ஒரு 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தவிகடனில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது,ஆதாவது (சரியான) அளவில் செய்யப்படும் பிரமிடுகளின் உள்ளே வைக்கப்படும் பொருட்கள் அதன் தன்மைகாட்டிலும் அதிக சக்தியை பெருகிறது என்பது தான்.அதன் விளக்கங்கள் அவ்வளவாக கொடுக்காத்தால் மேற்கொண்டு அதை ஆராயாமல் விட்டுவிட்டேன்.அதில் அவர் சொல்லியிருந்த ஒரு விஷயம் ஒரு சவர பிலேடை 10 வருடங்களாக முனை மழங்காமல் உபயோகித்து வருவதாக.அந்த நபர் குரோம்பேட்டையை சேர்ந்தவர் என்பது மட்டுமே ஞாபகம் வந்தது.தொடர்பு கொள்ள முகவரியில்லாத்தால் அப்படியே விட்டுப்போனது.
போன வாரம் நூலகம் போன போது கீழ் கண்ட மாதிரி ஒரு புத்தகத்தை பார்த்ததும் மீண்டும் ஆரம்பித்தது இதன் மீதான ஆர்வம்.
முகப்பு பக்கம்.
அதை எப்படி செய்வது என்ற அளவுகள் கீழே
இதில் சொல்லியுள்ள அவ்வளவையும் நம்ப முடியுமா? அப்படியே உண்மையாக இருந்தாலும் இன்னுமா? பட்டா போடாம இருப்பாங்க? என்ற எண்ணத்துடம் படித்துக்கொண்டிருந்தேன்.கீழே உள்ள பத்தியை படித்ததும் அப்படியே தூக்கிப்போட்டது. நிஜமாக இருக்குமோ!!
நான் சுமார் 17 வருடங்களாக தியானம் செய்து வருகிறேன் (அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கேன்). பல சமயங்களில் தூங்குகிறேனா? இல்லை என்ன செய்கிறேன்? என்று புரியாத நிலையில் தான் உள்ளேன்.பல நாட்கள் ஒரே எண்ணக்குவியல்களாகவே இருக்கும்.
இப்படிப்பட்ட இந்த நாட்களில் இந்த கை தூக்கி கும்பிடும் பழக்கம் எப்படியோ என்னையும் தொற்றிக்கொண்டது.என் மகன் கூட இதை கண்டுபிடித்து,”அப்பா,இது சந்தியாவந்தனத்தில் இல்லையே?” என்றான். ஏதோ சொல்லி மழுப்பிவிட்டேன்.இதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கு என்பதை இப்புத்தகம் படித்தபிறகே அறிந்தேன்.சில நிகழ்வுகளுக்கு நம் உடல் தன்னைத்தானே மாற்றி அமைத்துக்கொள்கிறது போலும்.
இந்த புத்தகத்தில் கண்ட மேல் விபரங்கள் பல ஆராய்சிக்கு உட்பட்டவை,படித்து பயன்பெருங்கள்.
நன்றி:திரு டி.வி.பாலு.
ஆனந்தவிகடன் படித்த அந்த காலத்தில் யூடியூப் இல்லாததால் முயற்சித்தவர்களை காணமுடியவில்லை.
இப்போது அதை காண ஒரு சுட்டி கீழே..
4 comments:
அந்த 'ப்ளேடு' விசயம் நானும் முந்தி எப்பவோ படிச்சிருக்கேன்.
கோவையில் எங்கியோ ஓரிடத்தில் பிரமிட் போல செஞ்சுருக்கும் அறையில் இருந்து தியானம் செய்யலாமுன்னுக்கூட வேற எங்கியோ படிச்ச ஞாபகம்.
காய்கறிகள்கூட இப்படிச் செஞ்ச பிரமிட்லே வச்சா வாடவே வாடாதாம்.
ஆனாலும் இந்த யூட்யூப்லே செஞ்ச பரிசோதனை சுவாரசியமாத்தான் இருக்கு.
'தியானம்'
செய்யும்போது எண்ணக்குவியல்களைத் தடுக்க முடியுமான்னு தெரியலை. ஆனா கவனிச்சுப் பார்த்தால் எப்படி ஒன்னுக்கொன்னு சம்பந்தமில்லாதது எல்லாம் வந்துபோகுதுன்னு பாருங்க. அது(வும்) ஒரு சுவாரசியம்தான்:-))))
வாங்க துளசி
எண்ணக்குவியல்களை தடுக்க முடியுமா?
முடியும் என்றே தோன்றுகிறது, சில சமயங்களில் மட்டும். :-)
Enaku Piramid Card Board Vendum ??
Raja I have no idea where its available.
Post a Comment