Saturday, July 26, 2008

நடந்தது -(துபாய் வேலை)

முதல், இரண்டாவது, பதிவுகள்

இதற்கு முந்தைய பதிவு.

இப்படி பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் தீபாவளியும் வந்தது,அலுவலகத்திலும் அவ்வளவாக வேலையில்லாததால் ஒரு 15 நாட்கள் விடுமுறைக்கு விண்ணப்பித்து சென்றேன்.திரும்ப நவம்பரில் வந்தபிறகும் அந்த நிறுவனத்திலிருந்து எந்தவிதமான பதிலோ,தொலைப்பேசியோ இல்லாதிருந்தது.இந்த முறை ஊருக்கு போய் வந்ததில் இருந்து இங்கு (வெளிநாட்டில்) சம்பாதிப்பதில் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லாமல் போய்விட்டது ஏனென்றால் ஒரு நண்பன் காண்பித்துக்கொடுத்த வழி.அவன் இப்போது நான் வாங்கும் சம்பளத்தை பார்த்து சிரிக்கிறான்.நம் ஊரிலேயே இதற்கு மேல் சம்பாதிக்கும் போது நீ ஏன் வெளிநாடு போய் சம்பாதிக்கனும் என்று வழி காட்டினான்.இருந்தாலும் துபாய் போகும் நிலை இப்படி கைமேல் வரும் போது இதையும் பார்த்துவிடலாம் என்ற எண்ணத்துடன் இருந்தேன்.குடும்பம் வேறு திரும்பி வர அவ்வப்போது அழைப்பு விடுத்தது என்றெல்லாம் சேர்ந்து இனி எங்கிருந்தாலும் 2 வருடங்கள் மட்டுமே வேலை செய்வது என்று முடிவுசெய்தேன்.

திரும்பி வந்ததும் புதிய இடத்தில் வேலை என்று வேறொரு இடத்துக்கு மாற்றப்பட்டேன்.புதிய தலை.அவருக்காக ஆடவேண்டிய கட்டாயம்.

புதிய வேலை இடம் என்னவோ பக்கத்தில் தான் இருந்தது ஆனால் செய்யப்போகும் வேலை இடத்திற்கு உள்ளே செல்ல சிறப்பு அனுமதி வாங்கவேண்டும் என்றும், அதோடிலில்லாமல் அந்த வேலை கிடைக்க சில மாதங்கள் ஆகும் என்றார்கள்.இங்கு தான் நம்ம சனி பகவான் வேலையை காண்பித்தார்.ஓரளவு வேலை இருந்தால் இருக்கும் 8 மணி நேரத்தில் இழுத்துப்பிடித்து வேலை காண்பிக்கலாம்,ஒன்றுமே இல்லை என்றால் கணினி முன்பு எவ்வளவு நேரம் தான் முடங்கிக்கிடப்பது?சரியான வேலை கொடுக்கத்தெரியாத ”தலை”,புரியாத வேலைகள்,ஏவல்கள் என்று எனக்கும் தலைக்கும் இடைவெளி அதிகமாகிக்கொண்டு போய்கொண்டிருந்தது.தினமும் வேலைக்கு வரவே டென்ஷனுக்காகத்தானோ என்று? ஒரு வித வெறுப்புடன் நாட்கள் கழிந்தன.

வெகு நாட்கள் கழித்து நானே அந்த (துபாய்) கம்பெனியை அழைத்து விபரங்கள் கேட்டேன்.என்னை புரிந்துகொண்டு சில நாட்கள் இடைவெளியில் அழைத்தார்கள்,அதற்கு முன்பு சம்பள விபரங்களை மின் அஞ்சலில் அனுப்பி இது சரி யென்றால் மேற்கொண்டு பேசலாம் என்றார்கள்.இங்கு இப்போது வாங்கும் சம்பளம்,அங்கு கிடைக்கப்போவது முதலியவற்றை கணக்கிட்டு, அங்கு நீங்கள் கொடுக்கப்போகும் வாடகைதான் குறைவாக இருப்பது போல் இருக்கிறது என்று சொல்லிவிட்டு,சந்திக்கலாம் என்றேன்.உடனே அவரிடம் இருந்து திரும்ப ஒரு மின்னஞ்சல் “அதை வேறு இடத்தில் உயர்த்திக்” கொடுக்கிறோம் என்று சொல்லி நான் எதிர்பார்க்காத அளவுக்கு உயர்த்திக்கொடுத்தார்.

முதல் நேர்காணலின் போது தங்கவசதி செய்து தருவதாக சொல்லிவிட்டு பிறகு வாபஸ் வாங்கிக்கொண்டார்கள்.சித்தப்பா பையனிடம் தொடர்பு கொண்டு விபரங்கள் வாங்கிய பிறகு அந்த பிரச்சனை அடங்கியது.அப்போது நான் சொல்லியபடி அவர்கள் வேலைக்கான உத்திரவை கொடுக்கும் நாளில் இருந்து ஒரு மாதம் கழித்து அவர்களிடம் சேருவதாக சொல்லியிருந்தேன்.ஆதாவது மார்ச் 1ம் தேதி.

அப்போதிருந்த நிறுவனத்தில் ஊக்கத்தொகை மார்ச் இறுதியில் கொடுப்பார்கள் அதை 2 வாரங்களுக்கு முன்பு அறிவிப்பார்கள்.நான் வேலை செய்ய ஆரம்பித்த 3 வருடங்களுக்கு கால்/அரை மாதம் என்று கொடுத்துவந்தவர்கள் போன வருடம் தான் சும்மா அள்ளிக்கொடுத்தார்கள்,அதுவே இந்த வருடம் தொடரும் என்று எங்கள் புதுத்தலை ஒரு மீட்டிங்கில் கசியவிட்டார்.சரி வருகிறது தான் வருது Pro-rated படி கிடைக்கட்டும் என்று பிப்ரவரி இறுதியில் கால்கடிதாசி கொடுத்துவிடலாம் என்றிருந்தேன்.நண்பர்களிடம் இதைப்பற்றி சொல்லிக்கொண்டு இருந்தேன் அதில் ஒருவர் நேராக மனிதவள அதிகாரிக்கு தொலைப்பேசி விளக்கம் கேட்ட போது “மார்ச் இறுதிக்குள் கடிதாசி கொடுத்தால்,ஒரு சல்லிக்காசு கிடைக்காது” என்றார்.ஆதாவது நான் மார்ச் இறுதிவரை வேலை பார்க்கவேண்டும் என்றும் அதற்குப்பிறகு நோட்டிஸ் Period கொடுக்கவேண்டும் என்று சொன்னபோது ஆடிப்போய்விட்டேன்.கணக்குப்போட்டு பார்த்த போது மே மாதம் தான் அந்த துபாய் கம்பெனியில் சேரமுடியும் என்று தெரிந்தது.இதை எப்படி அந்த புதுக்கம்பெனிடம் சொல்வது? சொன்னால் ஏற்பார்களா? முடியாது என்றால் விட்டது ஆசை விளாம்பழ ஓட்டோடு என்று நினைத்துக்கொள்ளவேண்டியது தான் என்று நினைத்து நாட்களை ஓட்டினேன்.

இரண்டாம் நேர்காணல், மனிதவள அதிகாரியுடன் நடந்தது,விபரங்களை அடுக்கினார்,இந்தியர்களை அங்கு அனுப்ப சில விதிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும் என்றும் உங்கள் சான்றிதழ்களை சான்று முத்திரை குத்தவேண்டியிருக்கும் என்று விபரங்கள் சொன்னார்,சிலவற்றை நீங்கள் செய்யவேண்டும் என்றும் மீதியை நிறுவனம் கவனித்துக்கொள்ளும் என்று சொன்னபோது வெறுமனே தலையாட்டிக்கொண்டு இருந்தேன்,அதன் விபரீதம் தெரியாமல்.கடைசியாக நீ எப்போது எங்களிடம் சேர்வாய்? என்றார்.அதற்கு நான் ”மே மாதம்” என்றேன்.நீ முதலில் மார்ச் மாதம் சேர்வதாக சொன்னார்களே இப்போது இப்படி சொல்கிறாய்? என்றார்.விபரங்களை சொன்னதும் என்னை முதலில் நேர்காணல் செய்த நபருடன் தொலைப்பேசி இப்படி சொல்கிறார்,என்ன பண்ணலாம்? என்றார்.அவரோ கூலாக “பரவாயில்லை” அப்போதே வரட்டும் என்று சொல்லிவிட்டார்.
கூலாக நான் ஒரு பெருமூச்சு விட்டேன்.அதன் பிறகு அந்த அதிகாரியை அலுவலகத்தின் கீழே உள்ள காப்பிக்கடையில் சந்தித்தேன்.அவரே எனக்கு தேநீர் வாங்கிக்கொடுத்து பேசிக்கொண்டு இருந்தார்.நான் சொல்வதை பொருமையுடன் கேட்டு என்னை புரிந்துகொண்டார்.இவர் பேசிய விதம் மற்றும் நடந்துகொண்ட விதம் இவர் ஒரு அருமையான மனிதர் என்பதை சொல்லாமல் சொல்லியது.

மார்ச் இரண்டாம் வாரம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டது,போன வருடத்தை விட ஒரு மாதம் கம்மி ஆனால் பரவாயில்லை.

மார்ச் இறுதியில் வங்கியில் பணம் ஏற்றப்பட்ட பிறகு ஒரு வாரம் கழித்து “கடிதாசியை” கொடுத்தேன்.தலை இதை பார்த்து வேறு சைட்டுக்கு மாற்றவா? என்றார்.
ஆளை விடுங்க சாமி என்றேன். அதிகமாக இழுக்காமல் கொடுத்துவிட்டார் ஆனால் என்னுடைய உபயோகிக்காத லீவில் மனிதர் விளையாட ஆரம்பித்துவிட்டர்.
கால் கடிதாசியில் என்னுடைய உபயோகிக்காத விடுமுறையை முடிந்தால் தள்ளிவிடும்படி கேட்டேன் அதற்கு முடியாது என்று மறுத்து பிறகு ஏதோ கேம் விளையாடி வாங்கினேன்.

சுமார் 15 நாட்கள் இருந்ததால் ஊருக்கு கிளம்பினேன்.

புதுக்கம்பெனி,நான் மே மாதம் தான் சேரப்போவதால் என்னுடைய appointment கடிதத்தை ஏபரல்-08 கடைசியில் தான் கொடுத்தார்கள்.

மீதி தொடரும்.

4 comments:

 1. துபாய்க்கு போயாச்சா குமார்?

  ReplyDelete
 2. இல்லங்க திவா,பதிவு மாதிரி இழுத்துக்கொண்டே போகிறது.

  ReplyDelete
 3. ///சரியான வேலை கொடுக்கத்தெரியாத ”தலை”....///

  அதை விட பெரிய ஹிம்சை கிடையாது.:( அனுபவித்ததால் எனக்கு புரிகிறது

  ReplyDelete
 4. வாங்க கபீரன்பன்
  அங்கேயும் இதே கதை தானா? கொடுமை தான்.
  என் தலை இத்தனைக்கும் Professional Engineer. :-))

  ReplyDelete

ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?