புதுப்புது தொழிற்நுட்பங்கள் கட்டுமானத்துறைக்கு புதிதல்ல ஆனால் அதை வெளிக்கொணர்ந்து பொதுவில் வைக்கும் போது தான் சாதரண மக்கள் அதுவும் தொழிற்சார் பதிவுகளை படிக்கும் மக்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கும்,அந்த வகையில்..
கட்டிடங்கள் அஸ்திவாரத்தில் இருந்து ஆரம்பித்து மேலே வருவார்கள்.இது பொதுவாக கடைபிடிக்கும் முறை.இம்முறையை கொஞ்சம் மாற்றி மேலிருந்து கீழேயும் அதே சமயத்தில் மேலேயும் (இரு முனை தாக்குதல்) வேலை நடைபெற வைக்கும் முறை தான் இந்த டாப் டவுன் என்ற முறை.
சிங்கையில் இம்முறை ஒரு சில வேலைகளில் மட்டுமே செயற்படுத்தப்பட்டது.ஒபயாஷி கட்டுமான நிருவனம் தன்னுடைய தலைமை அலுவலகத்தை இம்முறையில் கட்டியபோது அது பரபரப்பாக பேசப்பட்டது.சிங்கை கட்டுமானத்துறை முதன் முதலுலில் இங்கு தான் செயற்படுத்தியது என்று நினைக்கிறேன் அதன் பிறகு அங்கொன்றும் இங்கொன்றுமாக இம்முறையை பல இடங்களில் கடைபிடித்து வருகிறார்கள் அதில் முக்கியமானவை
சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனையம்.
சமீபத்தில் திறக்கப்பட்ட ஆர்சட் சாலையில் இருக்கும் கடைத்தொகுதி.
ஆமாம்,இதை எப்படி செய்கிறார்கள்?
முதலில் கட்டப்படவேண்டிய கட்டிடத்தை சுற்றி டயபரம்(Diaphram) சுவரை கட்டி வெளி மண் சரியாமல் இருக்க கட்டப்படவேண்டும்.அதன் பிறகு தரை மட்டத்தில் இருக்கும் நிலையில் உள்ள ஸ்லேப்யை(Slab) போடவேண்டும்.இப்படி செய்வது கட்டிடத்தை சுற்றி உள்ள டையபரம் சுவருக்கு முட்டுக்கொடுத்த மாதிரியும் இருக்கும் அதே சமயத்தில் தரைக்கு கீழே/மேலே உள்ள வேலைகளை ஆரம்பிக்கவும் உதவியாக இருக்கும்.
டையபரம் சுவர் எப்படி செய்கிறார்கள்? கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
தரை மட்டத்தில் உள்ள ஸ்லாபில் போதிய அளவு துவாரம் கொடுத்து அதன் மூலம் கீழே தோண்டும் மண் மற்றும் போடப்போகும் கான்கிரீட்கள் கொண்டு செல்லப்படும்.போதிய அளவு மண் தோண்டியவுடன் திரும்பவும் வெளிச்சுவருக்கு முட்டுக்கொடுத்துவிட்டு தள கான்கிரீட்டை போட்டுவிடுவார்கள்.
கீழே உள்ள படங்களை பாருங்கள் மிக எளிதாக புரியும்.சந்தேகம் இருந்தால் கேளுங்கள் எனக்கு தெரிந்த அளவில் சொல்கிறேன்.
நன்றி:LTA
No comments:
Post a Comment