தடலாடி விளையாட்டு என்றால் கிரிக்கெட்டில் சில காலங்களுக்கு முன்பு நம்ம ஸ்ரீகாந்த் மட்டுமே ஞாபகம் வரும்.இன்றும், இவர் அடித்த ஸ்கொயர் கட் -மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக ( உலகக்கோப்பை என்று நினைக்கிறேன்) அடித்தது தான் ஞாபகம் வரும்,அடுத்த பந்திலேயே நடு குச்சி ஆட்டம் போட்டது என்பது வேறு விஷயம்.
அந்த பந்து பேட்டில் பட்டது தான் தெரியும் சும்மா செம ஸ்பீடில் பவுண்டிரிக்கு போனது.
அப்படிப்பட்ட ஸ்ரீகாந்த் போட்ட ஆட்டத்தை கீழே பார்ககவும்.பட்டாசுனா,நம்மாளுக்கு பயம் போல்!! :-))
நன்றி: வசந்தம் சென்ரல்
Saturday, February 23, 2008
Wednesday, February 20, 2008
எஸ்.ராமகிருஷ்ணன்
எழுதுவது ஏன்?
இப்படிப்பட்ட கேள்வி வாசகனுக்கோ எழுதுபவர்களுக்கோ ஏற்பட்டால்...
இங்கு
போய் பார்க்கவும்.
திரு ராமாகிருஷ்ணனின் எழுத்து எனக்கு ஆனந்தவிகடன் மூலம் தற்செயலாக அறிமுகமானது.நான் விரும்பி படிக்கும் பாலகுமாரனுக்கு அடுத்து இவர் புத்தகங்களை தான் தேடுவேன்.என்ன எழுதினாலும் நம்மையும் அவருடனே கட்டி இழுத்துக்கொண்டு போகும் கலையை அவர் எழுத்தை படிப்பதன் மூலம் அனுபவிக்கலாம்.
மேலே கொடுத்த சுட்டியில் போய் பாருங்கள் பல முத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன.
பி.குறிப்பு: பயர் பாக்ஸில் எழுத்து படிக்க முடியாத அளவுக்கு இருக்கு அதனால் IE மூலம் படிக்கவும.்

Monday, February 18, 2008
ஹைட்ரஜன் கார்
வர வர கார்களின் எரி பொருளுக்கு மாற்று கண்டுபிடிக்க வேண்டிய சூழ்நிலை நெருங்கிவிட்டது என்பதை தான் இந்த சலனப்படம் காண்பிக்கிறது.
எல்லாம் போய் இப்போது ஹைட்ரஜன் மூலப்பொருள் கொண்டு இக்காரை இயக்குகிறார்களாம்.எரி பொருள் செலவு இப்போதைக்கு அதிகமாக தெரிந்தாலும் நாள் ஆக ஆக பழக்கமாயிடும் என்று சொல்லவில்லை. :-))
கட்டுப்படியாகும் என்று சொல்கிறார்கள்.

Saturday, February 16, 2008
ரியாக்டர்-தமிழில் மறந்து போய் விட்டது.
நண்பர் ஒருவர் மின் அஞ்சல் மூலம் இந்த படங்களைஅனுப்பியிருந்தார்.
கட்டுமானத்துறையில் இப்போது கான்கிரீட் பயண்பாட்டை குறைத்து ஸ்டீலுக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள் அந்த விதத்தில் இந்த் ரியாக்டர் எப்படி ஆரம்பித்து எப்படி வெளியேறுகிறது என்று பாருங்கள்.
கிழே உள்ள படத்தில் உள்ள ரியாக்டர் வெல்டிங் வேலைகள் முடிந்து டெஸ்டிங்காக தயார் நிலையில் இருக்கிறது.
பூஜையை முடிச்சிடலாமா?
லார்சன் & டூப்ரோ வில் இதே மாதிரி பெரியவேலைகள் முடியும் போதும் பூஜை நடைபெறுவது வழக்கம்.
பூஜை முடிந்த பிறகு நியூமேடிக் டெஸ்டிங்
அப்பாடி நல்ல படியாக டெஸ்டிங் முடிந்தது.
அப்புறம் தூக்கிட்டு போக வேண்டியது தான்,என்ன கொஞ்சம் பெரிய வண்டியாக வேண்டும்.அதற்காக பஞ்சம் நம்மூரில்..
ரியாக்டரை இன்னும் கொஞ்சம் பக்கத்தில் காட்டய்யா!!இதோ
தண்ணீர் வழியாக கப்பலில் ஏற தயராக கொண்டுவந்திட்டாங்க..
அவ்வளவு தான் தண்ணீரில் ஏற்றிய பிறகு எங்கள் பணி முடிந்த்து என்ற பெருமூச்சுடன்..ஒரு குரூப் போட்டோ எடுத்துக்கலாமா?
கடைசியில் பாருங்கள்.
வாழ்த்துக்கள் நண்பர்களே,ரொம்ப நாள் கழித்து இந்த மாதிரி படங்களை பார்க்கும் போது திரும்ப அங்கு வேலைக்கு சேர்ந்த மாதிரி ஒரு தெம்பு கிடைக்குது.

Friday, February 15, 2008
பாலகுமாரனின் ஹிந்தி
நான் பலதரப்பட்ட எழுத்தாளர்களின் புத்தகங்களை படித்தாலும் பாலகுமாரனின் படிப்புகளை படிக்கும் போது பல முறை கால நேரம் தெரியாமல் போயிருக்கிறது,மூழ்கிவிடுவேன்.
இப்போது நான் படித்துக்கொண்டிருக்கும் “கருணை மழை” நாவலில் உள்ள இரண்டாம் பகுதியில் உள்ள ”சரஸ்வதி” என்ற கதையில் வரும் ஒரு பகுதி உங்கள் பார்வைக்காக.
படத்தின் மேல் சொடுக்கி பெரிதாக்கி படிக்கவும்.
இவர் நாவலில் வரும் பல பகுதிகள் என் வாழ்கையில் அப்படியே அச்சடித்த மாதிரி நடந்தது மட்டும் ஏன் என்று தெரியவில்லை.
முடிந்தால் படிக்கவும்.

Thursday, February 14, 2008
களவு தொழிற்சாலையாம்!!
முதலில் இப்புத்தகத்தை பார்க்கும் போது, தலைப்பில் ஏதோ தவறா? என்று எண்ணத்தோணியது.
கனவுத் தொழிற்சாலையை என்கிற சினிமா தொழிலைப்பற்றி தான் அப்படி சொல்லியிருக்கார்.
படிக்க.. படிக்க.. அதன் நீள,அகல மற்றும் உயரங்களை திரு பிஸ்மி என்பவர் உரித்துக்காண்பித்துள்ளார். சினிமா தொழிலில் உள்ள கயமைத்தனங்களை அப்படியே சொல்லியுள்ளார்.இவரே ஒரு தயாரிப்பாளர் போலும்,தார்மீக கோபம் சில இடங்களில் கொப்பளித்து எரிமலை குழம்பு போல் ஓடுகிறது.அதே சமயத்தில் நல்லவர்களை பெயருடன் குறிப்பிட்டு அடையாளம் காண்பித்திருக்கார்.
பாதி புத்தகமே முடித்திருக்கும் நிலையில் இன்னும் என்னென்ன சொல்லியிருபாரோ? என்ற பயம் இருந்தாலும்,திரையுலக துறையில் இருப்பவர்கள் மற்றும் நுழைய இருப்பவர்களும் கட்டாயம் ஒரு முறையாவது படிக்க வேண்டிய புத்தகம் இது.
அத்துறையில் நான் இல்லாமல் இருக்கும் போதே அதன் நாற்றத்தை உணர என்னால் முடியும் போது அதனுள் இருப்பவர்கள் தங்களை சுய பரிசோதனைக்கு செய்துகொள்ள இந்த புத்தகம் உதவும் என்று நினைக்கிறேன்.

Wednesday, February 13, 2008
ஆ மெங்க்
என்ன தலைப்பு ஒரு மாதிரியாக இருக்கா?
வேற ஒன்றும் இல்லை இங்குள்ள மிருககாட்சி சாலையில் இருக்கும் ஒரு ஓரங்குட்டான் குரங்கின் செல்லப்பெயர்.இதனுடன் உட்கார்ந்து காலை டிபன் சாப்பிட்டிருக்கிறார்கள் பல உள்ளூர் வெளியூர் மக்கள்.இதன் உருவம் சிஙக்ப்பூர் ஜூவின் ஒரு ஐகான் என்றால் மிகையாகாது.
வயசாகி/பாட்டியானதால் காலன் அழைத்துக்கொண்டான் போலும்.
மீதி கீழே...
நன்றி: வசந்தம் சென்ரல்.
அது உயிருடன் இருந்த போது..
வீடியோ உதவி: யாரோ புண்ணியவான் (thetvshooter).

சிங்கப்பூர் சக்கரம்
பிரிட்டனில் உள்ளது போலவே இங்கும் ஒரு சக்கரம் நிறுவி சுற்றுப்பயணிகளை கவர வேண்டும் என்று சுமார் 1.5 வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தாக ஞாபகம்.
வரும் ஏபரல் முதல் பொது மக்களுக்கு திறந்து விட எண்ணியிருக்கும் இந்த “சிங்கப்பூர் பிளையர்” சுமார் 42 மாடி உயரம் உள்ளது.இதிலிருந்து (மேக மூட்டம்/தூசி மூட்டம் இல்லாத நாட்களில்) பார்த்தால் மலேசியாவும் & இந்தோனேசியாவும் தெரியும் என்கிறார்கள்.
ஒருவருக்கு இப்போது 29 வெள்ளி கட்டணம் என்று நிர்ணயித்துள்ளார்கள்.மீதி விபரங்கள் அவர்களே சொல்கிறார்கள்,கேட்டுவிடுவோம்.
இது லண்டன் ஹைய் யை விட 30 மீட்டர் உயரம் அதிகம்.

Saturday, February 09, 2008
சிங்கையில் 20-20
சிங்கப்பூரில் கிரிக்கெட் ஆர்வலர்கள் குறைவு என்றாலும் சில பள்ளிகளிலும் இந்த ஆட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.அவ்வப்போது சில திடல்களில் நம்மூர் ஆட்கள் டென்னிஸ் பந்து கொண்டு ஆடுவார்கள்.கையும் காலும் ஊறும்,என்ன பண்ணுவது?
இப்படிப்பட்ட ஊரில் 20-20 ஐ ஆடவைக்கப்போகிறார்களாம்.ஹாங்காங்கில் இருந்தும் ஒரு குழு வருகிறதாம்
20-20 கிரிக்கெட் வெறும் 3 மணி நேரத்துக்குள் ஆட்டம் முடிந்துவிடும் என்பதால் பலரிடம் புகழ்பெற்று விளங்கும் இந்த ஆட்டத்தை சிங்கப்பூரில் அறிமுகம் செய்கிறார்களாம்.
மேல் விபரங்களுக்கு சலனப்படத்தை பார்க்கவும்.

Friday, February 08, 2008
தமிழ் படிக்க உபகாரச்சம்பளம்
சிங்கப்பூரில் தமிழ் இளங்கலை படிக்க உபகாரச்சம்பளம் கொடுக்கிறார்களாம்,பாருங்கள் கீழே உள்ள சலனப்படத்தை.
தமிழை உயர்த்த எங்கெல்லாம் வாய்புள்ளதோ அங்கெல்லாம் தட்டிக்கொடுக்கும் சிங்கை அரசாங்கத்தை வாழ்த்துவோம்.
நன்றி:வசந்தம் சென்ரல்

Thursday, February 07, 2008
புதுசா ஒரு வேலை!!
புது மாதிரியான வேலையை உருவாக்கி அதைவைத்து ஒரு 20 நிமிடங்கள் ஆளை சிரிக்க வைத்து வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்.
மென்பொருள் துறையில் உள்ளவர்கள் இன்னும் ரசிக்க அதிகமான வாய்ப்பு உள்ளது.
இங்கு சொடுக்குங்க
இந்த ரமணி ரமணி தொடர் ஒரு காலத்தில் சிங்கையிலும் ஒளி பரப்பப் பட்டது.இப்போ எந்த தொலக்காட்சி ஒளிபரப்புகிறது என்று தெரியவில்லை.
பார்த்து மகிழுங்கள்.

Monday, February 04, 2008
புகை வண்டி
நம்மூர் பல பகுதிகளில் இந்த புகைவண்டி காணமல் போய்கொண்டிருக்கும் வேளையில்....
பார்த்து மகிழ,இங்கே ஒரு சலனப்படம்.
யூ டியூபில் போட்ட புண்ணியவான் is1943 க்கு நன்றி

தேவ மொழி
எழுத்து....
அது எப்படி இருக்கனும் என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அபிப்பிராயம் இருக்கும்.ஒருவருக்கு பிடிக்கும் எழுத்தாளர்களை மற்றவர்களுக்கு பிடிப்பதில்லை.சாப்பாட்டில் எப்படி சுவை பேத அபிப்பிராயங்கள் இருக்குமோ அதே மாதிரி தான் எழுத்தாளர்களின் எழுத்து நடையும்.
ஒரு எழுத்தாளருக்கு எது தேவை என்பதை கீழ்கண்டவாறு ஒரு எழுத்தாளர் அதுவும் முதல் பக்கத்திலேயே கொடுத்துள்ளார்!!! முதல் பக்கத்திலேயே “குபுக்” என்று சிரிப்பை வரவழைத்துவிடுகிறார்.
யார் இவர்?
படித்தவர்களுக்கு தெரியும் அல்லது அவருடைய எழுத்து நடையில் இருந்து அனுமானிக்கலாம்.முடிகிறதா பாருங்கள்.
சி.குறிப்பு: இலவசகொத்தனாருக்கு பிடித்த எழுத்தாளர்.

Sunday, February 03, 2008
”கோலங்கள்”- நாடகத்தொடர் அல்ல
மறைந்துகொண்டிருக்கும் பல கலைகளில் இந்த கோலக்கலையும் ஒன்று, அதுவும் நகர வாழ்கையில் அதற்கென்று ஒட்டி கூட வந்துவிட்டதால் கோலம் போடக்கூடிய அவசியமும் இல்லாது போய் கொண்டிருக்கிறது.
ஏதோ, இன்னும் கிராமங்களில் வாசலை அடைத்து கோலம்போடுபவர்கள் இருப்பதால் இந்த மாதிரி சலனப்படத்தின் மூலமாவது பார்க்கமுடிகிறதே!!
கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்/கேளுங்கள்.
நன்றி: வசந்தம் சென்ரல்
ஏதோ, இன்னும் கிராமங்களில் வாசலை அடைத்து கோலம்போடுபவர்கள் இருப்பதால் இந்த மாதிரி சலனப்படத்தின் மூலமாவது பார்க்கமுடிகிறதே!!
கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்/கேளுங்கள்.
நன்றி: வசந்தம் சென்ரல்
Subscribe to:
Posts (Atom)