Thursday, December 03, 2009

மாறுகிறது பொது வினியோக முறை.

ஊருக்கு வரும் போதெல்லாம் ரேஷன் என்று சொல்லப்படுகிற பொது வினியோக முறை கடைக்கு போகும் படி நேர்ந்துவிடுகிறது.பக்கத்து வீடு/மாமா வீட்டுக்கு சாமான் வாங்க போவதுண்டு.போன முறை போன போது ஒரே ஊழியர் பில் போடுவதும் அவரே சாமான்களை எடை போடுவதை பார்த்த போது கஷ்டமாக இருந்தது.அவரைப் பாராட்டி அவரின் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் செய்தேன்,வழக்கம் போல் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.படித்தார்களா இல்லையா எனபதை கூட தெரிவிக்கவில்லை.



இந்த முறை போன போது வேறு ஊழியர் மாறியிருந்தார்.கடையில் கூட்டமில்லாத்தால் எனக்கு அவ்வளவு நேரமாகவில்லை ஆனாலும் சாமான்கள் வழங்குபவர் பக்கத்து கடையில் இருந்து வரவேண்டும் என்பதால் சிறிது நேரம் காத்திருக்கவேண்டியிருந்தது.முதலில் எல்லாம் நம் அட்டையை பார்த்து அதை ஒரு ரிஸ்டரில் எழுதி பிறகு பில் புக்கில் எழுதி அந்த ரசீதை நமக்கு கொடுப்பார்கள் ஆனால் இம்முறை அடக்கமான ஒரு கருவி அதனுடன் கூடிய பிரிண்டர் என்று நம்முடைய தகவலை அதனுள் இட்டு பில்லை அதுவே அச்சிட்டு கொடுக்கிறார்கள்.இந்த கருவியின் மூலம் அவர்களின் மேஜை சற்று மேம்பட்டு காணப்படுகிறது.அங்கிருந்தவரிடம் என்னுடைய சந்தேகங்களை கேட்ட போது..

கரண்டு போச்சுன்னா? எல்லாமே நின்றுவிடுமா?

இல்லை இதனுடன் வரும் மின்கலம் 1 மணி நேரத்துக்கு தாக்குபிடிக்கும் அதுவரை பிரச்சனையில்லை என்றார்.

அதற்கு பிறகு?? தடையில்லா மின்சாரம் கிடைக்காத வரை பிரச்சனை தான்.

இந்த கருவி மூலம் கிடைக்கும் பில் கிழிப்பதற்கு தனி திறமை வேண்டும் என்று நினைக்கிறேன் அதோடு இரு பில்களுக்கு நடுவில் இருக்கும் கார்பன் பேப்பர் இன்னும் தேவையா! என்று நினைக்கத்தோனுகிறது.இந்த மாற்றங்கள் வருவதற்கு இத்தனை வருடங்களாகிவிட்டது இதன் நீட்சிகள் மற்ற குறைகளை போக்கும் என்று நம்புவோமாக.

1 comment:

geethappriyan said...

நானும் இதைப்பார்த்தும்,எலெக்ட்ரானிக் ஸ்கேல் பார்த்தும் வியந்தேன், இப்போது யூனிஃபார்ம் டிசைன் செய்யபோகிறார்களாம், மஞ்சள் வண்ணம் தான் தீமாம்.