போன வெள்ளிக்கு முதல் வெள்ளி இங்கு போகனும் என்று தவறுதலான பேருந்தில் ஏறியது போய் வந்த பிறகு தான் புரிந்தது ஆதாவது C10 பதிலாக 10 ம் எண் பேருந்தை எடுத்திருந்தேன்.
இம்முறை அதன் வழித்தடத்தை நன்றாக ஞாபகம் வைத்து யோசித்த போது நான் இருக்கும் இடத்தில் இருந்து அந்த பேருந்து பிடிக்க இரண்டு பேருந்து மாறவேண்டி வந்தது.எங்கு ஏறி எங்கு இறங்கினாலும் 2 திராம் தானே என்பதால் வீட்டில் இருந்து பேருந்து பிடித்து சிட்டி சென்டர் வந்தேன்.மதிய வேலை என்பதால் வெய்யில் கொஞ்சம் கடுமையாக இருந்தது.வீட்டை விட்டு வெளியேறும் போதே தலைக்கு தொப்பியும் கண்ணுக்கு கண்ணாடியும் எடுத்து வந்ததால் பிரச்சனையில்லாமல் இருந்தது.இந்த பேருந்து நிறுத்ததில் நிழற்குடை இன்னும் பொருத்தவில்லை அல்லது இடம் இல்லையோ என்னவோ?
இரு வழி பேருந்தும் ஒரே இடத்தில் வருவதால் பேருந்து ஓட்டத்துக்கு தகுந்த மாதிரி பார்த்து நிறுத்த கையை ஆட்டவேண்டும் இல்லாவிட்டால் மற்றொரு பேருந்துக்காக நிற்கவேண்டி வரும்.இம்முறை அதிக நேரம் காக்க வைக்காமல் பேருந்து வந்தது.என்னையும் சேர்த்து மொத்தமாக 4 பேர் தான் இருந்தோம்.புதிய சேவை போலும் இன்னும் பலருக்கு தெரியவில்லையோ என்னவோ!
சுமார் 40 நிமிடங்கள் பயணம்,இடையில் மேலும் 3 பேர் இறங்கிட கடைசி நிறுத்தம் வரை நான் ஒரே ஆள் தனியாக பயணம் செய்தேன்.ஜுமைராவில் பல வீடுகள் தனிவீடு என்ற மாதிரியில் இருக்கிறது, ஒரு பக்கம் கடற்கரை அதை சென்றடைய ஒரு சில சாலைகளே திறந்துவைக்கப்பட்டுள்ளது.இங்கு தான் துபாய் மிருகக்காட்சியும் இருக்கிறது.மிகவும் சிறியது என்று கேள்விப்பட்டிருக்கேன்,போய் பார்க்கவில்லை.
கடைசி நிறுத்தத்துக்கு பக்கத்திலேயே இருக்கும் இந்த பூங்காவுக்கு நுழைவுக்கட்டணம் 5 திராம் செலுத்த வேண்டும்.
சிங்கையில் இந்த மாதிரி அறிவுப்பு பலகைகள் இருக்கும் என்று பார்த்தால் இங்கும் செய்யக்கூடாதையெல்லாம் பட்டியல் போட்டிருக்கிறார்கள்.மிக முக்கியமாக கேமிராவில் படம் பிடிக்கக்கூடாதாம்! என்ன கொடுமை பாருங்க.குடும்பத்துடன்/நண்பர்களுடன் ஜாலியாக போகும் கடற்கரையில் புகைப்படம் எடுக்கக்கூடாது என்பது எனக்கு அபத்தமாகப்பட்டது.
நுழைவுப்பகுதியில் Amphitheature மாதிரி அமைப்புடன் பல்வெளி பரப்பி அசத்தியிருக்கிறார்கள்.அதை கடந்தவுடன் தான் புதிய உலகம் திறக்கிறது.Bay Watch பார்த்திருக்கிறீர்களா? அதே அமைப்புடன் அலையில்லாத கடலுடன் கடற்கரை.கூச்சமில்லாத பிகினி உடையுடன் பெண்கள்.இங்குள்ள கடலில் இயற்கையான அலை என்பதே இல்லை அவ்வப்போது போகும் மோட்டர் போட் மற்றும் சிறிய கலங்கள் மூலம் அலை எழும்புகிறது.
சரி,படம் பிடிக்கக்கூடாது என்று போட்டிருக்கிறார்களே வீணான வம்பில் எதுக்கு மாட்டிக்கனும் என்று கேமிராவை தூக்கி கால்சராய்குள் போட்டு கடல் பக்கம் நடந்தேன்.கண்காணிப்பு கோபுரத்தில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கடற்கரையை கண்கானித்துக்கொண்டிருந்தார்கள்.நான் அவ்வழியாக போவதை பார்த்து என்னிடம் சிறிய கால்சராய் தான் போட்டு போகனும் என்று அப்பெண் தன் கால்சராயை காண்பித்தார்.இதென்னடா புது கதையாக இருக்கு! என்ற எண்ணத்துடன் அவருக்கு தலையாட்டிவிட்டு கடலுக்கு எதிர்புறத்தில் உட்கார இருக்கும் இடத்தில் உட்கார்ந்தேன்.அப்படி உட்கார்ந்திருக்கும் நேரத்திலும் யாராவது பேண்ட் போட்டு போகிறார்களா? கேமிராவில் படம் எடுக்கிறார்களா? என்று பார்த்துக்கொண்டிருந்தேன்.பலர் செய்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை.கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டு அப்படியே காலாற கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
வாலிபால்,பெரிய மேஜை பந்து Roquet ம் டென்னிஸ் பாலுமாக ஒரு புதிய விளையாட்டை காணமுடிந்தது.மண்ணை தோண்டி தண்ணீர் தேடும் குழந்தைகள்,மணல் வீடு கட்டும் சிறுவர்கள்,கோட்டையே கட்டும் (இந்தோனேஷியர்/தாய்லாந்து காரரா?)இளைஞர்,கடல் அலை கனுக்காலை மட்டுமே நனைக்கட்டும் என்று உட்கார்ந்து குளிக்கும் தமிழ் நங்கையர்கள் என்று பல வித மக்கள் தங்கள் விடுமுறையை குதூகலமாக கொண்டாடுவதை காணமுடிந்தது.இதற்கிடையில் ஒருவர் தன் வீடியோ கேமிராவை வைத்து தன் குழந்தைகள் கடலின் உள் விளையாடுவதை படம்பிடித்துக்கொண்டிருப்பதை பார்த்தவுடன் எனக்கிருந்த பயம் கொஞ்சம் அகன்றது அதன் பிறகு எடுத்த சில படங்கள் உங்கள் பார்வைக்காக.பிறரை பிரத்யோகமாகவோ அல்லது Exposed ஆக காட்டாதது வரை OK போலும்.
மொத்த (கடற்கரை)நீளத்தையும் தடுப்பு கட்டி பிரித்துவைத்திருக்கிறார்கள்.மேற்பார்வையிட வசதியாக இருப்பதற்காக என்று எண்ணுகிறேன்.மேற்கு பகுதியில் உலகின் ஏழாம் நட்சத்திர தகுதியுடன் உள்ள விடுதி தூசி மூட்டத்தினால் மங்கலாக தெரிந்தது.படம் எடுத்தாலும் சரியாக விழாது என்பதால் எடுக்கவில்லை.அங்கு தான் படகின் மூலம் மேலே பறக்கக்கூடிய விளையாட்டு நடப்பது போல் பல பலூன்கள் தென்பட்டன.
அமெரிக்கர்கள் விளையாடிய இருவர் கொண்ட அணி வாலிபாலை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு அப்படியே கரையோரமாகவே அடுத்த தடுப்பு வரை சென்றேன். மாலை மணி 5 மணி நெருங்கியதும் வீட்டுக்கு போக ஆகும் நேரத்தை கணக்கிட்டு கிளம்பலாம் என்று முடிவு செய்து வெளியே வரும் வழியாக வந்த ஒரு இடத்தில் அப்பாவும் மகனும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பதை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.தாகமாக இருந்ததால் வாங்கிய அன்னாசி பழச்சாறு குளுமை அதிகமாக இருந்ததால் அது போகும் வரை மெதுவாக குடித்துக்கொண்டும் ஆட்டத்தையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.சாறு குடித்து முடிந்ததும் கொஞ்சம் தெம்பு வந்த மாதிரி இருந்ததால் அவர்களிடம் போய் நானும் பந்து போடுகிறேன் என்று போட்டு துடுப்பாட்டமும் ஆடிவிட்டு வந்தேன்.
இந்த வெள்ளி ஓரளவு நல்ல மாதிரி போனதில் சற்று சந்தோஷம்.
துபாயில் இனி எங்கு வெளிப்புற படம் எடுத்தாலும் இந்த அதி உயரக்கட்டிடம் விழாமல் இருக்காது போல் இருக்கு.
12 comments:
ஆகா! என்ன அழகு!!
ஜோதிபாரதி "எது" அழகு? :-))
நெம்ப சூப்பரா இருக்குங்கோ தம்பி........!!!!! ஆனாளுமும் உங்க மேல எனக்கு செம கடுப்பு.......!!!!
மனசாட்சியே இல்லாம பிகர் இல்லாத போட்டோவா எடுத்து வெச்சிருக்கீங்களே......?????!!!!!???
இதெல்லாம் நெம்ப தப்பு தம்பி...........!! நெம்ப தப்பு .....!!!!
வாங்க மேடி,அண்ணாச்சி கருணையே கருணை.:-)
அந்த மாதிரி எடுத்து போட்டுட்டு கம்பி எண்ணவா?
வாரா வாரம் உங்க ஊரை சுத்திகாண்பிக்கறதுக்கு நெம்ப நன்றி :)
வாங்க கிஷோர்
ஏதோ என்னால் முடிந்தது,அனுபவிங்க.
சீக்கிரமா வீட்ல இருந்து கூப்பிட்டு வாங்க. தனியா இருக்க கஷ்டமா இல்லையா?
கஷ்டம் தான் கிஷோர்,என்ன செய்வது இங்கு இன்னும் எத்தனை நாள் வேலை இருக்கும் என்பதே தெரியலையே.இங்கு குடும்பம்/வீடு எல்லாம் கொஞ்சம் என்ன நிறையவே யோசித்து பண்ணவேண்டியது அதற்கு தேவையில்லாமல் பண்ணிவிடும் இந்த நிதி நெருக்கடி என்றே தோனுகிறது.
கவலை வேண்டாம். எல்லாம் நல்லபடி நடக்கும் :)
நன்றி-கிஷோர்.
நல்லா அவுபாவித்து எழுதிருக்கின்றீர்.
ஜுமெய்ரா பூங்கா மிகவும் அழகு, குடும்பத்துடன் ஒருமுறை செண்டிருக்கிரேன். எங்களின் குழந்தை கடற்கரையை முதன்முதலாய் கண்டது அங்கேதான். :-))
சரி எல்லாம் இருக்கட்டும், கடற்கரையில் புடிப்பாடம் எடுக்க தடை போட்டிருக்கிறார்கள். ஆங்காங்கே எழுதியும் இருப்பார்கள். பார்க்கவில்லையா? பார்த்துங்க்னா.!!
வாங்க கணினி தேசம்
வீடியோ கேமிரா வைத்தே எடுத்துக்கொண்டிருந்தார்கள் அதனால் தான் நானும் எடுத்தேன்.பரவலாக எல்லோரும் பயன்படுத்துகிறார்கள்.எச்சரிக்கை, பொதுவாக வைக்கப்படுள்ளது என்றே நினைக்கிறேன்.யாரையும் தனிப்பட்ட முறையிலோ அல்லது அவர்களை Expose பண்ணக்கூடிய முறையிலோ இல்லாமல் இருந்தால் பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன்.
மணலில் சிற்பம் செய்வரிடம் கேட்டே அந்த படம் எடுத்தேன்.
உங்கள் எச்சரிகைக்கு நன்றி.
Post a Comment