Wednesday, March 19, 2008

ஆமைகள் கூட பறக்கமுடியும்

"Turtles Can Fly" -இப்படி ஒரு படம்,எல்லாமே உருதுவில் இருந்தும் பார்த்துமுடித்தேன்.இராக்கில் நடப்பது போல் உள்ள கதை.முழுக்க முழுக்க சிறுவர்களையே வைத்து அவர்களை செம வேலை வாங்கியிருக்கார்.சிறுவர்களும் நடித்திருக்கார்கள் என்பது தெரியாமல் அட்டகாசமாக செய்திருக்கார்கள்.

இதில் ஒரு சிறுமி அப்படியே "அஞ்சலியை" நம் கண் முன்னே கொண்டு வருகிறார்.

அவர் படம் கீழே.



ஆங்கில உரை நடை ஓடாததால் ஓரளவே புரிந்தது கதை.

இரண்டு கையையும் இழந்த ஒரு பையன்,ஒரு பெண் & இந்த குழந்தையை சுற்றியே பெரும் பாலன கதை ஓடுகிறது.



கதை நடக்கும் இடம் மலை சார்ந்த இராக் பிரதேசம் அதில் ஒரு காட்சி - மலை முழுக்க மனிதர்கள்.





படம் முழுக்க ஆயுத விற்பனை மற்றும் கன்னி வெடி நிகழ்வுகள் என்று போகிறது.



படம் பல நேரங்களில் மெதுவாக போவது போல் இருந்தாலும் சிறுவர்களின் நடிப்புக்காகவும் அவர்கள் வாழக்கையின் வலியை தெரிந்து கொள்வதற்காகவும் ஒரு முறை பார்க்கலாம்.

மேலும் சில படங்களை கீழே பாருங்கள்.



கீழே உள்ள பையனின் நடிப்பும் அருமையாக இருந்தது.



அவர்கள் வாழும் பகுதி- இரவு நேரத்தில்.



முடியும் போது அந்த குழந்தையை பாதுகாக்கும் பெண்ணின் செருப்பு...



இராக்கின் மேல் திணிக்கப்பட்ட போரினால் இவர்கள் நிலமை இப்படி ஆனதா? அல்லது சதாமினால் இவர்கள் இப்படி ஊருக்கு வெளியே தள்ளப்பட்டார்களா? என்பது சரியாக புரியவில்லை.

ஆனாலும் அவர்களின் வலி படத்தின் மூலம் நன்கு தெரிகிறது,வருத்தப்படுவதை தவிர வேறு வழி ஒன்றும் தெரியவில்லை.

4 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அழகாகச் செய்கிறீர்கள் திரு குமார்.
தொடரட்டும்!

அன்புடன்,
ஜோதிபாரதி.

வடுவூர் குமார் said...

நன்றி ஜோதி பாரதி.

திவாண்ணா said...

குமார், சினிமா படங்களை புரிஞ்சுக்க ஒரு சுலபமான வழி கொஞ்ச நாள் முன்ன் தெரிஞ்சது. விக்கிபீடியா போய் படத்து தலைப்பை தேடினா யாராவது அந்த கதையை போட்டு இருப்பாங்க.
இந்த படத்துக்கு இங்கே பாருங்க
http://en.wikipedia.org/wiki/Turtles_Can_Fly

வடுவூர் குமார் said...

அட! இப்படி ஒரு வழி இருக்கா?
மிக்க நன்றி,திவா.