முதல் வீட்டில் இருந்து தப்பித்தால் போதும் என்ற மனத்துடன் அடுத்த வீடு பார்க்க முகவர் கூப்பிட்டதும் மகிழ்சியாக போனேன்.
தனிவீடு என்று தான் பேர்-1 ரூம்,1 வரவேற்பரை & 1 கழிவரை அவ்வளவு தான்.மோசமான பொருட்கள்.
வாடகை 700 வெள்ளி.
இப்போது இருக்கும் இடத்தை காலி பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருந்ததால்.அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ள ஒத்துக்கொண்டேன்.அதோடு மட்டும்மல்லாமல் பையன் படிக்கும் பள்ளி பக்கத்தில் இருந்ததும் காரணம்.
1 மாத வாடகை,1 மாத முன்பணம் மற்றும் முகவருக்கு அரை மாத வாடகை சேர்த்து கொடுக்க வேண்டும்.
கொடுத்தேன்.
இதிலும் என்ன கொடுமை என்றால் இந்த வீட்டை ஒரு தமிழர் அரசாங்கத்திடம் இருந்து வெறும் 40 வெள்ளிக்கு வாங்கி எங்களுக்கு 700 வெள்ளிக்கு வாடகைக்கு விட்டார்.இது பிற்பாடு பக்கத்துவீட்டில் உள்ளவர் மூலம் எனக்கு தெரிந்தது.
அதற்கு தேவையான தண்டனையை அனுபவித்திருப்பார் என்று நினைக்கிறேன்.
இந்த புது வீட்டுக்கு வந்த பிறகு தான் இங்குள்ள பிரச்சனைகள் தெரிய வந்தது.தனிவீடு என்றாலும் அந்த கட்டிடத்தில் உள்ள பலர் வயதானவர்கள் இருந்தார்கள் போலும்.
துணியை துவைத்து வெளியில் காயப்போட்டிருந்தால் சில மணி நேரங்களில் அதில் சகலவிதமான குப்பைகள் சாப்பாட்டு மிச்சம் என்று விழுந்து கிடக்கும்.திரும்ப துவைக்க வேண்டும்.
காரணம் என்ன என்று பார்த்தால், வயதானவர்கள் குப்பை போடக்கூடிய அந்த மூடியை திறக்க குனியமுடியாததால் அப்படியே ஜன்னலுக்கு வெளியே வீசிவிடுகிறார்கள்.பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் எங்கள் துணி பாழாவது அவர்களுக்கு தெரியாது.
இப்படி நடப்பது தினசரி வழக்காகிவிட்டது.
இங்கு துணி காயவைப்பது ஒரு விதம்.
பெரும்பாலும் சமையல் அறைக்கு பக்கத்தில் உள்ள ஜன்னலில் மூங்கில் கம்பு சொருகி கிளிப் போட்டு காயவைக்கவேண்டும்.
படத்தை பார்க்கவும்
புதிதாக வரும் நம் ஆட்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் போகப்போக சரியாகிவிடும்.
இந்த வீட்டில் இருந்து தப்பிக்க வழி பார்க்கையில் பழைய வீட்டின் முதலாளி கூப்பிட்டு நலம் விஜாரித்துகொண்டிருந்தார்.
நமக்கு தான் நம்ம கஷ்டத்தை அடுத்தவர்களிடம் சொல்லாவிட்டால் தலைவலி வந்திடுமே!!
அவுங்க் சொன்ன பதிலில் மீண்டும் பூதம் கிளம்பியது.
அப்போது..
அடுத்தது இங்கே..
4 comments:
எழுதிக்கொள்வது: nagore ismail
குமார் சார், அந்த மாதிரி நீங்கள் தங்குவது ஹெச் டி பி க்கு தெரிந்தால் உங்களுக்கும் பிரச்சினை உண்டு, அடுத்து என்ன ஆச்சு? நாகூர் இஸ்மாயில்
22.27 2.11.2006
தப்பித்தவறி துணிகள் கீழே விழுந்துட்டா அவ்ளோதான் இல்லே?
நம்ம வீட்டுலே இந்த முறை இருந்தா ........... ஹை!!!!
தினமும் புதுத்துணிகள்தான்:-)))))
புது துணி வாங்க இப்படி ஒரு யோஜனையா?
இந்த மாதிரி யோஜனை மனதோடு வைத்துக்கொள்ளக்கூடாதா?எங்களையெல்லாம் பார்த்தால் பாவமாக தெரியவில்லை? :-))
ஆனால் அந்த மாதிரி துணிகள் அவ்வளவாக கீழே விழுவதில்லை.
சில சமயம் காற்று பலமாக அடித்தால் கம்போடு கீழே விழும்.
பெரிதாக யாருக்கும் அடிபடவில்லை.
நாகூர் இஸ்மாயில்,அப்போது நான் வந்து புதிது இந்த வீடு விஷயங்கள் அவ்வளவாக தெரியாது.நம்மூர் மாதிரி வீட்டில் இருந்து வந்தால் வீட்டுக்காரன் என்ற நினைப்பு மாதிரி.
பல மாதங்கள் கழித்து ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரன் "ஹை" சொல்லிவிட்டு- விஷத்தை கக்கினான்.
அவன் பிரச்சனை பக்கத்து வீட்டுக்கு யார் யாரோ வருகிறார்கள் அதனால் போட்டுக்கொடுத்துவிட்டான் அதுவும் நான் வெளியில் போனபிறகு.
பிரச்சனை வீடு யார் பேரில் இருக்கிறதோ அவர்களுக்கு தான்.கால அவகாசம் கொடுத்து காலி பண்ணச்சொல்லிவிடுவார்கள், அவ்வளவு தான்.
Post a Comment