Sunday, June 22, 2008

திருவண்ணாமலை

பலருக்கு முக்தி கொடுத்துக்கொண்டு இருக்கும் இத்தலத்தை காணும் பாக்கியம் இதுவரை வாய்க்கவில்லை ஆனால் சமீபத்தில்(நேற்று) எடுத்த படங்கள் கிடைத்தது. என்னை மாதிரி பலர் இருக்ககூடும் என்பதால் அதை இங்கு வெளியிடுகிறேன்,பார்த்து மகிழுங்கள்.








இன்னும் நிறைய படங்கள் இருப்பதால் முடிந்தால் அடுத்த பதிவில் போடுகிறேன்.

11 comments:

கிஷோர் said...

திருவண்ணாமலையில் நான் 4 வருடம் கல்லூரியில் பயின்றிருக்கிறேன். மிகச்சிறந்த ஊர். ஆனால் பௌர்ணமி அன்று மட்டும் செல்லக்கூடாது. அவ்வூரின் அழகை ரசிக்கமுடியாது.

நல்ல அதிகாலையில் கிரிவலம் சென்று பாருங்கள். மதங்களுக்கு அப்பாற்பட்ட அமைதி கிடைக்கும். கல்லூரி நாட்களில் நானும் சில நண்பர்களும் போர் அடிக்கும்போதெல்லாம் கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு விடிகாலை கிரிவலம் செல்வோம்.

அது ஒரு அழகிய கனாக்காலம்.....

துளசி கோபால் said...

என்னங்க இது நம்மாளு காலெல்லாம் மெலிஞ்சு கிடக்கறார்?

(-:

மத்தபடி படங்கள் அருமை. நானும் போயிருக்கேன்.

முக்தி கிடைச்சிருக்குமுன்னு ஒரு நம்பிக்கைதான்.

வடுவூர் குமார் said...

வாங்க கிஷோர்
இன்னும் எனக்கு சரியான நேரம் அமையவில்லை போலும்... போக முடியவில்லை.
பௌர்னமி தகவல் - ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறேன்.
கடலூர் விஷயம் என்னவாயிற்று?

வடுவூர் குமார் said...

ஆமாங்க துளசி - ருக்குவை இப்படி வைத்திருப்பதும் தான் என் கண்ணில் தான் பட்டது.வரும் வருமானம் பற்றவில்லையா? அல்லது மனம் இல்லையா என்று தெரியவில்லை.

rahini said...

nalla padagkal
ungkal pukaipadam muulam
intha kovilai paarththa inpam
nanri

வடுவூர் குமார் said...

அப்படியா? ராகினி
மிக்க சந்தோஷம்.

கோவி.கண்ணன் said...

குமார்,

படங்கள் தெளிவாக இருக்கிறது.

யானைக்கு தீனி சரியாகப் போடமாட்டார்கள் போல, எலும்பும் தோலுமாக இருக்கிறது.

கோவி.கண்ணன் said...

//துளசி கோபால் said...
என்னங்க இது நம்மாளு காலெல்லாம் மெலிஞ்சு கிடக்கறார்?

(-:
//

துளசி அம்மாவும் யானை மெலிந்திருப்பதை கவனித்து இருக்கிறார்கள், அவங்க நண்பர் ஆச்சே ! :(

கிஷோர் said...

கடலூர் விவகாரத்தில் சற்று முன்னேற்றம் தெரிகிறது. என் கவனத்தை மற்ற சுற்றுப்புறச்சூழல் ப்ரச்சனைகளிலும் செலுத்தலாம் என்று இருக்கின்றேன். என் கம்பெனியில் என்னை சிங்கையில் இருந்து மலேசியா தள்ளிவிட்டு விட்டார்கள்.
விரைவில் சிங்கை வருவேன் என்று நம்புகிறேன். அடுத்த முறை இந்தியா செல்லும்போது நினைவுபடுத்துங்கள். திருவண்ணாமலை ப்ளான் போட்டு தருகிறேன். கட்டுமான ப்ளான் அல்ல. :‍)

S.Muruganandam said...

படங்கள் அருமை வடுவூர் குமார் அவர்களே.

துளசி கோபால் said...

என்ன குமார் இப்படிச் சொல்லிட்டீங்க?

திருவண்ணாமலைக்கு வருமானம் பத்தலையா?

கூட்டம் எப்படி அம்முதுன்னு பாருங்க.

எல்லாம் மனுசனுங்க தோலிருக்கச் சுளை
முழுங்கிக்கிட்டு இருக்காங்க போல.

பாவம் ருக்கு.(-: