Tuesday, March 03, 2009

துபாய் மலர்கள்

நான் துபாய் வந்த செப்டம்பர் மாதம் வானிலையில் அவ்வளவாக மாறுதல் இல்லாவிட்டாலும் வெப்பம் சற்று தனிந்திருப்பதாக வேலையிடத்தில் சொல்லிருந்தார்கள்.ரமலான் மாதம் என்பதால் மதியம் 3 மணிக்கு மேல் வேலை இருக்காது.வெளியில் அடிக்கும் அனல் காற்றுக்கு பயந்தே அலுவலகத்தை விட்டு மெதுவாக மாலை 5 மணிக்கு கிளம்புவேன்.

சாலை மற்றும் பேரீட்சை மரம் அவ்வளவு தான்,இதை தவிர்த்து பசுமைக்கு வழியே இல்லை.நடந்து போய்கொண்டிருக்கும் போது சாலை ஓரத்தில் வெறும் மணல் வெளியில் கருப்பு குழாய்களை படரவிட்டிருந்தார்கள்.அதை முதலில் பார்க்கும் போது யாரோ தேவைப்படாததை தூக்கிப்போட்டிருக்கிறார்கள் போலும் என்று நினைத்தேன்.இதே மாதிரி பல இடங்களில் பார்தத போது தான் இது சொட்டு நீர் பாசனத்துக்கு என்று புரிந்தது.இப்படி போட்டு வைத்து ஏன் செடிகளை நடவில்லை என்ற அடுத்த கேள்வி எழுந்தது.அடிக்கிற வெய்யிலில் எந்த செடியும் பிழைக்காது என்பதால் வசந்த காலத்துக்காக காத்திருப்பதாக கேள்விப்பட்டேன்.

மரம்,செடிகள் & புல் நடும் வேலைகள் அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்கும்.மரங்கள் நர்சரி மூலம் வளர்க்கப்பட்டு வண்டிகள் மூலம் கொண்டுவரப்பட்டு நடப்படுகின்றன.

செப்டம்பர் மாதத்தில்..



தண்ணீர் குழாய்கள்- சொட்டு நீர் பாசனம்.



மணல் காடு.



நவம்பரில் தண்ணீர்காட்டுகிறார்கள்.தினமும் மாலை வேளைகளில் இவ்வாறு தண்ணீர் பாய்ச்சுவதை காணலாம்.



இரண்டு மாத கண்காணிப்புக்கு பிறகு நிலமகள் வண்ண ஆடையை பூனுகிறாள்.













இப்போது ஓரளவு சூரியபகவான் தன்னுடைய கதிர்களை காட்டி சூடு ஏற்றிக்கொண்டு இருக்கிறார் அதனால் வரும் மாதங்களில் சூடு அதிகமாகும் போது இம்மலர்கள் மீண்டும் காணாமல் போய்விடக்கூடும்.

4 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆகா! பாலைவன ரோசாக்களா!?
அருமை!!

வடுவூர் குமார் said...

நன்றி ஜோதிபாரதி.

கோவி.கண்ணன் said...

பாலைவனத்தில் இவ்வாறு செய்வதே சாதனைதான். மண்ணுக்குள் பெட்ரோல் இருக்கும் வரை இந்த அதியங்கள் தொடரும்.

வடுவூர் குமார் said...

பெட்ரோல் போனா என்ன? கோவியாரே.
நிலம் இருக்கே அடுத்து, அதைவைத்து பிழைப்பை ஓட்டிடலாமே!