Monday, March 09, 2009

மதிய உணவு

இன்றைக்கு மதியம் என்ன சாப்பிடலாம் என்று யோசிக்கும் போதே Ready to Eat வைகயறாவில் பிஸிபேலா பாத் எட்டிப்பார்த்தது.MTR கொடுகும் அளவு நம் வயிற்றுக்கு கொஞ்சம் கம்மியாக இருக்கும் என்பதால் அதை எப்படி அதிகப்படுத்துவது என்பதை என்னை மாதிரி சாப்பிடுபவர்களுக்காக இங்கே கொடுக்கிறேன்.

ஒன்றும் பெரிதாக இல்லை....கொஞ்சம் கேரட்டை நறுக்கி போட்டு ஓவனில் இரன்டு நிமிடம் வைத்து வயிற்றை நிரப்புங்கள்.அது கூட எனக்கு போதுமா என்ற சந்தேகம் வருவதால் தொட்டுக்க ஒரு (தோல் சீவப்பட்ட) வெள்ளரிக்காய்.அப்படியும் சந்தேகமாக இருந்தால் ஏதாவது ஒரு பழம் சாப்பிட்டுவிட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் பருகிவிடுங்கள். :-))

மதிய சாப்பாடு முடிந்தது.

6 comments:

Tamil whatsapp stickers and png images said...

இப்படி சாப்பிட்டு எப்படி உயிர் வாழ்வது...
சும்மா நண்டு வறுவல், கோழி பிரட்டல், முட்டை ஆம்லெட்னு உள்ளே தள்ளினாதானே திருப்தியா இருக்கு.

வடுவூர் குமார் said...

வாங்க சிவக்குமார்
ஹூம்! கொடுத்து வைத்தவர்கள் நீங்கள்,அனுபவிங்க.

G3 said...

இது சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிடனுமா இல்ல சாப்பாடு சாப்பிட்ட அப்புறம் சாப்பிடனுமா ;)

வீடியோவுக்கு போட்ட பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றிங்க :)

வடுவூர் குமார் said...

வாங்க G3
உங்களுக்கு எப்படி/எப்ப தோனுதோ அப்படியே சாப்பிடுங்களேன்.:-)

கோவி.கண்ணன் said...

நல்ல ஐடியா !

வடுவூர் குமார் said...

நன்றி கோவியாரே.