போன பதிவு
இந்த பதிவில் மின்தூக்கியின் சுற்றுச்சுவர்கள் Pre-cast முறையில் வேறு இடத்தில் இதை உருவாக்கி டிரைலர் மூலம் கொண்டுவரப்பட்டு..
கீழே இறக்கி வைத்து..
கான்கிரீட் முனைகள் உடையாமல் இருக்க உட்காரும் இடத்தில் சிறிது தண்ணீர் அடிக்கிறார்கள்.இந்த மாதிரி சின்னச்சின்ன விஷயங்களை இப்படித்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.இதெல்லாம் கல்லூரியில் கற்றுக்கொள்ளமுடியாது.
பாருங்கள், இங்கு பாதுக்காப்பு முறை கொஞ்சம் மீறப்படுகிறது. எந்தவித சாமான்கள் தொங்கிக்கொண்டிருக்கும் போது கீழே போகக்கூடாது என்ற விதி இருக்கிறது.
இப்படி செய்வது தவறு என்று வேலைசெய்யும் தொழிலாளிக்கும் தெரியும்.இருந்தும் மீறப்படுவது தான் கட்டுமானத்துறையில் நடக்கும் தினசரி நிகழ்ச்சி.இதைப்பற்றி தனி ஒரு பதிவில் விரிவாக பார்க்கலாம்.
4 comments:
நான் பத்து வருடம் (MOM)எம்.ஒ.எம்.மில் தான் பாதுகாப்பு ஆசிரியராக வேலை பார்த்தேன், இப்பொழுது NTUC Learning Hubல் வேலை பார்க்கிறேன், அதே பணி தான். கான்கிரீட் பொருள்களின் கீழே நிற்பது மிகவும் ஆபத்தானது, பார்ப்பதற்கே பயமாக உள்ளது. இதை எல்லாம் தடுக்கவே முடியாதா, வேறு பாதுக்கப்பான முறைகளை பின்பற்றினால் என்ன? பாதுகாப்பு பற்றிய பதிவுகளை படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன், எனது துறையை சார்ந்ததாக உள்ளதால். நாகூர் இஸ்மாயில்
வாங்க இஸ்மாயில்
எழுத வேண்டும் என்ற எண்ணம் தான்.காலம் இடம் கொடுக்கவில்லை.
நிச்சயம் எழுதுவேன்.
இப்படி செய்வதற்கு காரணம் சோம்பேறித்தனம் அதுவும் கொஞ்சம் ஆத்திரமாகச்சொன்னால் "தென்னாவட்டு"-இது ஒரு புறம்.
ஒரு தொழிலாளி போய் மேனேஜரிடம் "இது பாதுகாப்பான வேலை இல்லை,மாற்று வழி பண்ணிகொடுங்கள்" என்று சொன்னால்,அவன் மறைமுகமாக "சாங்கி வழியாக அனுப்பபடுவான்"
இது ஒரு சங்கிலி தொடர் பிரச்சனை.
கட்டுமானத்துறை வேலைகளை 100% சுத்தமாக இருப்பதற்கு முயற்சிக்கக்கூடாது என்று என் முன்னாள் "Boss" சொல்வார்.ஆர்சட் ரோடில் நடப்பது போல் சைட்டில் ஏற்படுத்தக்கூடாது.அது விபரீதத்தில் தான் முடியும்.வேலை ஆட்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.
நிரந்தர தீர்வு என்று இருப்பதாக தெரியவில்லை.தேவைக்கு ஏற்ப நமது அனுகுமுறையை மாற்றி-குறைக்கச்செய்யலாம்.
கல்லூரியில் கற்றுக்கொள்வது ஒரு ஐம்பது சதவீதம்தான். மீதிப்பாதிக்கு நமக்கு
வாழ்க்கைதான் வாத்தியார்.
'கண்ணையும், மனசையும்' திறந்து வச்சா படிக்கிறது சுலபம்.
வாங்க துளசி
சரிதான், பலவற்றை நானும் அப்படிதான் கற்றுக்கொண்டேன்..இருக்கிறேன்.
அந்த படத்தில் உள்ள "தண்ணி" அடிக்கிற விஷயம் எனக்கும் புதிது தான்.
Post a Comment