இன்று தான்(13/9/09) மஸ்கட்டுக்கான விசா மின் அஞ்சல் மூலம் வந்தது.அலுவலகத்தில் சும்மாவாகவே இருந்தது முடிவுக்கு வந்தது ஒரு விதத்தில் மகிழ்ச்சி தான்.நேரத்தை இன்னும் விரயமாக்காமல் 15ம் தேதி விடியற்காலை வானூர்த்தியில் இடம்பிடிக்க மனித வள அதிகாரிகளிடம் சொல்லிவிட்டேன்.அதிக கூட்டம் இல்லாததால் என்னவோ கேட்ட தேதியில் கிடைத்தது.விடியற்காலை விமானம் என்பதால் முதல் நாள் இரவே கிளம்பவேண்டிய கட்டாயம் அதுவும் இல்லாமல் சிங்கப்பூரில் இருந்து நேரடியான விமான சேவை இல்லாத்தால் துபாய் மூலம் வந்து அங்கு 3 மணி நேரம் தங்கி பிறகு மற்றொரு விமானம் மூலம் மஸ்கட் வரவேண்டும்.
துபாய் விமான நிலையம் எப்போதும் போல் பலதரப்பட்ட மக்களை உள்ளடக்கி நிரம்பிக்கொண்டிருந்தது.நான் உட்கார்ந்திருந்த இடத்தில் சுமார் 30 பிலிப்பினோக்கள் இருந்தார்கள் அதோடு நாற்காலில் உட்கார்ந்து தூங்க முடியாத பல ஐரோப்பியர்கள் கீழே படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்கள்.விடியற்காலை பொழுதென்றாலும் பல கடைகளில் வியாபாரம் ஓரளவு சுருசுருப்பாகவே இருந்தது.22K தங்கம் U$ 34.19 போட்டிருந்தது.சிங்கப்பூரை Compare செய்தால் விலை குறைவு என்று தோனியது.
மணி காலை 6 ஆனது,சரி தெரிந்த மக்கள் யாருக்காவது தொலைப்பேசலாம் என்று Etisalat அட்டையை பணம் மாற்றி வாங்கினேன்.மினிமமே 30 திராம் தானாம்,பகல் கொள்ளையாக தோனியது,வேறு வழியில்லாமல் வாங்கினேன்.உறவினர் வீட்டுக்கு,நண்பர்கள் பலரிடம் பேசிய பிறகு அட்டை 25 திராம் சொச்சம் காண்பித்தது.கடைசியாக ஒரு நண்பருக்கு தொலைப்பேசினால் வாய்ஸ் மெயில் வந்தது அதற்கு தேவையான விபரங்களை கொடுத்துவிட்டு எனக்கு உண்டான விமான நுழைவு வாயிலுக்கு போகலாம் என்று லிப்ட் பக்கம் காத்திருந்தேன் அப்போது தான் உறவினர்க்கு இன்னும் 30 நிமிடங்களில் தொலைபேச வேண்டும் என்ற ஞாபகம் வந்தது.கடைசியாக பேசிய பிறகு அட்டையை எடுத்தோமா?!
போச்சு ..திரும்ப போய் அந்த தொலைப்பேசியில் பார்த்த போது அதில் இல்லை.துபாய்க்கு தெண்டம் அழதாகிவிட்டது.
விமான சோதனைகளை முடித்த பிறகு மஸ்கட் போகும் விமானத்தில் உட்கார்ந்த வெகு நேரமாக விமானம் கிளம்பவில்லை அப்போது விமானியிடம் இருந்து அறிவிப்பு ஆதாவது தெரிவிக்கப்பட்ட அளவுக்கு மேல் உள்ள ஒரு பொருளை ஏற்றுவதில் குழப்பமாம் இன்னும் 10 நிமிடங்களில் முடிந்துவிடும் என்று.துபாயை விட்டு எழும்பும் போதே விமானத்தில் இருந்து எனக்கு பழக்கப்பட்ட இடங்களை பார்த்துக்கொண்டு வந்தேன்.ஓரிடத்தில் மணல் நிறம் மாறுபட்டு சிகப்பு நிறத்தில் இருந்தது அந்த இடத்தில் மட்டும் ஏன் அப்படி மாறுகிறது என்று தெரியவில்லை.சுமார் 8 நிமிடங்களுக்கு பிறகு பாலைவன மணல் போய் மலைக்குன்றுகள் ஆரம்பித்துவிடுகிறது.இதை முன்னிருத்தி வேறு என்ன வியாபாரம் பண்ணப்போகிறார்களோ!!
என்ன தான் விமான நேரம் 1 மணி என்று போட்டிருந்தாலும் 40 நிமிடங்களிலேயே முடிந்துவிடுகிறது அதனால் வெறும் 5 நிமிட கால தாமதமாக மஸ்கட் வந்து சேர்ந்தேன்.அளவில் சிறிய விமான நிலையம்.
என்னை அழைத்துப்போக எங்கள் நிறுவனத்தில் இருந்து ஒருவர் வந்து இருந்தார்.வந்த உடனேயே ஏதாவது ஒரு தொலைப்பேசி நிறுவனத்தில் சிம் கார்டு வாங்கிக்கச்சொன்னார்.அதிசியமாக இருந்தது என்னுடைய கடவுச்சீட்டை மட்டும் அடையாளப்படுத்தி சிம் கார்ட் கொடுத்தது.எல்லாம் 2 ரியால்,3 ரியால் என்று கேட்கும் போது நம்மூர் 1 ரூபாய்/2 ரூபாய் மாதிரி தெரிகிறது.ஆனால் 1 ரியால் = 130 ரூபாய் (கிட்டத்தட்ட).சிம் கார்ட் போட்டு வண்டியில் 120 கிமீட்டர் வேகத்தில் போய்கொண்டிருக்கும் போதே வீட்டுக்கு தொலைப்பேசி விபரத்தை சொன்னேன்.மஸ்கட்டில் இது பிரதான சாலை கடற்கறையை ஒட்டியபடியே பல நூறு கிலோமீட்டர்கள் ஓடுகிறது.வழவழப்பான சாலை,அதிக பட்ச வேகம் 120 கி.மீட்டர் என்று காண்பிக்கிறது.வெய்யிலின் சூடு இப்போது தணிய ஆரம்பித்திருப்பதாக சொன்னார்கள்.
அலுவலக கெஸ்ட் ஹவுஸ் சுமார் 40 கிமீட்டர் தூரத்தில் இருந்தது. படுவேக ஸ்பீடில் வந்தது தெரியவில்லை. பரூக் அல் செட்டி என்னும் கட்டிடம்.கொஞ்சம் எம்மி பார்த்தா கடல் தெரியும்.
ஒரு மணி நேர அவகாசத்தில் குளித்து அலுவலகம் செல்ல தயாரானேன்.ஒவ்வொருவராக அறிமுகம் ஆனது.உடனே வீடு பார்க்கும் வேலை ஆரம்பித்துவிட்டார் இங்குள்ள அதிகாரி.பல வீடுகள் Flat இல் காலியாக உள்ளன அதுவும் புதிதாக கட்டியவை.பெரிய அறைகள் சதுரம்,முக்கோணம் என்ற பல வடிவங்களில் இருந்தன.பெரும்பாலான அறைகள் கூடவே கழிப்பறையும் இருந்தது.ஒரு அறையில் வரும் கழிப்பறை/குளியல் அறையில் Tub முறையும் இருந்தது.முழுகி,ஊறி குளிக்கும் அளவுக்கு காலை வேளைகளில் நேரம் கிடைக்குமா என்று தெரியவில்லை ஆனாலும் அதில் குளிக்கும் ஆர்வம் இப்போது வந்துள்ளது.
2 அறை வீடுகள் 450 ரியால் சொல்கிறார்கள்,3 அறை 500 ரியால் சொல்கிறார்கள்.பல இடங்கள் நடந்து போய் சாமான்கள் வாங்கி வரக்கூடிய நிலையில் இல்லை.வண்டி மிக மிக அவசியம்.இது வரை பொது பேருந்து கண்ணில் படவில்லை.
இன்னும் வரும்...
10 comments:
All the best for your new assignment. Keep in Touch Anna.
ஒரு வருடத்தில் துபாய் சிங்கப்பூர் மஸ்கட் என மாறிகிட்டே இருக்கிங்கேலே எப்படி
நான் ரெண்டரை வருசமா புஜைராவுல குப்பை கொட்டிகிட்டு இருக்கேன்
நன்றி ஜோசப் பால்ராஜ்.
சங்கரராம், எல்லாமே நிதி நெருக்கடி பிரச்சனை தான்.மஸ்கட் கேட்காமல் வந்து விழுந்த பழம்.
சிங்கை - துபாய் - சிங்கை - மஸ்கட் என ரொம்பப் போராட்டமா இருக்கே!!
வாங்க இ.கொத்தனார்,இது தான் கடைசி வெளிநாட்டு பணி என்று இப்போதே சொல்லிட்டேன் மற்றபடி ஆண்டவன் கட்டளை தான். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
சுவாராசியமாக இருந்தது படிக்க
நன்றி கிரி.வரும் போது உங்களுக்கு தொலைப்பேச மறந்திட்டேன்.Sorry.
வாடகை அதிகமா இருக்கே. அதுதான் மக்கள் ஷேர் பண்ணிக்கிறாங்களா?
குடும்பம் வந்துட்டால் இப்படி ஷேர் பண்ணி இருப்பதும் கொஞ்சம் கஷ்டம் இல்லையோ????
வாடகை அதிகம் தான் துளசி என்ன பண்ணுவது? துபாயை நினைக்கும் போது இங்கு தேவலை என்று நினைக்கிறேன்.
இங்கேயே இருக்கப்போகிறோம் என்றால் துணிந்து முடிவெடுக்கலாம்,வரப்போகிற மனைவி மக்கள் 3 வாரம் அல்லது 2 வாரத்திலேயே பொழுது போக்க/போக இடமில்லாமல் அவர்களே போய்விடுவார்கள்.இது ஒரு சாம்பிள் தான்,பள்ளிக்கூட கட்டணங்களை நினைத்தால் குடும்பத்தை கொண்டுவருவதெல்லாம் வேஸ்ட்.
Post a Comment