Thursday, November 09, 2006

மின்தூக்கி மேம்பாடு (8)

போன பதிவு

தூக்கிவைக்கவேண்டிய சுவர் டிரைலரில் வந்து கீழே இறக்கிவைத்தவுடன் பாரம் தூக்கியை ஒரு முறை எல்லாவற்றையும் சோதித்துவிட்டு அந்த சுவரை மேலே தூக்க ஆயத்த வேலைகளில் இறங்குவார்கள்.

இந்த படத்தில் உள்ள சிவப்பு வார் தொங்கிக்கொண்டிருக்கும் இரும்புக்கு பேர் "Strong Back".

Photobucket - Video and Image Hosting

Erection வேலையில் இதன் பங்கு மிக அதிகம்.பாரம் தூக்குவதற்கென்று கான்கிரீட்டில் ஊக்கு வைத்திருப்பார்கள்.அதன் மூலம் தான் தூக்கவேண்டும்.தக்க பொறியாளர் உதவியுடன் இதன் இடத்தையும்,அந்த கம்பியின் தடிமனையும் நிர்மானித்திருப்பார்கள்.

ஆமாம் இந்த Strong Backயின் பணி என்ன?

நீங்கள் தூக்கும் பாரத்தையும் பாரம் தூக்கிக்கும் ஒரே ஒயரை போட்டால் அதன் கோணம் குறுகியதாக இருக்கும், அது கான்கிரீட்டில் உள்ள கம்பிக்கு அதிக லோடை கொடுக்கும்.அதை குறைக்கவே இந்த Strong Back.

தூக்க தயாராக இருக்கிறது.இங்கும் பாதுகாப்பு குறைவு.
ஏற இறங்க வழி எங்கே??(May be hidden)

Photobucket - Video and Image Hosting

லேசா தூக்கி

Photobucket - Video and Image Hosting

இன்னும் கொஞ்சம் மேலே தூக்கி

Photobucket - Video and Image Hosting

அதற்குள்.இது வைக்கவேண்டிய இடத்துக்கு கண்டோலா போய் பாதுக்காப்பை உறுதிசெய்கிறார்கள்

Photobucket - Video and Image Hosting

இன்னும் கொஞ்சம்தான் பாக்கியிருக்கு.

Photobucket - Video and Image Hosting

ரொம்ப நீளமாக போயிடுத்து.

வாங்க அடுத்த பதிவுக்கு.

4 comments:

துளசி கோபால் said...

உள்ளேன் ஐயா:-)

வடுவூர் குமார் said...

நம்ம கிளாசுக்கு வந்திருக்கீங்க,
வாங்க
"Present" போட்டுட்டேன்.
நன்றி

nagoreismail said...

தங்களின் பதிவை தவறாமல் படித்து மறுமொழி இடுவது நானும் துளசி கோபால் அவர்களும் தான் என்று நினைக்கிறேன்,
அடுத்த பதிவு எப்போ?
காத்திருக்கும்
நாகூர் இஸ்மாயில்

வடுவூர் குமார் said...

இந்த வேலை செய்பவர்கள் இங்கு அவ்வளவாக யாரும் இல்லாததே காரணம்.
கணினி பயன்பாடு, இன்னும் தமிழகத்தில் அந்த அளவுக்கு பயண்பாட்டுக்கு வரவில்லை,என்பதும் ஒரு காரணம்.
போடுவது நம் கடமை.பார்பதும் பார்க்காததும் அவரவர் இஷ்டம்.
அடுத்தது கடைசி பதிவு.. நாளை மறுநாள் வரும்.
நன்றி- நாகூர் இஸ்மாயில்.
நீங்கள் எப்போது ஃபிரியாக இருக்கிறீர்களோ அப்போது கூப்பிடுங்கள்.