தலைப்பு கவிதை மாதிரி இருக்கா?
அது என் தப்பு இல்லை, இது பாலகுமாரனனின் சுயசரிதை போல் எழுதிய புத்தகத்தின் தலைப்பு.
ஆரம்பத்தில் அவ்வளவு சுவாரஸ்யம் இல்லாமல் தான் படிக்க ஆரம்பித்தேன்,சில வரிகள் படித்தவுடன் ஆர்வம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்தது.என்ன தான் இவர் என்னவிட மூத்தவர் என்றாலும் பெரும்பாலான நிகழ்வுகள் எனக்கு நேர்ந்த மாதிரியே இருப்பதால் படிக்கப் படிக்க ஆர்வம் கூடுகிறது.அப்படி படித்த ஒரு பத்தியை தான் கீழே கொடுத்துள்ளேன்.திகவின் ஆதிக்கம் பெருகிய காலத்தில் இந்த மாதிரி ஆட்கள் கோவில்கள் பக்கத்தில் இருந்து கொண்டு பகுத்தறிவை வழங்கிக்கொண்டு இருப்பார்கள்.
இந்த நாவலில் பெரும் பகுதியை அவருடைய குரு விசிறிச்சாமியார் என்று புகழப்பட்ட “யோகிராம்சுரத்குமார்” க்கு ஒதுக்கிட்டார்.அவருடன் இவருக்கு உள்ள அனுபவம் இவரிடம் மறைமுகமாக கொண்டுவிட்ட காஞ்சிப்பெரியவர் என்று சுவாரஸ்யமான நிகழ்வுகளை அருமையாக வரிசைப்படுத்தியுள்ளார்.இவர் குமாரனுக்கு விசிறிச்சாமியார் முன்னின்று பூணூல் கல்யாணம் செய்துவைத்தது ஆச்சரியப்படவைக்கிறது.அந்த நிகழ்வு குறுந்தட்டில் இருக்காம்,யாராவது தெரிந்தால் யூடியூபில் ஏத்துங்கப்பா.
பாலகுமாரன் சினிமாவில் இருந்த போது ஏற்பட்ட அனுபவங்கள்,அவரது மனைவி சுகவீனம் அடைந்து பிழைத்தது மற்றும் இவர் திறந்த மார்புச்சிகிச்சை செய்துகொண்டது மற்றும் புகைப்பதற்கு எதிராகவும் சொல்லியுள்ளார் நாள் ஒன்றுக்கு 120 குச்சி பிடித்தவர்.இப்போது விட்டுவிட்டார் என்பது ஆறுதல் செய்தி.
பாலகுமாரனை பற்றி அறிந்துகொள்ள படிக்கலாம்.
12 comments:
nalla pathiwukal
anpudan
rahini
நன்றி ராகினி
முதல் வருகைக்கு.
நம்மூருகாரருன்னு (நாகை) தெரிஞ்சிது,
வணக்கம்,
நீங்கள் அவருடைய "குரு" வும் படிக்கலாம்,
புகிட் மேராவில் பார்த்த ஞாபகம்,
சஹ்ரிதயன்
வாங்க சஹ்ரிதயன்
புக்கிட் மேராவிலா?
அங்கு வந்து ரொம்ப நாளாகிவிட்டது.
நாகையில் எங்கு சஹ்ரிதன்?
வருகை பதிவு.
நீலாயதாட்சி அம்மன் கோவில், மட விளாகம் தெரு,
சஹ்ரிதயன்
அட! அப்படியா சஹ்ரிதயன்
பள்ளிவிடுமுறை நாட்களில் சுற்றிய தெருக்கள் தான்.
நன்றி சௌரி.
குமார், வாழிய நலம், நீங்களும் பாலகுமாரன் வாசகர் என்பதில் பெருமகிழ்ச்சி, எனக்கு பாலகுமாரன் 'கடலோரக் குருவிகள்' மூலம் அறிமுகம், அதில் வரும் இரண்டு அத்யாயங்கள் (28, 29 or 30, 31 or 31,32 சரியாக நினைவில்லை, ஆற்றங்கரையோரம் அவர்களுக்கு பாடம் . . . என்று ஆரம்பிப்பதாக நினைவு) எனக்கு ஸ்கேன் செய்து அனுப்ப முடியுமா . . . அந்த இரண்டு அத்யாயங்களும் என் வாழ்க்கை பாதையை பண்படுத்தியவை . . . நன்றியுடன்
மார்க்கண்டேயன்,தற்போது மஸ்கட்டில் இருப்பதால் அப்புத்தகம் கையில் கிடைக்க வாய்ப்பில்லை,அப்படி கிடைத்தால் தருகிறேன்.
தங்கள் பதிலுக்கு நன்றி குமார், நானும் வெளிநாட்டில் இருப்பதால், முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறேன், கிடைக்கவேண்டிய சமயத்தில் கிடைத்தே தீரும் என்று நம்புகிறேன் . . . நன்றியுடன்
Post a Comment