ஊரில் இருக்கும் வரை அதுவும் துக்ளக் கிடைக்கும் இடமாக இருந்தால் வாங்காமல் இருக்கமாட்டேன்.அதில் எதை ரசிக்கிறனோ இல்லையோ கேள்வி பதில் எல்லோரும் ரசிக்கும் படி இருக்கும்.
இங்கு வந்த பிறகு அவ்வப்போது வாங்குவது உண்டு அதுவும் கொஞ்ச நாளில் விட்டுப்போனது.சிரங்கூன் சாலை போவது குறைந்தது,உள்ளூர் அரசியலை இங்கிருந்து படித்து என்னவாகப்போகிறது என்ற எண்ணம் அதோடில்லாமல் வயசானதும் காரணமாக இருக்ககூடும்.
என் வேலை இடம் ஜூரோங் பக்கத்துக்கு மாறிய பிறகு சாப்பிட்டு முடிந்தவுடன் இருக்கும் நேரத்தை பக்கத்தில் உள்ள நூலகத்தில் கழிப்பேன்.அப்படி செலவழிக்கும் நேரத்தில் பல வார துக்ளக்குகள் கண்ணில் பட்டது. அப்படியே அள்ளிவிடலாமா? என்ற எண்ணத்தை தள்ளிப்போட்டு ஒவ்வொரு நாளாக ஒவ்வொரு புத்தகமாக படித்துவருகிறேன்.
அப்படி இன்று ஒரு கேள்வி - பதில் தான் கீழே...
கேள்வி: "துக்ளக்" க்கு போட்டியாக நீங்கள் எந்த பத்திரிக்கையை சொல்வீர்கள்?
பதில்: பாம்பு பஞ்சாங்கம்.
சிரிப்பை அடக்கமுடியாமல் அவசரம் அவசரமாக வெளியே ஓடிவந்துவிட்டேன்.
துகளக் மிக மிக இளைத்துவிட்டது,கொஞ்சம் வேகமாக காற்று அடித்தால் அவ்வளவு தான்.
10 comments:
:)
பாம்பு பஞ்சாங்கமா , நல்ல நகைச்சுவைதான்
வாங்க ஜெகதீசன்,சின்ன அம்மினி
ரெண்டுத்திலுமே ஆருடம் தானே? அதன் பயப்படுகிறார்.
பல வருடங்களாக துக்ளக் வாசகன்.
உங்களுக்கு அங்கு கிடைப்பதில் சிரமம் இருந்தால் அவ்வப்போது சில ரத்தினங்களை அனுப்புகிறேன். :-))
பாம்பு பஞ்சாங்கம்....ஒரிஜினலா என்று பார்த்து வாங்குங்கள்... அவற்றில் ஹலோக்ராம் முத்திரை இருக்கும்.
:)
பாம்பு பஞ்சாங்கத்தில் பெய்யும் மழை கணக்கு இருக்கும் பார்த்திருக்கிறீர்களாஅ ?
இந்த ஆண்டு 2 மரைக்கால் மழை என்று இருக்கும் (2008க்கு அல்ல)
திவா அனுப்புங்க..
ரத்தினம் தானே! அவ்வளவு சீக்கிரம் கெடாது.
முதல் வருகைக்கு நன்றி விஜய்.
பதிலை அங்கு சொல்லிவிட்டேன்.
கோவியாரே, அவருக்கு என்னவோ அதைப்பார்த்தா போட்டியாளராக தெரிகிறது.
பஞ்சாங்கத்தில் எனக்கு அவ்வளவு தெரியாது.
அன்பின் குமார் சிங்கப்புரில் பதிவர் சந்திப்பு நிகழ்வதுபற்றிய செய்தி எனக்கு தெரியாது.
இதன் விபரங்களை எனக்கு தெரிவிக்கவியலுமா?
அடுத்த சந்திப்பில் நானும் கலந்துகொள்ள ஆசை.
பாண்டித்துரை
pandiidurai@yahoo.com
www.pandiidurai.wordpress.com
நிச்சயமாக பாண்டித்துரை
இங்கு பாருங்கள்.
Post a Comment