நேற்று சாயங்காலம் 5.20க்கு ஒரு அழைப்பு தொலைபேசியில்.பேசியவர் வலைப்பூக்கள் மூலம் நேரில் பார்க்காத நண்பர்.இன்று நாம் சந்திக்கலாமா? என்றார்."வேலை எப்போது முடியும்?"
"இன்னும் 10 நிமிடங்களில்"
"சரி நாம் எங்கு எப்போது சந்திக்கலாம்" என்றார்.
அவர் ஊருக்கு புதிது என்பதாலும் நான் வேலை செய்யும் இடத்துக்கு பக்கத்தில் அவர் தங்கியிருந்ததாலும்,6.20 துக்கு அவரது பிளாக்கின்(Block) கீழ்தளத்தில் பார்க்கிறேன் என்று சொல்லி வைத்தேன்.
தொலைபேசி வைத்தவுடன் ஒரு வண்டி ரயில் நிலையத்துக்கு போக தயாராக இருப்பதாக வண்டிஓட்டுனர் சொன்னவுடன் ஒரு 5 நிமிடம் முன்பே கிளம்பிவிட்டேன்.
சோ சு காங் (இது ஒரு இடத்தின் பேர்) வந்து ரயில் பிடித்து ஜுரோங் யீஸ்ட் வந்தபோது மணி 5.50.அப்படியே நேராக NTUC என்ற பேரங்காடிக்கு போய்முதன் முதலில் சந்திக்கும் நண்பர்க்கு மரியாதைக்காக சிலவற்றை வாங்கிக்கொண்டு அவர் இருக்கும் பிளாக் போனபோது சரியாக 6.10.தொலைபேசி விபரத்தை சொன்ன 5 நிமிடங்களில் கீழே வந்து, L வடிவ ஒரு பென்ஜில் உட்கார்த்து பல விஷயங்களை பற்றி பேசினோம்.
தொகுத்து சொல்வதானால் "தமிழ்மணம்" பற்றி அதில் வரும் எழுத்தாளர்களை பற்றி பேசினோம்.பல நல்ல பழைய எழுத்தாளர்கள் பதிவு போடுவதில்லை என்ற மனக்குறையையும் சொன்னார்.
பலவற்றை பேசியபிறகு அவர் தங்கியிருக்கும் வீட்டுக்கு வந்து தேனீர் அருந்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்தார்.
அவர் தங்கியிருந்த வீட்டுக்காரரையும் தன் குடும்பத்தையும் அறிமுகம் செய்தபின்பு,டீ வேண்டுமா காபி சாப்பிடலாமா என்று அவரது துணைவியார் கேட்டார்கள்.டீ போதும் அதுவும் அரை கப் போதும் என்றேன்.
அதற்குள் ஊரில் இருந்து வாங்கி வந்த சோன் பப்டி வந்தது.சீட்டுக்கு பக்கத்தில் வேறு வைத்துவிட்டார்கள்.கையும் நாக்கும் ஒரு மாதிரியாகி விட அதே சமயம் "சக்கரை பண்டத்தை " கட்டுப்படுத்து என்று மூளை கட்டளையிட..
சோன் பப்டி பாதி எடுத்துக்கொள்ளவா? என்றேன்.
பரவாயில்லை,முழுவது எடுத்துங்க என்றார்.
இங்கும் பல விஷயங்களை பேசிகொண்டிருந்தோம்.அவற்றில் சில
சிங்கப்பூரில் இலக்கிய நிகழ்சிகள்
சிங்கப்பூரில் தமிழ்
தமிழ் வானொலி..
டீ வந்தது.வித்தியாசமான சுவை.ஏண்டா! அரைகப் சொன்னோம் என்று என்னை நானே நொந்துகொண்டேன்.
அவருக்கும் பல நிகழ்சி நிரல்கள் இருந்ததால் விடைபெரும் நேரமும் வந்தது.
மாலை 7.05 க்கு விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்கு வரும் போது மணி 8.
அடாடா அந்த நண்பர் பெயரை சொல்ல மறந்துவிட்டேன்.
அது நம்ம மூத்த வலைபதிவாளர்
"சல்தா ஹை" புகழ் திரு ஆசாத்.
2 comments:
முதல் வரியிலேயே ஊகிச்சுட்டேன்.
ஆஸாத் அருமையானவர். எனக்கும் மரத்தடி காலப் பழக்கம்.
கானா பாட்டு எக்ஸ்பர்ட்.
கானா பாட்டா??
தெரியாம போச்சே!!!
திண்னை & மரத்தடி அனுபவங்களையும் சொன்னார்.சுமார் 1 மணி நேரம் போனது தெரியவில்லை.
Post a Comment