Tuesday, March 24, 2009

காதில் சத்தமா?

இந்த பக்கத்தை படிக்கும் போது கிடைத்த சில விபரங்கள் நம்மூர் மக்களுக்காக.

சிலருக்கு வெளியில் இருந்து சத்தம் வராமல் இருக்கும் போதே காதில் மணியோசை,குழந்தை அழுவது என்று பல வகை சத்தங்கள் கேட்கும் இதற்கு ஆங்கிலத்தில் Tinnitus என்று சொல்கிறார்கள்.இப்படிப்பட்ட பிரச்சனையை அமெரிக்கர்களில் மட்டும் 40 லட்சம் மக்கள் எதிர்கொள்கிறார்களாம்.இதற்கு பல வித காரணங்கள் இருந்தாலும் மிக அதிகமான சத்தங்களுக்கிடையே வேலை செய்பவர்களும்,Ear Phone மூலம் அதிக சத்தத்துடன் பாடல்களை வெகு நேரம் கேட்பது போன்றவைகள் மூலமே அதிகமாக பாதிக்கப்படுகிறதாம்,இதைத்தான் Noice Induced Hearing Loss என்று சொல்கிறார்கள்.

ஒரு அளவுக்கு மேல் சத்தம் அதிகமாகும் போது காதில் உள்ள நரம்புமண்டல் செல்கள் தங்கள் உயிரை இழந்துவிடுகிறதாம்.மிக முக்கியமாக இவை ஒரு முறை பாதிக்கப்பட்டால் அவ்வளவு தான் திரும்ப பிழைப்பதில்லை இதனால் கேட்கும் திறன் அவரவர் அளவுக்கு பாதிக்கப்படும்.

கீழே உள்ள நகர்படத்தை பார்க்கவும்.நம்மூரில் ஹாரன் (தேவையில்லாமல்) அடிப்பவர்கள்,சினிமா தியேட்டரில் அதிக அளவு சத்தத்துடன் படம் பார்பவர்கள் மற்றும் வீட்டு தொலைக்காட்சியில் 4 வீடு தள்ளியிருப்பவர்கள் கூட கேட்கும் படி வால்யூம் வைத்து அழுவாச்சி சீரியலை பார்பவர்களே வெகுவாக பாதிக்கப்பட போகிறார்கள்.இது முழுமையான பட்டியல் கிடையாது இன்னும் இருக்கும்.

போனால் திரும்பாத ஒன்றை அனாவசியமாக இழக்காதீர்கள்.இது யாரையும் அதைரியப்படுத்த அல்ல நம்மில் எல்லோருக்கும் ஏதோ ஒரு குறிப்பிட்ட அலைவரிசை காதில் விழாமல் தான் இருக்குமாம்

காது பற்றிய இதை நமது பதிவர் டாக்டர் புரூனோ எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்,ஏதோ எனக்கு தெரிந்ததை சொல்லியுள்ளேன்.

ஒரு முறை ஹாய் நலமா பதிவில் மருத்துவர் சொல்லியுள்ள கருத்துக்களை பாருங்கள்.

14 comments:

 1. ஆஹா..... ஓஹோ......!!!!  பேஷ்... பேஷ்.....!!
  நெம்ப சூப்பர்....!!!
  அருமையான பதிவு......!!!!!

  .

  .


  .


  .


  .


  .


  .

  ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.........!!!!

  ReplyDelete
 2. great post..

  Many people are not aware of it

  ReplyDelete
 3. உங்களது பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளது. நான் இப்பொழுது தான் லினக்ஸ் பயன்படுத்த ஆரம்பித்துள்ளேன். அதில் கமெண்ட் லைன்களை எங்கு கொடுப்பது என்று தெரியவில்லை. விண்டோசில் கமெண்ட் பிராம்ப்ட் உள்ளது. அதுபோல் லினக்ஸில் என்ன உள்ளது? எப்படி அங்கு சென்று கமெண்ட்களை கொடுப்பது. தயவு செய்து விளக்கவும். நன்றி. email : rajeshkuma2006@gmail.com

  ReplyDelete
 4. நம்மூரில் ஒரே ஒரு சினிமாதான் பார்த்தேன்.மறக்காமல் ear plug எடுத்துக்கிட்டுப் போனேன். 'கடவுள்' காப்பாத்துனார்:-)

  ReplyDelete
 5. வாங்க மேடி
  என்ன இப்படியெல்லாம் சத்தம் கேட்குதா?

  ReplyDelete
 6. நன்றி தமிழ்நெஞ்சம்.
  நம்மூரில் படம் பார்ப்பவர்களுக்கு தேவையான அறிவுரை.

  ReplyDelete
 7. வாங்க God of Kings
  terminal க்கு போக
  Application---->Accessories-----> Terminal
  இது உபுண்டு லினக்ஸில்.
  மற்ற லினக்ஸிலும் இதே மாதிரி தான் இருக்கும் ஆனால் கொஞ்சம் வேறுபாடு இருக்கும்.
  இதற்கு சுட்டியும் நீங்கள் வேண்டும் இடத்திலும் வைத்துக்கொள்ளலாம்.
  டாஸ்க் பாரில் வலது சொடுக்கி Add to Panel மூலமும் கொடுக்கலாம்.
  நன்றி.

  ReplyDelete
 8. வாங்க துளசி
  பயணம் எல்லாம் சௌகரியமாக இருந்ததா?
  ஒரு முறை காது அடைப்பான் எடுத்து போகாமல் ந்ம்மூர் திரை அரங்கத்துக்கு போய் கர்சீப் மூலம் காதை அடைத்துக்கொண்டு படம் பார்த்தேன்.
  பாவம் எவ்வளவு மக்களுக்கு மணி அடிக்கப்போவுதோ!!

  ReplyDelete
 9. நல்ல விஷயத்தை சொல்லியிருக்கிறீர்கள்.... சத்தால் செவி மட்டுமல்ல ரத்தத்திக்கும் பாதிப்பு (இரத்த அழுத்தம் ) என்று எங்கயோ படித்த ஞாபகம்

  ReplyDelete
 10. வாங்க அதிலை
  முதல் வருகைக்கு நன்றி.
  ரத்த அழுத்தம் வந்து அது Stress ஆக மாறி அது கூட கேட்கும் திறனை பாதிக்கும் என்று இந்த நகர்படத்தில் சொல்லியுள்ளார்கள்.

  ReplyDelete
 11. //சிலருக்கு வெளியில் இருந்து சத்தம் வராமல் இருக்கும் போதே காதில் மணியோசை,குழந்தை அழுவது என்று பல வகை சத்தங்கள் கேட்கும்//

  விவேக் சொல்லுவாரே..டாக்டர் எனக்கு மிருகங்கள் பேசுறதெல்லாம் கேட்குது என்று அது மாதிரியா :-))

  //வீட்டு தொலைக்காட்சியில் 4 வீடு தள்ளியிருப்பவர்கள் கூட கேட்கும் படி வால்யூம் வைத்து அழுவாச்சி சீரியலை பார்பவர்களே வெகுவாக பாதிக்கப்பட போகிறார்கள்//

  ஐயய்யோ! நான் பாட்டு கேட்பேன்..அடேய்! கிரி உனக்கு காது சங்கு தான்

  ReplyDelete
 12. சீக்கிரம் கிரி,காதை காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

  ReplyDelete
 13. //போனால் திரும்பாத ஒன்றை அனாவசியமாக இழக்காதீர்கள்.இது யாரையும் அதைரியப்படுத்த அல்ல நம்மில் எல்லோருக்கும் ஏதோ ஒரு குறிப்பிட்ட அலைவரிசை காதில் விழாமல் தான் இருக்குமாம்
  //

  காதில் வாங்கிக் கொள்ளாதது எந்த வகை ?
  :)

  ReplyDelete
 14. கோவியாரே...அது வேறு அலைவரிசை.

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?