பாருங்கள்..



இந்த நூலில் பல வகையான மருந்துகள் மற்றும் மூலிகைகள் என்று பழைய நூல்களில் இருந்து எடுத்துப்போட்டு அசத்தியிருக்கார்




முடிந்தால் படித்து பயன்பெறுங்கள்.

9 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நிறைய வாசிக்கிறீர்கள் திரு வடுவூர் குமார்!

அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

வடுவூர் குமார் said...

வாங்க ஜோதிபாரதி
பொழுது போகனுமே..எத்தனை நேரம் தான் கணினி முன்னே உட்கார்ந்திருப்பது??
படிச்சதில் ஏதோ விஷயம் இருக்கு என்பதை நான்கு பேருக்கு சொல்லிவைப்போமே என்ற எண்ணம் தான்.

துளசி கோபால் said...

//முடிந்தால் படித்து பயன்பெறுங்கள்//
உடனே இதைச் செய்து எடுத்துக்கிட்டு இங்கே வந்து சேருங்க.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்லேயே வரலாம்.

யார் கண்ணுக்கும் தெரியமாட்டீங்கதானெ...டிக்கெட் வேணாம்.

எங்க மாமா ஒருத்தர் இதை எல்லாம் நம்பி வீணாப் போனாரு.

வடுவூர் குமார் said...

என்னங்க துளசி,இப்படி குண்டை தூக்கி போடுகிறீர்கள்.இதெல்லாம் படிக்கத்தான் லாயக்கா!!
எதுக்கும் ரெண்டாம் சொக்கனை கேட்கணும். :-))

rajsteadfast said...

ஐயா, பயனுள்ள தகவல். அந்த புத்தகத்தின் பெயரும், கிடைக்கும் இடமும் எனது மென்முகவரிக்கு அனுப்புமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

rajsteadfast@gmail.com

வடுவூர் குமார் said...

rajsteadfast
I read this book in singapore library.If I come across anything I will forward to u.

Anonymous said...

ரொம்ப நல்ல பகிர்வு

வடுவூர் குமார் said...

நன்றி சதீஷ்குமார்.

வடுவூர் குமார் said...

நல்ல ஒரு பக்கத்துக்கு தொடுப்பு கொடுத்திருக்கிறீர்கள்,மிக்க நன்றி.மெதுவாக பார்க்கிறேன்.