Thursday, December 31, 2009

சிமிண்ட் தேவையில்லை

மஸ்கட்டில் சிறு சிறு குன்றுகளை சமப்படுத்தி அதன் மேல் வீடுகள் கட்டாமல் குன்றின் மேலேயே கட்டி,வீட்டுக்குப்போக சாலையை அதன் போக்கிலே போட்டுவிடுகிறார்கள்.நடப்பதெல்லாம் வீட்டோடு சரி, வெளியில் வந்தால் மகிழுந்து தான் அதனால் அதற்கு ஏற்றாற் போல் சாலையை போட்டுவிட்டால் போதும் வீடு எந்த உயரத்தில் இருந்தாலும் கவலையில்லை.

மேடு பள்ளம் என்று மாறி மாறி இருக்கும் இடத்தில் சாலைகள் வரும் போது சரிவு எந்த பக்கம் அதிகமாக இருக்கும் இடத்தில் கான்கிரீட் சுவர் எழுப்புவது என்பது நடைமுறை.தொழிற்நுட்பம் மேம்பாடு கண்டுகொண்டிருக்கும் நிலையில் அதையும் மாற்றி அமைத்துள்ளார்கள்,இந்த முறையில் சுவருக்கு கட்டுவதற்கு மட்டும் சிமிண்ட் தேவையில்லை.கீழே உள்ள படத்தை பாருங்கள் இது அத்தனையும் முன்னமே வடிவமைத்து செய்யப்பட்ட Precast Blocks.இந்த பிலாக்குகள் ஒன்றுடன் ஒன்று இணைந்துகொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த இரு பிலாக்குகளுக்கு இடையே வரும் பகுதியை ஒரு சிறிய சிலாப் மூலம் அடைத்துவிடுகிறார்கள்.அவ்வளவு தான்.வேலையிடத்தில் சிமிண்ட்டுக்கு அவசியமே இல்லை.இதைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு இங்கே போட்டிருந்தேன்.பக்கத்தில் இருக்கும் Qurm பூங்காவிலும் இத்தொழிற்நுட்பத்தை புகுத்தியுள்ளார்கள்.



இப்படியெல்லாம் இருந்தாலும் நான் தங்கியிருக்கும் இடத்துக்கு பக்கத்தில் ஒரு வீடு கொஞ்சம் சாலையை விட ஒரு 3 மீட்டர் உயரத்தில் இருந்தது.சாலையை விட 10’ உள்ளடங்கியும் இருந்தது.வீட்டின் அஸ்திவாரத்துக்கும் சாலைக்கும் இடைப்பட்ட பகுதி வாட்டமாக மண் சரிந்து இருந்தது.

முதல் நாள் ஒரு மண் தோண்டி வந்தது மறு நாள் அந்த வாட்டமான பகுதி மழித்து எடுக்கப்பட்டது.இப்போது வீடு அதன் அஸ்திவார ஒரு பகுதி வெளியில் தெரிய ஆரம்பித்தது.இந்நிலையில் மழை பெய்தால் அந்த வீடு ஒருவழியாக சரிய ஏதுவாகியிருக்கும் ஆனால் இந்த ஊரில் தான் அவ்வளவாக மழை கிடையாதே அதனால் தான் இப்படி தைரியமாக செய்கிறார்கள் என்று நினைத்திருந்தேன்.அவர்கள் நேரம், 3 ம் நாள் “ப” வடிவத்தில் சுவர் எழுப்பினார்கள் அதுவும் Hollow Blockயில்.இந்த Hollow Blocks இவ்வகை அழுத்தத்தை தாங்கக்கூடியது அல்ல.முதலில் இந்த பகுதியை என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியாமல் இருந்தது,சுவர் எழுப்பியவுடன் புரிந்தது இவர்கள் சாலை மட்டத்தில் ஒரு மகிழுந்து நிருத்தும் இடம் செய்கிறார்கள் என்று.

3ம் நாள் சுவர் வேலை செய்யும் போதே என் நண்பனிடம் சுட்டினேன் இவ்விடத்தை பார்த்துக்கொள் என்றேன்.நீட்டு வாக்கில் உள்ள சுவர் சுமார் 7 மீட்டர் இருக்கும் அந்த சுவர் தான் பக்கத்தில் உள்ள வீட்டின் ஒரு பகுதி மண்ணை தாங்க வேண்டும்.யார் பொறியாளரோ தெரியவில்லை.3 மீட்டர் உயரத்தில் 1 மீட்டர் எழுப்பியாகிவிட்டது அடுத்த வேலை ஆரம்பிக்கும் முன்பு 3 நாட்கள் விட்டு விட்டு மழை.Flash Flood மூலம் ஓமனில் ஆறு பேர் சாவு.

மழை நின்றவுடன் வேலை ஆரம்பமானது.மீதி உயரத்தை கட்டி முடித்தார்கள்,வண்டி நிற்கும் இடத்துக்கு கீழே கற்கள் பதித்தார்கள்.காசு இருக்கே என்ன பண்ணலாம் என்று நினைத்து சுவருக்கும் சேர்த்து Tile பதித்தார்கள்.

அடுத்து இப்போது சுவருக்கும் வீட்டுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்ப பக்கத்தில் வெட்டிப்போட்ட மண்ணை உபயோகித்தார்கள்.வேலை முடிந்தது!!!
அங்கு மண் போட போட சுவர் உள் பக்கம் வில் மாதிரி வளைய ஆரம்பித்தது.Hollow Block என்பது 3 மீட்டர் உயர மண்ணை தாங்கும் திறன் கிடையாது என்பதை இவ்வளவு வேலை செய்து தெரிந்துகொண்டார்கள்.எல்லாவற்ரையும் இடித்துவிட்டு இப்போது அந்த பகுதி தட்டி போட்டு மறைத்து வைத்துள்ளார்கள்.இடிப்பதற்கு முதல் நாள் இரவு அந்த பக்கம் போய் நின்று பார்த்த போது அந்த “வில்” தெரிந்தது,சரி வீட்டுக்காரரிடம் சொல்லுவோம் என்று கதவை திறக்கப்போனால் அது பூட்டியிருந்தது.வீட்டில் ஆட்கள் இருப்பதற்கான அறிகுறியும் இல்லை.மறு நாள் எப்படியே தெரிந்து அந்த சுவரை இடித்துவிட்டார்கள்.இப்ப வீட்டின் கதி என்னவென்று தெரியவில்லை.

2 comments:

கண்ணா.. said...

கட்டுமானம் குறித்த தொழில்நுட்ப பதிவுதான் நானும் எழுத வேண்டும் என நினைத்து கொண்டிருக்கிறேன்.. ஆனால் நீங்கள் அதையே எழுதி வருகிறீர்கள்.

இதை பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருக்க்குது பாஸ்.

ஏன்னா இன்றைய பதிவுலகில் தொழில்நுட்பம் அதுவும் கட்டுமானம் குறித்த பதிவுகளே மிக குறைவான இந்த நேரத்தில் உங்கள் பதிவு என்னை இது குறித்தும் எழுதலாம் என் ஊக்கம் கொடுக்கிறது.

இனி நான் உங்கள் ஃபாலோயர்..

தொடர்ந்து பயணிப்போம்..

வடுவூர் குமார் said...

மிக்க‌ ந‌ன்றி க‌ண்ணா
உங்க‌ளுக்கு தெரிந்த‌தை சொல்லுங்க‌ள் நாங்க‌ளும் தெரிந்துகொள்கிறோம்.புர்ஜ் துபாயில் வேலை செய்த‌து உங்க‌ளுக்கு ஒரு ந‌ல்ல‌ அனுப‌வாக‌ இருந்திருக்கும் என்று ந‌ம்புகிறேன்.
ந‌க்கீல் நிறுவ‌ன‌ம் 1 கி.மீட்ட‌ர் ட‌வ‌ர் ஒன்று க‌ட்ட‌ப்போவ‌தாக‌ அப்போது சொன்னார்க‌ள் அது ந‌ட‌க்குமா என்று இப்போது சொல்ல‌ முடியாது அதே போல் சுழ‌லும் க‌ட்டிட‌மும் என்ன‌ நில‌மையில் இருக்கிற‌து என்று தெரிய‌வில்லை.