வீட்டின் முகவருக்கும் உங்களுக்கும் உள்ள ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அதற்கு தேவையான நடவடிக்கைகளில் இறங்குவார் முகவர்.
முதன் முதலில் வீட்டை மதிப்பீடு செய்வதற்கு apply செய்யவேண்டும்.இது வீட்டின் உரிமையாளர் செய்யவேண்டும்.நம் முகவரிடம் நாம் ஒப்பந்தம் வைத்துள்ளாததாலும் அதற்கு தேவையான ஆவணங்கள் அவரிடம் இருக்கும் ஆதலால்,அதில் கையெழுத்து போட்டு கொடுத்து சுமார் 180 வெள்ளி கொடுத்துவிட்டால் போதும் அதற்கு தேவையானவற்றை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.
இதிலும் ஏமாற்று வேலை உண்டு.ஆதாவது போஸ்ட் மூலம் apply செய்தால் 180 வெள்ளி,இணையம் மூலம் செய்தால் 167 வெள்ளிதான்.உங்களிடம் 180 வெள்ளி வாங்கிக்கொண்டு இணையம் மூலம் apply செய்து அதிலும் 13 வெள்ளி சம்பாதித்து விடுவார்கள்.
அடுத்து இந்த மதிப்பீடு வீட்டை வாங்குபவர்கள் தங்கள் கடனுக்காக உபயோகிக்கப்போவதால் அதற்கான செலவை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.அப்படியில்லாமல் நீங்கள் பணம் கட்டி செய்த valuation expiry தேதிக்குள் வீடு விற்கமுடியாவிட்டால் அதற்கு செலவு செய்த பணம் விரயம் தான்.இந்த 180 வெள்ளிக்காக முதல் அடியை நாம் எடுத்து வைக்காவிட்டால் எங்கும் போக முடியாது.நமக்கு அதிஷ்டம் இருந்தால் முதல் Valuation யிலே வேலை முடியும்.
நான் முதலில் ஒரு முகவரை கூப்பிட்டு பேச்சு வார்த்தை நடத்தியபோது"நான் உங்களிடம் ஒப்பந்தம் போட்டுக்கொள்ள விருப்பம் இல்லை,உங்களிடம் வாங்குபவர் இருந்தால் கூப்பிட்டு வாருங்கள்,பேசுவோம்" என்றேன்.
அவரும் 3 மாதங்கள் முயற்சித்து பார்த்துவிட்டு,"ஒன்றும் சரியாகவில்லை" என்று விட்டுக்கொடுத்துவிட்டார்.
அடுத்து ஒருவர்,இவர் ஒரு பெரிய முகவர் நிறுவனத்தை சேர்ந்தவர் என்பதால் கூப்பிட்டு பேசினேன்.பல விஷயங்களை பேசிய பிறகு, இந்த முறை ஒப்பந்தத்துடன் முயலுவோம் என்று சொல்லி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுக்கொடுத்தேன்.
அடுத்து,உள்ளூர் தினசரிகளில் மற்றும் இணையத்திலும் நமது வீட்டு விவரங்களை மேம்போக்காக வெளியிடுவார்கள் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.தினசரியில் வரும் விளம்பரங்களில் இந்த பாக்கத்தில் இந்த டைப் வீடுகள் விற்பனைக்கு உள்ளது என்று தான் வரும்.எந்த மட்டத்தில் மற்றும் வீட்டின் எண் நீங்கள் தனிப்பட்ட முறையில் விஜாரிக்கும் போது தெரியவரும்.இந்த 3 மாதங்கள் தான் முகவரின் முழு வேலைகள்.வீட்டு முதலாளி தேவைப்படும் போது வீட்டை திறந்துவிட்டால் போதும்.
பலர் வேலை முடிந்துதான் வீட்டை பார்க்க இரவு தான் வருவார்கள்.
வாங்குபவர்களின் கேள்விகளுக்கு முகவரே பதில் சொல்லிவிடுவார்.
வீடு விற்பனையில் இருக்கும் போது வீட்டின் உள்ளே எவ்விதமான மேம்பாட்டு பணிகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது.
வீட்டை முகவர் காண்பித்தாலும்,வாங்குபவர்கள் காலை வேளைகளில் அந்த சுற்றுப்புறம் எப்படியுள்ளது? சாதக பாதகங்களை ஆராயவேண்டும்.எந்த வீட்டையும் அவசரத்தில் "சரி" என்று உடனடியாக சொல்லக்கூடாது.பல வீடுகளை பார்த்து முடிவு செய்யவேண்டும்.
முகவரை மற்றும் நம்பாமல் வாங்கப்போகும் வீட்டை நீங்கள் வாங்கமுடியுமா என்று "வீவக" இணைய தளத்தில் சென்று பார்க்கவேண்டும்.
எல்லா பாக்கத்திலும் இன வாரியாக சதவீத அடிப்படையில் வசிக்க வேண்டியதால்,பிற இனத்தில் இருந்து வீடு வாங்கும் போது கவனமாக இருக்கவேண்டும்.இந்த விபரங்கள் "வீவக" இணையதளத்தில் உள்ளன.இங்கு எந்த வீவக அடுக்குமாடி கட்டிடத்திலும் ஒரே ஒரு இனம் அதிகமாக இருக்கமுடியாதபடி அரசாங்கம் அமைத்துள்ளது.
என்ன எண்ணம்!!
பல இனம் சேர்ந்து வசிக்கும் போது அவர்கள் பழக்க வழக்கங்கள் நமக்கும் தெரியவரும்.ஒருவரை ஒருவர் விரோதியாக பார்க்கும் எண்ணம் மறைந்துவிடும்.சீன லயன்ஸ் ஆட்டம் போது எழும் அபரீதமான சத்தம்,Ghost பண்டிகையின் போது எரிக்கும் காகித பணம் ஏற்படுத்தும் புகை மற்றும் காகித தூள்கள்,மலாய் மற்றும் இஸ்லாமிய நண்பர்கள் நடத்தும் கல்யாணத்தின் போது சுமார் 40~50 இருசக்கிர வண்டிகளின் சத்தம்,நம்மவர்களின் மணியோசனை,சத்தமான பாட்டு கேட்கும் பங்கு எல்லாம் சேர்ந்து ஒருவரை ஒருவருடன் புரிந்துகொள்ள உதவுகிறது.
என்ன மிஞ்சி மிஞ்சி போனால் கதவை அடைத்துவிட்டால் சத்தம் அவ்வளவாக வரப்போவதில்லை.அதுவும் கொஞ்ச நேரத்துக்கு.சில சமயம் கொடுக்கப்பட்ட நேரத்துக்கு மேல் சத்தம் எழுப்பினால்,ஒரு போன் கால் போதும் அடுத்த 10 நிமிடங்களுக்குள் "உள்ளூர் மாமா" இங்கு இருப்பார்.எது எப்படி இருந்தாலும் இரவு 10 மணிக்கு மேல் வசிக்கும் இடங்களில் சத்தம் போட அனுமதியில்லை.
வாங்க திரும்ப முகவரிடம் போவோம்.
எனது முகவர் Valuation க்கு apply செய்தவுடன், இரண்டு வாரங்கள் கழித்து ஒரு தேதியில் அதை செய்பவர்கள் வருவார்கள் என்று கடிதம் வந்தது.உங்கள் செளகரியபடி இந்த தேதியை மாற்றிக்கொள்ளலாம்.
Valuation செய்பவர்கள் வந்து வீட்டின் சில அறைகளை ·பிலிம் புகைப்பட கருவியின் மூலம் சுட்டுக்கொண்டு 5 நிமிடங்களுக்குள் வீட்டைவிட்டு வெளியேறிவிடுவார்கள்.வீட்டின் உள்ளே போடப்பட்டிருக்கும் கற்கள் வகை,பொதுவாக வீட்டின் நிலமையை கணக்கில் கொண்டு மதிப்பீடு செய்வார்கள்.வீட்டின் மட்டத்தை பொருத்தும் இந்த மதிப்பு மாறும்.மேலே ஏற ஏற மதிப்பும் ஏறும்.
மற்றவை வரும்..
4 comments:
//பல இனம் சேர்ந்து வசிக்கும் போது அவர்கள் பழக்க வழக்கங்கள் நமக்கும் தெரியவரும்.ஒருவரை ஒருவர் விரோதியாக பார்க்கும் எண்ணம் மறைந்துவிடும்//
இதுதாங்க நிஜம். கொஞ்சம் பொறுமை காத்தால் போதும். பழகிட்டா எல்லா மக்களும் நண்பர்கள்தான்.
step by step என்று சொல்லுவார்கள்!
அருமையாகத் தகவல்களைத் தொகுத்துத் தரீங்க குமார் சார்!
//இந்த விபரங்கள் "வீவக" இணையதளத்தில் உள்ளன.இங்கு எந்த வீவக அடுக்குமாடி கட்டிடத்திலும் ஒரே ஒரு இனம் அதிகமாக இருக்கமுடியாதபடி அரசாங்கம் அமைத்துள்ளது//
சமத்துவபுரம் ?? :-))
இங்கும் இது உண்டு சார்! என்ன, கத்தி மேல் நடப்பது போன்று! இந்தப் பணியில் இருப்பவர்கள் சட்ட திட்டங்களை ஆதாரமா வைத்துச் செய்தாலும், கவனமாகச் செய்ய வேண்டும்; வாயை வைத்துக் கொண்டு உளறாமலும் இருக்க வேண்டும்; இங்கு சில பேர் சிக்கலில் மாட்டிக் கொண்ட செய்திகள் வந்தன.
வாங்க துளசி,
இங்கு எங்கெங்கு முடியுமோ அங்கெங்கே முக்குலத்தோரையும் முன்னிறுத்தி தேர் இழுக்க வைத்துவிடுவார்கள்.அதனாலே சச்சரவுகள் மிக குறைவாக இருக்கும்.
நன்றி திரு கண்ணபிரான்.
சமத்துவபுரம் டெக்னிக் தான்.யாரோ புண்ணியவான் ஆரம்பித்து இத்தனை காலமும் தடையின்றி நடைபெறுகிறது.இந்த எண்ணம் 1965யில்(சரியாக ஞாபகம் இல்லை) நடந்த சமூகங்களுக்கிடையான பூசலுக்குப்பிறகு மற்றும் இந்த மாதிரி அடுக்கு வீடுகள் கட்டும் போது ஏற்பட்டிருக்கவேண்டும்.
இப்படிப்பட்ட எண்ணம் "நம் நாடு,நம் மக்கள் & நம் முன்னேற்றம்" என்ற சிந்தனை உள்ள தலைவர்களுக்கு வந்து இன்றும் பல தலைமுறைக்கு உதவியாக இருக்கிறது பார்த்தீர்களா?
நாம் கற்றுக்கொள்ள இன்னும் பல இருக்கிறது.
Post a Comment