சிங்கையில் இளைஞர்களை தமிழில் பேச அதுவும் பள்ளியில் படிக்கும் மாணவர்களை குறி வைத்து தெலோக் பிளங்கா சமூக நிலையம் ஏற்படுத்திய விழாவை கீழே காணுங்கள்.
நன்றி: வசந்தம் சென்ரல்.
என்ன? குழந்தைகள் பேசும் தமிழ்கூட அம்மாக்களால் பேசமுடியாதை சலனப்படத்தின் கடைசியில் காணலாம்.இவுங்க எப்படி குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கப் போறாங்க என்று நினைத்தால் சிறிது கஷ்டமாக இருக்கு.
6 comments:
தமிழ்நாட்டில் தான் தமிழ் இல்லை ஆனால் இங்கு தமிழ் வளர பாடுபடுகின்றனர்
வாங்க தென்றல்
இவர்கள் செய்வது நிஜமான முயற்சி.
இங்குள்ள பல இளைஞர்களால் தமிழ் பேச முடிவதில்லை என்பது என்னவோ நிதர்சனம்.
இளைஞர்கள் இரு மொழி தேவையில்லை என்று நினைக்கிறார்களோ என்னவோ!!
அரசாங்க மொழிகளில் ஒன்று என்பதாலும் இந்தியர்களில் அடையாளங்களில் இருப்பதாலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.சிங்கப்பூர் ஆரம்ப காலங்களில் இங்கு வந்து கஷ்டப்பட்டது தமிழர்கள் அவர்கள் மூலம் தான் தமிழ் இந்நிலையை அடையமுடிந்தது இங்கு.
இவர்கள் முயற்சி பாராட்ட வேண்டியது. தமிழ் கட்டாயம் இல்லாவிட்டாலும் தமிழ் குழந்தைகளிடம் பரவ வேண்டும் என்ற முயற்சி பாராட்டத்தக்கது.
வாங்க சின்ன அம்மிணி
நிச்சயமாக.அதுவும் வெளிநாட்டில் இதை செய்வது தமிழுக்கு பெருமை அளிக்கிறது.
இதற்கு முந்தைய சலனப்படத்தை பாருங்கள்,தமிழுக்காக விழாவே கொண்டாடுகிறார்கள்.
நீங்கள் சொல்வதும் சரிதான் ஆனால் இதே போல் ஒரு நிகழச்சி இந்தியாவிலும் நடத்த படுகிறது . அதன் பெயர் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு . இந்நிகழ்ச்சியில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்க தனியாக நடத்தப்பட்டது .அதில் அனைவரும் மிகவும் நன்றாக ஈடுபாட்டுடன் கலந்து கொண்டனர். நான் அந்த நிகழ்ச்சியை இந்த சைட் மூலம் பார்த்தேன்
indiansmallscreen
மிகவும் நன்றாக இருந்தது .
Thanks anony.
Post a Comment