எப்படியும் ஓராண்டில் குறைந்த பட்சம் இரண்டுதடவையாவது நடைபெரும் வழக்கம் கொண்டது இத்திருவிழா.இங்கு இச்சமயத்தில் சில பொருட்கள் குறைந்தவிலையில் கிடைக்கும்,தேடி அலையவேண்டும்.
இம்முறை என் கண்ணில் பட்டவரை GPS யின் விற்பனை அதிகமாவது போல் தோன்றியது.விலை 300 வெள்ளிக்கு கீழ் இல்லை. (1 வெள்ளி= 30 ரூபாய்).கார் கைவசம் இல்லாத்தால் இதைப்பற்றி கவலைப்படவில்லை.மற்றபடி வழக்கம் போல் மடிக்கணினி,கேமிரா & LCD,Plasma தொலைக்காட்சி திரைகளில் மக்கள் கூட்டம் காணமுடிந்தது.
சில படங்கள்...
எவ்வித சாமான்கள் வாங்கும் எண்ணம் இல்லாத்தால் அப்படியே சுற்றிவிட்டு மணியை பார்த்தால் மாலை 5.15.பதிவர் கூட்டம் 6 மணி என்பதால் அப்படியே கணக்கு போட்டேன்,சரியான சமயத்துக்கு போய்விடலாம் என்று எண்ணி நடக்க ஆரம்பித்தேன். 5.30 க்கு சிட்டிஹால் நிலையம். மின்வண்டி எடுத்து பெடோக் வந்த போது 5.45.கோவியார் சொன்ன பேருந்து வெளியில் உள்ள நிறுத்தமா? அல்லது பேருந்து நிலையத்தின் உள்ளேயே என்று பார்த்தபோது அதற்கு இன்னும் நடந்து நிலையத்தின் உள்ளே போகனும் என்று தெரிந்தது.தேடிப்பிடித்து பேருந்துக்கான இடத்தை அடைந்தபோது மிகப்பெரிய வரிசை நின்றிருந்தது.அதற்குள் மணி ஆறாகியிருந்தது.செந்தில் நாதனை கூப்பிட்டு நிலவரத்தை சொல்லி வர சிறிது நேரம் ஆகும் என்று சொன்னேன்.பேருந்து வந்து அங்கு போய் சேரும் போது மணி 6.30 க்கு மேலாகியிருந்தது.
மற்றவை.... கோவி பதிவில் பார்க்கவும்.
2 comments:
மின் வண்டி?
e-bike ஆ?
இது பத்தி கொஞ்சம் எழுதுங்க.
இல்லைங்க திவா
நம்மூர் எலக்ரிக்வண்டி மாதிரி தான், இங்கு இதை MRT (Mass Rapid Transport) என்பார்கள்.
பழைய பதிவு ஒன்றில் சலனப்படம் ஒன்று கூட போட்டிருந்தேன்.
Post a Comment