Monday, March 16, 2009

கட்டிடத்துக்கு சட்டை.

இந்த Cladding என்று சொல்லப்படுகிற முறை எனக்கு தெரிந்து 1990 வரை அவ்வளவாக பிரபல்யமடையவில்லை அதுவும் இந்தியா முழுவதும் இதன் பயன்பாடு அவ்வளவாக இல்லை.அதற்கு காரணமும் இருந்தது.

1995யில் சிங்கை வந்ததும் இங்குள்ள பெரும்பாலான கட்டிடங்களும் சட்டை போட்டிருந்ததும் பிரம்மிப்பாக இருந்தது.முதலில் இதை பார்த்ததும் சும்மா அழகுக்காகத் தான் செய்கிறார்கள் என்று நினைத்தேன்.பல கட்டிடங்களில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்த போது இதன் தொழிற்நுட்பமும் இதனால் ஏற்படும் விளைவுகளும் புரிந்தது.

அதிக உயரமான கட்டிடங்கள் அதுவும் குளீரட்டப்பட்ட நிலையில் இருக்கும் கட்டிடங்கள் வெளி வெப்பத்தினால் Centralised Air Conditioning System அதிகமாக உழைக்கவேண்டி வந்தது அதனால் மின்சார பயனீடு அதிகமானது.கட்டிடத்தின் சூடு வெளி வெப்பம் மூலம் அதிகமாகமல் இருக்க அதே சமயத்தில் உள்ளுக்குள் இருக்கும் குளிர்/சூடு வெளியில் போகாமல் தடுக்கவும் இம்முறை மிகப்பெரிய பலனை கொடுத்ததால் உலகமெங்கும் இதை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.அந்த பயன்பாடு மட்டுமில்லாமல் கட்டிடத்துக்கு ஒரு அழகையும் கொடுக்க அதையே மெறுகேற்றி நமக்கு படம் காட்ட ஆரம்பித்தார்கள்.இதை தூசி துடைப்பது எளிது அத்துடன் இது இருக்கும் இடத்தில் ஒரு செங்கல் சுவர் கட்டவேண்டும் என்றால் கால அவகாசம் வேண்டும் அத்தோடு செலவும் அதிகமாகும்.செங்கல் சுவரின் எடையை கணக்கில் எடுத்தால் இதன் எடை மிகவும் குறைவு இதனால் கட்டிடத்தின் மொத்த எடையும் குறையும்.

இந்த முறையை சுலபமாக எப்படி செய்கிறார்கள் என்பதை கீழே உள்ள இரு படங்களை பார்த்துதெரிந்துகொள்ளலாம்.நுட்பமான விஷயங்களை சொல்லாமல் விட்டிருக்கேன்.இதில் இவர்கள் செய்யும் முறை அவ்வளவு பாதுகாப்பாக தெரியவில்லை.



சற்று முன் எடுத்தது.



இப்படி செய்கின்ற Cladding க்கு சோதனை முறைகள் இருக்கு.

Pressure Test

Water Test என்று பல.

4 comments:

திவாண்ணா said...

புரியலையே!
செங்கல் சுவருக்கு பதிலாவா? என்ன மெடீரியல்?
பல கட்டிடங்கள்ளே இப்ப கண்ணாடி முகப்பு மாதிரி இருக்கே அதுவா?

வடுவூர் குமார் said...

முகப்பு கண்ணாடி தான் திவா.இது இருப்பதால் வெளி செங்கற்சுவருக்கு அவசியமில்லாமல் போய்விடுகிறதல்லவா?

Anonymous said...

I am Subramanyam.editor of Buildersline magazine which is leading construction magazine.I want speak with u.pl call me 98417 43851

வடுவூர் குமார் said...

திரு சுப்பிரமணியம்- கூப்பிடுகிறேன்.