சற்று முன் தி.நகர் பக்கம் போனேன்.முன்பகல் வேளை என்பதால் கூட்டம் குறைவாக இருந்தது.பனகல் பார்க்கை சுற்றி சென்னை சில்க்ஸ்க்கு மட்டுமே பிரத்யோகமாக உள்ள நிறுத்தும் இடத்தில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியவுடன் கட்டணத்துக்காக அனுகியவுடன் அங்கிருந்தவர் வெளியேரும் போது எங்கள் கடையில் வாங்கிய ரசீதை மட்டும் காண்பியுங்கள் போதும் என்றார்.அட! நிறுத்தம் இலவசமா? என்று நினைப்புடன் வெளியேறினேன்.
மச்சினருக்கு வரப்போகும் திருமண நாளுக்காக ஏதாவது பரிசு வாங்கலாம் என்ற எண்ணத்துடன் கொஞ்சம் பக்கத்தில் இருந்த ரத்தினா ஸ்டோருக்கு போனோம்.என்ன வாங்கப்போகிறோம் என்று முன்னமே முடிவு செய்தபடியாமல் அதிகம் சுற்றாமல் நேராக அங்கு போய் இருந்த மின்சமைப்பானில் தரமான ஒன்றை எடுத்து பணம் கட்டிவெளியில் வந்தோம்.
என் கண்ணுக்குத்தான் படவேண்டுமா? இது.பக்கத்தில் நடக்கும் மேம்பால வேலைகள் முடிவடையும் நிலையில் பல பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததன.இதைச்செய்யும் நிறுவனம் Gammon India.அவர்கள் அலுவலகம் அந்த பாலத்தின் கீழேயே உள்ளது படம் பார்க்க.
பாலத்தின் முகப்பு (ரெங்கநாதன் தெரு பக்கம்)கீழே
பாலத்தின் பக்கவாட்டு காட்சி
இரு பக்கமும் உள்ள தடுப்புச்சுவர் (மாதிரி)
யார் அடிபட்டால் என்ன? வேலை முடிந்தால் சரி என்று எண்ணுகிறதோ "Gammon",ஆமாம் இதையெல்லாம் கட்டுப்படுத்த யாருக்காவது அதிகாரம் இருக்கா? இல்லை யாராவது தூங்குகிறார்களா?வேலையிட பாதுகாப்பு மிக மிக மோசம்.
உதாரணம் 1
முறையான தளம் இல்லாத வேலை...
உதாரணம் 2
உட்கார்ந்து இருக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு பட்டை எங்கே??
உதாரணம் 3
பெயின்டிங்க்,அதுவும் ஸ்பிரே பெயின்டிங்க் அடிக்கும் இடத்தை சுற்றி தடுப்பு ஏற்படுத்தி அதில் வெளியாகும் துகள்கள் வெளியேறாமல் கட்டுப்படுத்த வேண்டும் அது சுத்தமாக இல்லை,அந்த வழியே போகும் பொதுமக்களை பார்க்கும் போது மிக கஷ்டமாக இருந்தது.இது கூட தெரியாத இவ்வளவு பெரிய நிறுவனத்துக்கு குத்தகையை கொடுத்துவிட்டு தூங்கும் அதிகாரிகளை என்னவென்று சொல்வது.
யாராவது பொது நல வழக்கு போட்டு நீதிமுன்பு நிறுத்தவேண்டும்.
ஆறுதலான செய்தி: இந்த மேம்பாலம் இந்த வருடத்துக்குள் திறக்க இருப்பதாக திரு ஸ்டாலின் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கார்.
2 comments:
சென்னையில் எல்லா அரசு கட்டுமாணப்பணிகளும் இப்படித்தான் நடைபெறுகின்றன.
மனதை தேற்றிக் கொள்ளுங்கள்.
வாங்க வெங்கட்ராமன்
வேறு வழி? நம் பொது ஜனத்துக்கு பொருமை ஜாஸ்தி தான்.
என்றைக்காவது பொருமை இழந்துவிடுவார்களோ என்று பயமாகவும் இருக்கு.
Post a Comment