Friday, December 18, 2009

பழசி ராஜா

நேற்று வாரவிடுமுறையை தள்ளுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது இன்னும் இரண்டு நாட்கள் இருக்கு என்னும் போதே கலக்கமாக இருக்கு.இப்படிப்பட்ட மன நிலையில் இணையத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் போது சக தோழர் Star Cinema வில் பழசிராஜா 2.45 க்கு ஷோவாம் போகலாமா? என்றார்.மலையாள படம் பரவாயில்லையா? என்றும் கேட்டார்.எந்த மொழியாக இருந்தால் திரையில் வரும் காட்சிகளை புரிந்துக்கொள்ள முடியாதா என்ன என்று நினைத்து வருகிறேன் என்று சொன்னேன்.அவரும் மதிய சாப்பாட்டை முன்னதாகவே முடித்துவிட்டு சுமார் 2 மணிக்கு கிளம்பிவிட்டார்.நிறுவன ஓட்டுனர் ஃபிரியாக இருந்ததால் அவருடன் கிளம்பினோம்.தியேட்டர் வாசலில் இறங்கும் போது 2.20.நான் டிக்கெட் வாங்கும் இடத்துக்கு போய் வரிசையில் நின்றிருந்தேன்,என் நிலை வரும் போது சக நண்பர் கூப்பிட்டு ஷோ 2 மணிக்கே ஆரம்பித்துவிட்டது அடுத்த ஷோ 5.45 க்கு தான் என்றார்.3.45 மணி நேரத்தை எப்படி போக்குவது?நண்பர் என்னிடம் வேறெங்காவது போகனுமா? என்றார்.நான் கொஞ்சம் யோசித்துவிட்டு “மத்ரா” பகுதியில் ஒரு கட்டிடம் இருக்கு ஊதுபத்தி ஸ்டேண்ட் மாதிரி இருக்கும் என்றேன்.ஓட்டுனருக்கு அப்பகுதி பழக்கம் என்றதால் போனாம் ஆனால் நுழைவு பகுதி தான் எங்கிருக்கு என்று தெரியாமல் சுற்றி கடற்கரையாவது சுற்றி பார்க்கலாம் என்று கடல் பக்கம் வந்தோம்.26 டிகிரி வெய்யில் குளுமையாக இருந்தது.மீதியெல்லாம் படத்தை பார்த்துக்கொள்ளுங்கள்.திரும்பவும் நாளை 2 மணி ஷோவுக்கு போகலாம் என்றுள்ளோம்.

திரையரங்குக்கு முன்னால் இருக்கும் மலைப்பகுதி




பேரீச்சை மரங்களுக்கு இடையில் இருக்கும் பஸ் நிறுத்தம்.



மத்ரா கடல் பகுதி



இது தான் அந்த ஊதுபத்தி ஸ்டேண்ட் கட்டிடம்.



மேலும் சில கடல் படங்கள்.









இதெல்லாம் நான் தான் எடுத்தேங்க...

2 comments:

ஆயில்யன் said...

அந்த ஊதுபத்தி ஸ்டேண்ட் பின்னாடி தெரியிற மாதிரி அந்த பெண் சிலைக்கு பக்கத்துல நின்னு போட்டோ எடுத்துக்கிட்டு வந்திருக்கேன் போன் ரெண்டு வாரம் முன்னாடி ஈத் விடுமுறைக்கு வந்திருந்தப்ப :)

அப்புறம் பக்கத்துல படியேறி போயி சின்ன காவல் அறை கோட்டையினை பார்த்தீங்களா?

வடுவூர் குமார் said...

வாங்க ஆயில்யன்
போற வழியே தெரியலையே!அடுத்த முறை போகும் போது தான் மேலே போகனும்.