Saturday, March 28, 2009

வெப் கேமிரா உள்ளே என்ன இருக்கும்??

நேற்று என்ன செய்யவேண்டும் என்பதை வியாழன் அன்றே முடிவு செய்திருந்தேன்.கடந்த சில நாட்களாகவே என்னுடைய வீடியோ கான்பரன்ஸில் என்னிடம் இருந்து போகும் வார்த்தைகள் மிக கால தாமதமாகவோ அல்லது விட்டு விட்டோ போய்கொண்டிருந்தது.ஒரு நாள் மட்டும் இத்தொல்லை என்றால் இணைய வேகத்தை காரணம் காட்டலாம் பல நாட்கள் என்பதால் கெமிராவை பிரித்து அதில் உள் உள்ள மைக்கில் ஏதாவது இணைப்பு விட்டிருக்குமா? என்று சோதிக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன்.

காலை வேளை குழந்தைகள் தொந்தரவு இருக்காது என்பதால் பல் தேய்துவிட்டு கேமிராவை எடுத்துக்கொண்டு பால்கனி பக்கம் போனேன்.கி.பி.2002யில் 220 சிங்கை வெள்ளி கொடுத்து வாங்கிய வெப்/டிசிட்டல் கேமிரா அது அதற்குள் அதன் பிளாஸ்டிக் பாகங்கள் தன்னாலேயே உடைந்து விழ ஆரம்பித்திருந்தது.இதில் இருக்கும் கேமிராவும் மைக்கும் மிகச்சிறப்பாக இருக்கும் என்பதால் அதை தூக்கிப்போட மனது வராமல் அதிலிருக்கும் சின்னச்சின்ன குறைகளை களைந்து அதை வெறும் வெப் கேமிராகவாக மட்டும் உபயோகித்து வருகிறேன்.

பல ஸ்குரூக்களை இணைக்கும் பிளாஸ்டிக்குகள் உடைந்து விட்டிருந்தன அதனால் முழு கேமிராவும் 50% ஸ்குரூவில் மட்டுமே நின்றது.

முதலில் முகப்பை பிரித்த போது இப்படி....



பின் பக்கம் கொஞ்சம் கிட்டத்தில் பார்த்தால்....





அந்த சில்லுவின் மேல் உள்ள விபரங்கள் மிக முக்கியமானவை.உங்கள் கேமிரா லினக்ஸில் வேலை செய்யவில்லை என்றால் இந்த விபரங்களை அதற்கு தேவையான விபரங்களை கொண்டு அறியலாம்.இன்னும் இந்த கேமிராவை லினக்ஸில் என்னால் உபயோகப்படுத்த முடியவில்லை என்பது சோகமான விஷயம்.

கேமிராவிம் முன் பின் கழற்றிய பிறகு



எல்லாம் கழற்றிய பிறகு அதன் பணி விபரங்கள் ஓரளவு புரிந்தது.தேவையான அனைத்து வயர்களும் அதன் நிலையில் சரியாக இருந்தது இதிலிருந்து என்னுடைய குரல் உடைந்து அந்த பக்கத்துக்கு போன காரணம் இணைய இணைப்பு/வேகம் என்பது புரிந்தது.

எல்லா வற்றையும் திரும்ப இணைத்து இன்று பேசியபோது அனைத்தும் ஓரளவு சரியாக இருந்தது.

17 comments:

கணினி தேசம் said...

நல்ல பிரிச்சி மேய்ந்துட்டீங்கனு சொல்லுங்க. :))

திவாண்ணா said...

//தேவையான அனைத்து வயர்களும் அதன் நிலையில் சரியாக இருந்தது ....
எல்லா வற்றையும் திரும்ப இணைத்து இன்று பேசியபோது அனைத்தும் ஓரளவு சரியாக இருந்தது.//

:-)))))))))
எப்படிப்பா அது?

வடுவூர் குமார் said...

வாங்க கணினிதேசம்
கையில் ஸ்குரூ டிரைவர் கிடைத்தால் போறாது?மேய்சிட வேண்டியது தான்.

வடுவூர் குமார் said...

திவா,அது எனக்கும் தெரியாத விஷயம். :-)
ஏதோ இன்னிக்கு வேலை செய்யுது நாளை செய்யுமா? என்று தெரியாது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நீங்க கட்டுமானத்துறை வல்லுனர்னுதான் எனக்குத் தெரியும்.
இப்ப எங்க வேலைக்கே உலை வைக்கிறீங்க!
எங்களுக்கெல்லாம் வேலை போனா நீங்க தான் பொறுப்பு! :)

வெங்கட்ராமன் said...

நீங்க என்ன என்ன பண்றீங்கன்னு குறிப்பு எடுத்து வச்சுகுங்க. பின்னாடி வெப் கேமிரா ரிப்பேர் செய்வது எப்படின்னு பதிவு போடலாம்.

என்ன சொல்றீங்க. . . .

வடுவூர் குமார் said...

வாங்க ஜோதிபாரதி
இது பகுதிவேலை தானே அதனால் என்னை நம்பி யாரும் எதையும் தரமாட்டார்கள்.கவலையே வேண்டாம் இதெல்லாம் என்னுடைய ஆர்வக்கோளாரே. :-)
இன்னும் சிம் லிம் டவர் போன கதையெல்லாம் கேட்டா என்னை அடிக்கவே வந்துவிடுவீர்கள்.
இந்த ஆர்வம் இன்னும் பெருக்கெடுத்து ஓடியது திரு ராமநாதன் எழுதிய சில்லின் கதையின் போது.
புதியவர்களுகாக சுட்டி இங்கே.

வடுவூர் குமார் said...

வாங்க வெங்கட்ராமன்
ரொம்ப நாள் கழித்து வந்திருக்கீங்க.நலமா?
நிச்சயமாக அந்த மாதிரி குறிப்புகள் உதவியாக இருக்கும்.

நாகை சிவா said...

:)

இந்த Electronics பொருட்களே இப்படி தான். சும்மா திறந்து மூடினா நல்லா வேலை செய்யும் :)

வடுவூர் குமார் said...

ஆமாங்க சிவா
இதே மாதிரி பல பொருட்களில் எனக்கும் ஏற்பட்டுள்ளது.

Tech Shankar said...

உங்கள் தளத்தில் இருக்கும் தேன்கூடு சம்பந்தமான ஜாவாஸ்க்ரிப்ட் கோடிங்கை நீக்கிவிடவும்.

நான் ஸ்டேட்டஸ் பாரில் பார்க்கிறேன். தேன்கூடு தளத்தைப் பிங் செய்கிறது.

அந்தத் தளம் நன்றாக இருந்தது. இப்போது இல்லை. உங்கள் ப்ளாக்கின் லோடிங்க் வேகத்தை அந்த கோடிங் குறைக்கிறதாக எண்ணுகிறேன்.

நன்றி
த.நெ.

வடுவூர் குமார் said...

வாங்க தமிழ்நெஞ்சம்
நானும் சில தடவை இதை பார்த்திருகேன் ஆனால் கோடில் தேன்கூடு இல்லை என்றே சொல்கிறது,எங்கு ஒளிந்துகொண்டிருக்கோ! மறுபடியும் தேடனும்.
மிக்க நன்றி.

எம்.எம்.அப்துல்லா said...

குமார் அண்ணே எனக்கு உங்களுக்கு தெரிந்ததில் பாதி தெரியும். அதாவது கழட்ட மட்டும் :)

வடுவூர் குமார் said...

வாங்க அப்துல்லா
பாதி கிணறு தாண்டிடீங்கன்னு சொல்றீங்க.

Unknown said...

ஆமாங்கோ தம்பி.....!!! என்கூட்டுலையும் வெப் கேமுரா நல்லா எடுக்குலீனா ... நானு கொஞ்சம் ஆயில் சர்வீஸ் பண்ணுவேனுங்கோ....... !!! அப்பறம் பாருங்கோ தம்பி..... எல்லார்ர்த்து மூஞ்சியும் பளீர்னு தெரியும்.....!!!!

Sesha&Co. said...

Nalla meyureenga maaps..
Sesha & Co.

வடுவூர் குமார் said...

அப்பாடி ஒரு வழியாக கமெண்ட் போட முடிந்ததா?
நன்றி.