Thursday, September 21, 2006

"பட்டியல்"

போன பதிவில் ஒரு நண்பனின் சோகக்கதையோடு முடிந்தது.

இனி வருபவற்றை பார்ப்போம்.

மேட்டூர்,எங்கள் வீட்டில் மொத்தம் 8 பேர் தங்கியிருந்தோம்.

ஹாலில் நான்,பக்கத்து அறையில் பத்மனாபன்,ராகவன்.

பத்மனாபன் திருச்சிக்காரர்.மிகவும் ஜோவியலான பேர்வழி.அவர் Shiftயில் இருந்தால் வேலை நடப்பதே தெரியாது.ஏதாவது அரட்டை செய்துகொண்டிருப்பார்.வாழ்கையை சுலபமாக வாழக்கற்றுக்கொண்டுவிட்டார்.
கொஞ்சம் பருமன் -அதுவும் உயரம் கொஞ்சம் கம்மி என்பதால் பருமனாக தெரியும்.
இப்போது டெல்லியில் ஏதோ ஒரு கம்பெனியில் இருக்கிறார்.எங்கெங்கோ தேடி கண்டுபிடித்து,3 வருடங்களுக்கு முன்பு கொடுத்த mail க்கு இன்னும் பதில் போடமுடியாத அளவுக்கு பிசியாக இருக்கிறார்.

மேட்டூரில் வேலை பார்க்கும் போது அந்த Site யில் பலர் மதில் மேல் நின்றுகொண்டிருந்தோம்.அதான்!!பலருக்கு கல்யாண வயது.

அதில் முதல் -பத்மனாபன்.

நிச்சயம் ஆகி சுமார் 8 மாதங்கள் கழித்து கல்யாணம்.
சில சமயம் புகைப்படத்துடன் கடிதம் வரும்.அது அவருடைய கனாக்காலமாக இருந்தது.ஜீப்பில் போதும் வரும் போதும் கிண்டலும் கேலியாக இருந்தது.

கல்யாணம் முடிந்து வந்தவுடன் மத்தியான சாப்பாடு 5 அடுக்கு கேரியரில் வரும்.சாப்பாடு சும்மா அட்டகாசமாக இருக்கும்.அவர் மனைவி ஒரு அருமையான Cook.

வழக்கம் போல் கல்யாணம் முடிந்தவுடன் வரும் கதைகள்/நிஜ சம்பவங்கள் இவரிடம் இருந்தும் வந்தது.

அதில் பதியக்கூடியது இதுவும் ஒன்று

"என்ன பத்து(செல்ல பெயர்)?முதலிரவு எல்லாம் எப்படி?"-சக நண்பர் கேட்க

"அத ஏண்டா கேட்கிறீங்க?"

"ஏதோ கொஞ்சம் நேரம் பேசிய பிறகு,என் மனைவி கேட்டாள்"

"நமக்கு குழந்த பிறக்கும் சமயத்தில் நான் செத்துப்போய்டா என்ன செய்வீங்க?"

எனக்கு பயங்கர கோபம்-இதைப்பற்றி பேச இதுவா நேரம் என்ற கோபத்தில்

"பாடை கட்டுவேன்" என்று கிண்டலாக சொல்லிவிட்டேன் என்றார்.

முதலிரவு சமயத்தில் இப்படி ஒரு சம்பாஷனை நடந்தால் எப்படியிருந்திருக்கும் என நினைக்கும் நேரத்தில் இதை அப்படியே light க எடுத்துக்கொண்டு கிண்டலாக பதில் சொன்ன நண்பனை மறக்காமல் இருக்க முடியவில்லை.

அடுத்து விழுந்தது-ராகவன்

இவருக்கு நாங்கள் வைத்திருக்கும் செல்லப்பெயர் "குங்குமப்பொட்டு"
இவர் கல்யாணம் நிச்சயமாகி அந்த நாளுக்கு காத்திருக்கும் நேரத்தில்,வருங்கால மனைவியிடம் இருந்து வரும் கடிதங்களில் தவறாமல் ஏதாவது கோயில் குங்குமம் இருக்கும்.

அவ்வளவு பக்தி-வருங்கால கணவனிடம்!!

நான் என்னென்னவோ எழுதுகிறேன்,எனக்கு குங்குமம் தான் வருகிறது.நான் கேட்பதற்கு பதில் வரமாட்டேன் என்கிறது என்று புலம்பிக்கொண்டிருப்பான்.

இப்போது சென்னையில் தனி கட்டுமானத்துறை கம்பெனி நடத்தி வருகிறான்.இவனும் கடிதம் எழுதுவது mail கொடுப்பது என்பதில் எப்போதும் சுணக்கம் தான்.

ஏண்டா பதில் போடவில்லை என்றால்?

பத்து வருடத்துக்கு முன்பு போட்ட கடிதத்தை காண்பித்து
இது அப்படியே பையில் உள்ளது.தினமும் பதில் போடத்தான் நினைக்கிறேன்.முடியவில்லை என்பான்.

பதில் போடாததால் வெறுப்பு இல்லை,அது அவனுடைய குணம் என்று தெளிந்ததால் எதிர்பார்பதை குறைத்துக்கொண்டுள்ளேன்.

அடுத்த Jump

நான் தான்.:-))

6 comments:

துளசி கோபால் said...

அடுத்து நீங்களா?

ஜோர் தான்!

சீக்கிரம் சொல்லுங்க.

( உங்க முதலிரவுலே என்ன பேசுனீங்கன்னு!)

மக்கள்ஸ் காத்திருக்கோம்லெ:-))))

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
முதலிரவு..அதைப்பற்றி பாலகுமாரன் ஒரு கதையில் அருமையாக எழுதியிருந்தார்.அது அப்படியே எனக்கு பொருந்தியது.
ஆனா பாருங்க,எனக்கு அவ்வளவாக பேச வராது!!
:-))

நாமக்கல் சிபி said...

நாங்க எல்லாம் சின்ன பசங்க... இதையெல்லாம் படிக்கலாமா??

வடுவூர் குமார் said...

வெ..பயல்
படிங்க!! தேவைப்படும் நேரத்தில் அவசியப்பட்டால் உபயோகிச்சுங்க.
நாங்க வளர்ந்த காலங்களில் இந்த மாதிரி எதுவுமே புட்டு புட்டு வைக்கலியே??
வருகைக்கு நன்றி.

நாமக்கல் சிபி said...

வடுவூர் குமார் said...
//வெ..பயல்
படிங்க!! தேவைப்படும் நேரத்தில் அவசியப்பட்டால் உபயோகிச்சுங்க.
நாங்க வளர்ந்த காலங்களில் இந்த மாதிரி எதுவுமே புட்டு புட்டு வைக்கலியே??
வருகைக்கு நன்றி.
//
அப்ப சரி...
எதுக்கும் புக்மார்க் பண்ணி வெச்சிக்கறேன்... பிற்காலத்தில் தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ளலாம் ;)

வடுவூர் குமார் said...

வெ..பயல் ஜாக்கிரதை!!
உங்கள் வருங்கால அம்மினி கூட மார்க் பண்ணிவைச்சிர போறாங்க.
:-))