Wednesday, November 08, 2006

சொந்தவீடு-(2)

"சரி,எந்த இடத்தில் வீடு பார்க்கிறீர்கள்" என்றார் முகவர்

சுத்தமாக ஒரு வித முன்னேற்பாடு இல்லாததால்,"எங்கிருந்தாலும்,பள்ளிக்கூடம் பக்கத்தில் இருந்தால் சரி" என்றோம்.

சில மூவரை வீடுகள் பார்த்தோம்,ஒன்றும் சரி வரவில்லை.விலை அதிகமாக இருந்தது.

அப்போது இருந்த நிலையில் வீட்டின் விலைக்கு மேல் "கைகாசு" கொடுக்கும் முறை இருந்தது.இது அவரவர் வீட்டில் செய்திருக்கும் வீட்டுப்பணிக்காக கொடுப்பது போல்.இந்த முறை வாங்குவர் மற்றும் விற்பவருக்கு இடையில் ஏற்படும் ஒப்பந்தம் என்பதால் "HDB" தலையிடாது.ஆனால் எவ்வளவு என்று பிரமாணம் செய்யவேண்டும்.

ஒரு நாள் சாயங்காலம் 6 மணிக்கு முகவர் கூப்பிட்டு ஈசூனில் ஒரு வீடு இருக்கிறது,9 மணிக்கு தான் ஓனர் வருவார்,போகலாமா என்றார்?

வேறு வழி??

போகும் போது எங்களை அவர் காரிலேயே கூட்டிப்போனார்.

வீட்டின் ஒனர் விவாகரத்து வாங்கிக்கொண்டு விட்டதால் இந்த வீட்டை விற்பதாகவும் சொன்னார்.

3 அறைகள் ஒரு ஹால்- கொஞ்சம் பெரிதாக இருந்தது.வீட்டு விலை 207K என்றும் அதற்கு மேல் கைகாசு 20K என்று சொல்லியிருந்தார்கள்.

பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன், முகவர் "வேறு வீடுகளும் பார்த்துவிட்டு,முடிவு செய்யலாம் என்றார்" நாங்களும் சரி என்று சொல்லிவிட்டு பழைய வீட்டுக்கு வரும் போது இரவு மணி 11.

நல்ல அசதி என்பதால் உடனே தூங்கிவிட்டோம்.

பாதி தூக்கத்தில், தொலைபேசி மணி அடித்தது.

அதனூடே எடுத்து "ஹலோ" என்றேன்.

முகவர் தான்

"மன்னிக்கவேண்டும்"- இப்போது தான் அந்த வீட்டுக்காரர் பேசினார். வீட்டு விலைக்கு மேல் கேட்ட 20K குறைத்து 11K கொடுப்பதாகவும் சொல்லியுள்ளார்.
முடித்துவிடலாமா? என்றார்.முகவர்களுக்கு தேவையான விபரங்கள்,பொய்கள் எல்லாம் என்னிடமும் கொட்டப்பட்டது.

ஏதோ ஒரு வித சலிப்பு,எவ்வளவு வீடு பார்ப்பது என்று, அதுவும் பாதி தூக்கத்தில் அவர் சொல்வதை கேட்க பிடிக்காமல்..

"சரி"- முடிச்சிடுங்க என்று சொன்னேன்.

இந்த "சரி" என்னை எப்படியெல்லாம் துரத்தியது என்பது, வரும் பாகங்களில்.

3 comments:

துளசி கோபால் said...

அது 'சரி' இல்லை. 'சனி'யாக்கும். அதான் நாக்குலே வந்து உக்காந்து
இருக்குமாம்.

வடுவூர் குமார் said...

"இந்த மாதிரி ஒத்த வரியை பிடித்து அதற்கு பின்னூட்டம் போடுவதில் உங்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை"
இது நான் சொன்னதல்ல- என் மனைவி.
தொடருங்கள் உங்கள் நற்பணியை.

வடுவூர் குமார் said...

இந்த "சரி"-நாகப்பட்டினம் புயல் மாதிரி சுத்திச்சுத்தி அடிச்சிட்டு.மவனே இனிமே வீடு வாங்குவ!! என்று சொல்லாமல் சொன்னது.