Monday, March 31, 2008

தமிழில் போட்டி..

சிங்கையில் இளைஞர்களை தமிழில் பேச அதுவும் பள்ளியில் படிக்கும் மாணவர்களை குறி வைத்து தெலோக் பிளங்கா சமூக நிலையம் ஏற்படுத்திய விழாவை கீழே காணுங்கள்.




நன்றி: வசந்தம் சென்ரல்.

என்ன? குழந்தைகள் பேசும் தமிழ்கூட அம்மாக்களால் பேசமுடியாதை சலனப்படத்தின் கடைசியில் காணலாம்.இவுங்க எப்படி குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கப் போறாங்க என்று நினைத்தால் சிறிது கஷ்டமாக இருக்கு.

தமிழுக்கு விழா

சிங்கப்பூர் சின்ன நாடு தான் அதில் தமிழர் இனமும் சின்னது தான் ஆனால் அரசாங்க மொழியாக்கப்பட்டதும் அதற்கான மரியாதை தர இந்த அரசாங்கமும் மனிதர்களும் தவறுவதில்லை.

கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்,தமிழுக்காக 22 நாட்கள் விழா எடுக்கிறார்களாம்.



நன்றி: வசந்தம் சென்ரல்

Saturday, March 29, 2008

துர்கா வீணை வாசித்த கோவிலுக்கு .....

கொஞ்ச மாதங்களுக்கு முன்பு நம் சகபதிவர் துர்கா வீணை கச்சேரி நடந்தது பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்.அப்போது அந்த கோவில் புனரமைப்பு வேலைகளில் இருந்தது.

போன வாரம் அந்த வேலைகள் எல்லாம் முடிந்து குடமுழுக்கு செய்யப்பட்டதை காட்டும் சலனப்படம் கீழே உள்ளது,பார்த்து மகிழுங்கள்.



நன்றி: வசந்தம் சென்ரல்

புனிதப்பசு!!

சில நாட்களுக்கு முன்பு செய்திகளின் இந்த பசுவின் கதையை காண நேரிட்டது.

குஜராத்தில் ஒரு பசு தீவனத்தை சாப்பிடும் போதே பாலையும் கொடுத்துவிடுகிறதாம்.

மீதி விபரங்கள் கீழே..



நன்றி: வசந்தம் சென்ரல்.

இது கொஞ்சம் அதிகமாக தெரியலை!!

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் தொலைக்காட்சியில் பார்க்கும் ஒரே நிகழ்ச்சியில் இதை காண நேர்ந்தது.

சிங்கப்பூரையே தூக்கி போய் இந்தியாவில் வைத்தா சரியா போய்விடுமா? மிஸ்டர் மதராஸ்??
இருந்தாலும்,கன்னடக்காரர் தமிழில் பேசியதற்கு ஷொட்டு கொடுக்கலாம்.

அதற்கு அடுத்த மலையாள பைங்கிளி சொல்வது அபதத்திலும் அபத்தம்.இங்குள்ளவர்கள் தமிழை சுத்தமாக பேசுகிறார்களாம்.பேச மாட்டேன் என்பதால் தானே “வாசிப்போம் சிங்கப்பூர்” என்ற நிகழ்ச்சிகளை வைக்கிறார்கள்.அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்களே கேளுங்கள்.

சலனப்படம்,கீழே.



வழக்கம் போல்... நன்றி: வசந்தம் சென்ரலுக்கு.

Tuesday, March 25, 2008

பாட்டுத்திறன் போட்டி

தமிழ் வானொலி - ஒலி 96.8 ஏற்பாடு செய்திருந்த சிறுவர்களுக்கான பாட்டுத்திறன் போட்டி பற்றிய தொகுப்பு கீழே உள்ள சலனப்படத்தில் பார்க்கலாம்.





நன்றி: வசந்தம் சென்ரல்.

ஹோலி பண்டிகை

தீபாவளிக்கு அடுத்த படியாக இந்தியாவில் பெருமளவில் கொண்டாடப் படுவது ஹோலி பண்டிகை தான் என்று சொல்கிறார்கள்.அந்த ஜுரம் இங்கும் வந்துவிட்டது போலும்.

கீழே உள்ள சலனப்படத்தை பாருங்கள்.மழையுடன் ஆட்டமும் வெகு ஜோராக வந்துள்ளது.



நன்றி: வசந்தம் சென்ரல்.

Saturday, March 22, 2008

தமிழன் தொலைக்காட்சி

கேள்விப்பட்ட ஒரு செய்தி...

இதில் தமிழ் செய்தி வாசிப்பவர்கள் பலர் புதியவர்கள் அதுவும் சரியான முன் அனுபவம் இல்லாதவர்கள் பலர் போலும்.

படஜெட் கூட்டத்தொடர் பற்றிய செய்தியில்..

9.25 க்கு ஆரம்பித்த கூட்டத்தொடர் என்பதை ஒன்பது புள்ளி இருபத்தைந்துக்கு ஆரம்பித்து என்று படித்தார்களாம்.

இது எப்படியிருக்கு??

பங்குனி உத்திரம்.

சிங்கை பங்குனி உத்திர விழா பற்றிய சலனப்படம்.

பிரொபைலில் இருக்கும் படத்தை பார்த்து பதிவு போடுவதற்கு இவ்வளவு கஷ்ட்டப்படுகிறேன் என்று நினைக்காதீர்கள். :-)

பார்த்து மகிழுங்கள்..



நன்றி: வசந்தம் சென்ரல்.

Wednesday, March 19, 2008

ஆமைகள் கூட பறக்கமுடியும்

"Turtles Can Fly" -இப்படி ஒரு படம்,எல்லாமே உருதுவில் இருந்தும் பார்த்துமுடித்தேன்.இராக்கில் நடப்பது போல் உள்ள கதை.முழுக்க முழுக்க சிறுவர்களையே வைத்து அவர்களை செம வேலை வாங்கியிருக்கார்.சிறுவர்களும் நடித்திருக்கார்கள் என்பது தெரியாமல் அட்டகாசமாக செய்திருக்கார்கள்.

இதில் ஒரு சிறுமி அப்படியே "அஞ்சலியை" நம் கண் முன்னே கொண்டு வருகிறார்.

அவர் படம் கீழே.



ஆங்கில உரை நடை ஓடாததால் ஓரளவே புரிந்தது கதை.

இரண்டு கையையும் இழந்த ஒரு பையன்,ஒரு பெண் & இந்த குழந்தையை சுற்றியே பெரும் பாலன கதை ஓடுகிறது.



கதை நடக்கும் இடம் மலை சார்ந்த இராக் பிரதேசம் அதில் ஒரு காட்சி - மலை முழுக்க மனிதர்கள்.





படம் முழுக்க ஆயுத விற்பனை மற்றும் கன்னி வெடி நிகழ்வுகள் என்று போகிறது.



படம் பல நேரங்களில் மெதுவாக போவது போல் இருந்தாலும் சிறுவர்களின் நடிப்புக்காகவும் அவர்கள் வாழக்கையின் வலியை தெரிந்து கொள்வதற்காகவும் ஒரு முறை பார்க்கலாம்.

மேலும் சில படங்களை கீழே பாருங்கள்.



கீழே உள்ள பையனின் நடிப்பும் அருமையாக இருந்தது.



அவர்கள் வாழும் பகுதி- இரவு நேரத்தில்.



முடியும் போது அந்த குழந்தையை பாதுகாக்கும் பெண்ணின் செருப்பு...



இராக்கின் மேல் திணிக்கப்பட்ட போரினால் இவர்கள் நிலமை இப்படி ஆனதா? அல்லது சதாமினால் இவர்கள் இப்படி ஊருக்கு வெளியே தள்ளப்பட்டார்களா? என்பது சரியாக புரியவில்லை.

ஆனாலும் அவர்களின் வலி படத்தின் மூலம் நன்கு தெரிகிறது,வருத்தப்படுவதை தவிர வேறு வழி ஒன்றும் தெரியவில்லை.

Tuesday, March 18, 2008

விபத்து எப்படி நடக்குது?

கட்டுமானத்துறையில் எப்படியெல்லாம் விபத்து நடக்குது பாருங்க..



ஹூம்!!! என்னத்த சொல்லுவது?

Monday, March 17, 2008

இலவச மருத்துவ உதவி

சற்று முன் மின் அஞ்சலில் வந்தது இந்த விஷயம்.

யாருக்காவது தேவைப்பட்டால் அவர்களை தொடர்பு கொள்ளவும்.

CHIME (A trust formed by MIOT Hospital , Chennai) is giving free heart surgery for children with congenital heart disease.
If you know any persons with this disability please pass it to them.
Forward this to all of your friends.
You might become a god by giving life to others.


Contact Details: chime@miothospitals .com
Source: The Hindu ( www.hindu.com/ 2007/10/01/ stories/20071001 59110500. htm

இவர்களின் நற்பணிக்கு வாழ்த்துவோம்.

Sunday, March 16, 2008

செவ்வாய்க்கு போகலாமா?

வான்வெளித்துறையில் ஆர்வம் உண்டா?

கீழ் உள்ள சலனப்படத்தை பாருங்கள்..




நன்றி: smvans7

இங்கிருந்து அங்கு போய் சேர 7 மாதம் ஆகுமாம்.

Saturday, March 15, 2008

விளம்பரம்

தொலைக்காட்சியில் வரும் சில விளம்பரங்கள் மெல்லிய புன்னகையை வரவழைத்து நம்மை கவர்ந்துவிடும்.

கீழே உள்ள விளம்பரத்தை பாருங்கள்.இங்கு பல நாட்களாக ஓடிக்கொண்டு இருந்தாலும்...இன்று தான் பிடித்து போடனும் என்று தோனியது.

பார்த்து மகிழுங்கள்.




நன்றி: மீடியா கார்ப்

எப்போது திருந்துவது???

இரட்டை குழந்தை,ஒரே பிரசவத்தில் பல குழந்தைகள் எல்லாம் இப்போது அதிசியமில்லை தான்.
சில சமயம் கருவில் உண்டாகும் குழந்தைகள் முழுவதுமாக வளராமல் மற்றொன்றுடன் இணைந்து வளர்ச்சியை நிறுத்திக்கொள்வதுண்டு,அப்படி ஒரு நிகழ்வை வட இந்தியாவில் சிலர் கீழ்கண்டவாறு மாற்றிவிட்டார்கள்.

குழந்தை “ஆண்டவா”!!! நீயாவது காப்பாற்று.



வீடியோ தெரியவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்.

செய்தி: வசந்தம் சென்ரல் - நன்றி.

Tuesday, March 11, 2008

தட்டாமாலை

கீழே உள்ள படங்கள் எனக்கு தெரிந்தவர் மூலம் ஸ்லைட் ஷோ ஆக வந்தது,அதை பிச்சி தேவையான படங்களை உங்கள் பார்வைக்காக வைத்துள்ளேன்,அனுபவிங்க.

இந்த இடம் இங்கிலாந்து நாட்டில் உள்ளது.

பொறியாளர்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கு.

மேலேயும் தண்ணி,கீழேயும் தண்ணி,இரண்டிலும் படகு ஓடுது... எப்படி?



முழு வியூவும் உள்ள மற்றொரு படம் கீழே



தொட்டி மாதிரி ஒரு அமைப்பை வைத்து அதனுள் படகை வைத்து...



லேசாக சுத்த வைச்சு



சுத்த வைச்சு



தட்டாமாலையாக சுத்தி சுத்தி படகை மேலே இருந்து ஒரு பக்கம் கீழே இறக்கி மற்றொரு பக்கம் மேலே ஏற்றி



கொண்டு மேலே விட்டுவிடுகிறார்கள்.





இரவில் இப்படி தெரிகிறது.





இது படகுக்காக கட்டப்பட்ட மின் தூக்கியோ???

படங்கள் கொடுத்து உதவிய திரு. பத்மநாபனுக்கு நன்றி.

Saturday, March 08, 2008

19 வயதுக்கு கீழ்..

ஏம்ம்பா? நம் ஆட்கள் அதுவும் 19 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகள் தனியாக மலேசியா வந்து நம் நாட்டுக்காக கோப்பையையும் வென்றிருக்கிறார்கள்,யாராவது வீடியோ போடுவாங்க என்று பார்த்தால்.... ஒன்று கூட அகப்படவில்லையே.

சரி.. சரி ..

சின்னக்குட்டி எடுத்து போடுவதற்குள், போட்டுவிடுகிறேன்.

பார்த்து மகிழுங்கள்.




நன்றி: வசந்தம் சென்ரல்.

தத்துவம் (தேர்தலுக்காக!!)

தேர்தல் வந்தாலே போதும் விதம் விதமான பேச்சுகள் வெளியில் வரும்,அதுவும் தமிழர் போட்டியிடக்கூடிய இடம் என்றால் நவரசத்துக்கு குறைவில்லாமல் யாருக்கும் நாங்கள் சலைத்தவர்கள் அல்ல என்பதை பலர் போட்டுக்காண்பிப்பார்கள்.

இன்று மலேசியாவில் தேர்தல்,என்ன தான் ஆளுங்கட்சிக்கு பயமில்லாமல் இருந்தாலும் இந்த இண்டிராப் வந்து அவுங்க கேக்கில் கொஞ்சம் வெட்டி எடுத்துட்டு போயிடுவாங்களோ என்ற பயம் அவர்களை ஆட்டிப்படைக்கிறது.

இந்த நேரத்தில் இங்கு தொலைக்காட்சியில் திரு சாமிவேலு அவர்களின் பேட்டி ஒளிபரப்பாகியது... பார்த்து/கேட்டு மகிழுங்கள்.

இத்தனை நாள் தமிழர்களுக்கு என்று குரல் கொடுத்துக்கொண்டிருந்த இவர், தன் தலைமைத்துவத்தை நிலை நிறுத்த இந்த முறை கொஞ்சம் போராடவேண்டி இருக்கும் போல் தோனுகிறது.



நன்றி: வசந்தம் சென்ரல்.

இந்த பாடி லேங்குவேஜ் தெரிந்த ஆட்கள் அவர் கை ஆக்ஸனை பார்த்து ஏதாவது சொல்லலாம்.

Thursday, March 06, 2008

கை வண்ணம்

இன்று காலை ஒரு மெயிலில் வந்த படங்கள் இது.இவை அத்தனையும் காகிதத்தில் செய்துள்ளார்கள்.

சில படங்கள் நெடுக்கு வசத்தில் இருப்பதால் கீழ் பகுதி வெட்டப்பட்டுவிடுகிறது.

இவர்கள் கற்பனைத்திறனும் கை வண்ணமும் வியக்காமல் இருக்க முடியவில்லை.

காகிதத்தை எப்படி வெட்டுகிறார்களோ அதையே உருவமாக வைக்கவேண்டும் போல்.




நன்றி: படங்கள் கொடுத்த நண்பருக்கு.

Tuesday, March 04, 2008

Batu Kawa- East Malaysia

இது நாங்கள் கிழக்கு மலேசியாவில் பண்ண ஒரு பால கட்டுமான பணிகளின் படங்களின் தொகுப்பு.

போட்டோ பக்கெட்டில் இந்த வசதியை பார்த்ததும் முயன்று பார்க்கலாமே என்று முயற்சித்ததின் விளைவு.

பார்த்து மகிழுங்கள்.