கண்டோலா,இது உயரமான கட்டிடங்களில் மிகச்சிறிய வேலைகள் செய்வதற்கு உபயோகமானவை.அதனதன் Designக்கு தகுந்தபடி ட்கள் வேலைசெய்யலாம்.இரண்டு கம்பிகளில் மின்சார உதவியுடன் மேலே ஏறும் / இறங்கும்.ஒரு கம்பியில் தான் முழுபிடிப்பு இருக்கும் மற்றது பாதுகாப்புக்காக.ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் அல்லது ஒரளவுக்கும் மேல் விரைவாக இறங்கினால் இதில் உள்ள பாதுகாப்பு சாதனம் உந்தப்பட்டு அந்த இரண்டாவது கம்பியை அழுத்திக்கொண்டுவிடும்.பிறகு மனித உதவியுடம் மட்டுமே இறங்கமுடியும்.பாதிவழியில் மின்சாரம் தடைப்பட்டால் மனித உதவியுடன் மட்டுமே கீழே இறக்கமுடியும்.
கீழே உள்ள படம் இங்கு(சிங்கையில்) எடுக்கப்பட்டது.இது கொஞ்சம் பெரிய அளவில் உள்ளது.பயண்பாடு எல்லாம் ஒன்று தான்.
நாங்கள் மேட்டூரில் உபயோகப்படுத்தியதில் அதிகபட்சமாக 3 பேர் மட்டும் தான் போகமுடியும்.
ஒரு நாள் மதியம் சாப்பாட்டுக்கு பிறகு,வேலை ஆட்கள் இந்த கண்டோலா மூலம் மேலே போய்கொண்டிருந்தார்கள்.கடைசியில் நானும் மேலே போய் அவர்கள் செய்யும் வேலையை மேற்பார்வை செய்துகொண்டிருந்தேன்.
மணி முன்று இருக்கும்.தூரத்தில் மணற்புயல் போல காற்று அடித்துகொண்டிருந்தது.அப்போது ஒரு மின்னல் அடித்தது.சரி மழை வருவதற்கான அறிகுறி தெரிந்தது.சும்மாகவே ஆடும் அதுவும் மணற்காற்றுடன் மழையும் என்றால் கேட்கவேண்டாம்.எனவே கீழே இறங்கிவிடுவது என்று முடிவுசெய்து நாங்கள் 3பேர் மட்டும் கண்டோலாவில் இறங்க ஆரம்பித்தோம்.
மேலும் சிலர் ஏணி மூலம் மூலம் இறங்க ஆரம்பித்தனர்.
220 மீட்டர் உயரத்தில் இருந்து இறங்க ஆரம்பித்து 200..190..187
"பளிச்!!"-ஒரு மின்னல்.
மின்சாரத்தடை.
எங்க கண்டோலா நின்றுவிட்டது.இன்னும் 2 மீட்டர் இறங்கினால் 185 மீட்டரில் ஒரு பிளாட்பாரம் இருக்கு அங்கு நின்றுகொள்ளலாம்.
அதற்குள் காற்றும் மழையும் சேர்ந்துகொள்ள அந்த உயரத்தில் ஊஞ்சல் ஆடினோம்.
மின்தடை ஏற்படும் நேரத்தில் கண்டோலாவை இறக்க உபயோகப்படுத்தும் சாவியை காணவில்லை மற்றும் ஏதோ ஒரு ஆணி கிடைத்தால் போதும் அதுவும் கிடைக்காமல்,சிமினிக்கு வெளியே ஆடிக்கொண்டிருந்தோம்.
கொஞ்சம் மழையும் காற்றும் நின்ற
பிறகு,ஏணி வழி இறங்கிக்கொண்டிருந்த தொழிலாள நண்பர்கள் வந்து ஒரு ஆணியை கொடுத்ததனர்.
அதன் வழி கொஞ்சம் கொஞ்சமாக கீழ் இறக்கி 185 மீட்டரில் உள்ள பிளாட்பாரத்தில் இறங்கி கீழே வந்தோம்.
இனி சிமினி உள்ளே போவாம்.
9 comments:
ரொம்ப அழகாச் சொல்லி இருக்கீங்க. ஆனா என் மனசுல தான் குற்ற உணர்வு வந்திரிச்சு. உக்காந்து வேலை பார்க்கும் எங்களுக்கு, அபாய அளவுகள் குறைவு. ஆனால் அதற்கே மின்சாரத் தடையின் போது generator ஏற்பாடு செய்கிறார்கள்.
இப்படி அபாய அளவுகள் அதிகமாக உள்ள ஒரு வேலையில், மின்சாரத் தடையின் போது மீண்டு வர, ஒரு பாதுகாப்பான மாற்று முறை இல்லையா? இல்லை லாப நோக்குக்காக ஏற்பாடு செய்யாமல் இருக்கிறார்களா?
இது நடந்தது எல்லாம் 1988 வாக்கில்.நடப்பது பவர் ஸ்டேசன் உள்ளே.மின்சாரம் தர வேண்டியது TNEB யின் கடமை.அதனால் எங்கள் கம்பெனியில் ஜெனரேட்டர் வைக்கவில்லை.
முதல் முறை வந்து பின்னூட்டம் போட்டதற்கு நன்றி
அய்யோ... பயமா இருந்துருக்குமே.
ஆமாம் இந்த கண்டோலா தான் கோண்டோலாவா?
கேபிள் கார் மாதிரி கூண்டு இருக்கே அது.
அங்கே செந்தோசாவுலே இருக்கேங்க.
அதெ போல இங்கே நம்மூர்லேயும் மலை மேலே போகப் போட்டுருக்காங்க.
வாங்க துளசி.
அது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இது மேலிருந்து கீழ் அல்லது கீழிருந்து மேலே போக.
சும்மா,பயத்துல அந்த கன்டோலாவையே புடிச்சுகிட்டு அங்கேயும் இங்கேயும் போய்ட்டு வந்துகிட்டு இருந்தோம்.
இந்த மாதிரி நிகழ்வுகள் தான் இன்னும் வரப்போகிற கஷ்டங்களுக்கு பயிற்சியாக இருந்தது
எழுதிக்கொள்வது: மா சிவகுமார்
கேட்கும் போது குலை நடுங்குகிறது. நீங்கள் அந்த நிலையில் நடக்க வேண்டியதை மட்டுமே சிந்தித்துப் பயம் இல்லாமல் இருந்தீர்களா? அல்லது பயம் ஆட்டி வைத்ததா :-)
அன்புடன்,
18.8 29.9.2006
வாங்க சிவகுமார்.
அந்த சமயத்தில் பயம் இருந்தாலும் அதைவிட வேறு முக்கியமான பணி எங்கள் மூவருக்கும் இருந்தது.
காற்று அடிக்கும் போது சிமினியை விட்டு விலகி போகும் பிளாட்பாரம் திரும்ப வரும் போது அது சிமினி கான்கிரீட் மீது மோதாமல் இருக்க கையை இருவர் வைத்து தாங்கிக்கொள்ளவேண்டும்.ஒருவர் அந்த மோட்டாரில் உள்ள மனித செயல்பாட்டை உபயோகிக்க முயற்சி எடுத்துக்கொண்டிருந்தார்.
இதாவது ஒரு சின்ன பிளாட்பாரம் உள்ளே இருக்கோம் அதைவிட மோசமானது, வரும் பதிவுகளில் வரும்.
கண்டோலாவைச் சொல்லிக்
கதிகலஙக வைத்தவரே!
நல்வாத்தித் தொழில்போதும்
நான்வேண்டேன் கட்டுமானத்துறை!
வாத்தியார் சார்
படிக்கும் போது உங்களை பார்த்து பயந்தோம்!! இப்போது நாங்கள் செய்யும் வேலை பார்த்து நீங்கள் பயப்படுவது ஞாயமா?
வருகைக்கு நன்றி
Post a Comment