Friday, September 22, 2006

ரெடிமேட் ஆர்கிடெக்ட்

நேற்று ஒரு நண்பனிடம் இருந்து வந்த இந்த மெயிலில் வந்த படத்தை பாருங்கள்.

Photobucket - Video and Image Hosting


நாம் கேள்விப்பட்டவரையில் முன்னமே தயாரித்து உபயோகிப்பதற்காக தயார் நிலையில் உள்ள பொருட்கள் சந்தையில் மிக மிக அதிகம்.

அந்த வகையில்..

வீடு கட்டி தரும் நிறுவனங்கள் பெரும்பாலும் அதன் வரைப்படத்தை 2D அல்லது கணினியில் போட்டு முடிந்தவரை 3Dயில் காண்பிப்பார்கள்.
வீட்டுக்கு வந்தவுடன் அந்த நினைப்பு சுற்றி சுற்றி ஓடும்.

அறைக்கு இந்த நிறம் போட்டா நல்லா இருக்குமே,ஜன்னலை இப்படி மாத்தினா சூப்பராக இருக்குமே என்ற எண்ணங்கள் ஓடினாலும் அதை செயல் படுத்த முடியாத நிலமைதான் மிஞ்சும்.ஏனென்றால் உங்கள் கையில் எதுவும் இல்லையே!!

இந்த குறையை போக்க வந்த மென்பொருள் தான் இது.

மேலும் தெரிந்துகொள்ள இங்கே இருக்கு விஷயம்.

இதை கணினியில் நிறுவியபிறகு உங்கள் தேவைக்கு ஏற்ப நில அளவை தேர்ந்தெடுத்து உங்கள் வீட்டை நீங்களே கட்டலாம் கணினியில்.தேவையான வீட்டின் அளவு தேர்தெடுத்த பிறகு அதற்கு வேண்டிய கட்டுமான சாமான்கள் எவ்வளவு என்று தெரிந்துகொள்ளலாம்.

வாஸ்து நம்பிக்கை உள்ளவரா?அதற்கும் இதில் வழி உள்ளது.

மொத்ததில் ஒரு வீடு வாங்கப்போகும் முன்பு இதை வாங்கி உபயோகித்தால் உங்கள் கனவு இல்லம் உங்கள் கணினியில்.

இதை எங்கு வாங்குவது?

designschakkara/at/hotmail.com-மேல் விபரங்களுக்கு இங்கு கேட்கவும்.இவர்கள் அலுவலகம் சென்னையில் உள்ளது.

மேலே போட்டிருந்த படம் இவர்கள் கோவையில் போன வாரம் நடந்த கண்காட்சியில் போது Hinduவில் எழுதியிருந்தார்கள்.

முயற்சி செய்தவர்கள் போடுங்கள் உங்கள் அனுபவங்களை.

8 comments:

துளசி கோபால் said...

நானும் இதைப் பயன்படுத்தியவர்களின் அனுபவங்களை எதிர்பார்க்கின்றேன்.

Anonymous said...

எழுதிக்கொள்வது: SP.VR.SUBBIAH

அப்படியே, எகிறிக் கொண்டிருக்கும் கட்டுமானப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவதற்கும்
யாராவது மென்பொருள் கண்டுபிடித்தால் உயிர்கள் அவரை வணங்கும்!

9.44 22.9.2006

வடுவூர் குமார் said...

வாத்தியார் சார்,அதுக்கு மென்பொருள் தேவையில்லை,வன்பொருள் தான் மனது வைக்கவேண்டும்.
கடல் மணலை உபயோகப்படுத்த முடிந்தால் கொஞ்சம் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.

வடுவூர் குமார் said...

துளசி,போனதடவை ஊருக்கு போன போது ஒருதடவை உபயோகித்திருக்கிறேன்.மிக எளிமையான முகப்பு.
இன்னும் விபரம் தேவையென்றால் தனி மெயிலில் கேட்டு அனுப்புகிறேன்.

துளசி கோபால் said...

குமார்,

உடனே வேணுமுன்னு அவசரமில்லை.
இந்த வீடு கட்டி முடிச்சு ஒன்னரை வருசம்தான் ஆச்சு. உடனே இன்னொண்ணை ஆரம்பிக்க அவகாசம் வேணும்ப்பா.

பதிவு ரெடியா இருக்கு. கொஞ்சநாள் கழிச்சுப் போடறேன் உஷார்:-)

வடுவூர் குமார் said...

துளசி-தேவைபடும்போது இங்கு பார்க்கவும்.
www.bhaarathcadtech.com.

வீடு??

பயமுடுத்தாதீங்க்..
ஜொசப் அவர்கள் எழுதிய வீட்டு விவகாரங்களே நினைவை விட்டு அகலவில்லை.
சரி அதை மறக்கவாது சீக்கிரமாக போடுங்க!!

ramachandranusha(உஷா) said...

குமார் சார், "இங்கே" என்றுப் போட்டுள்ளீர்களே, கிளிக்கினால் பக்கம் திறக்கவில்லை. நேரமிருக்கும்பொழுது எனக்கு அனுப்புங்களேன்.

வடுவூர் குமார் said...

ராமச்சந்திரன் உஷா
இங்கு போய் பாருங்கள்
www.bhaarathcadtech.com.
Bye