Tuesday, December 01, 2009

திரிசூலம்

கையில் அதிக பொருட்கள் இல்லை அதோடு போகும் வீடும் ரயில்வே ஸ்டேசன் பக்கத்தில் இருக்கு என்ற பட்சத்தில் விமானத்தில் வரும் போது சாலையை பாதுகாப்பாக கடந்து ரயிலை பிடிக்க அரசாங்கத்தின் முயற்சியில் ஒரு சப்வே இருக்கு என்ற விபரம் தெரிந்திருந்தாலும் பல முறை அதை உபயோகப்படுத்த முடியாமல் போலிருந்தது.இந்த முறை இரண்டு கைகளுக்குள் அடங்கும் சாமான்கள் இருந்ததால் அவ்வழியை முயற்சிக்கலாம் என்று விமானத்தை விட்டு இறங்கும் போதே முடிவு செய்திருந்தேன்.

மாலை 3 மணிக்கு இறங்க வேண்டிய விமானம் சென்னை எல்லையை தொடும் வரை சரியான நேரத்துக்கு தான் வந்துகொண்டிருந்தது.விமானி முதல் சிப்பந்திகள் வரை தரையிறங்க வேண்டிய ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார்கள்.இன்னும் 20 நிமிடங்கள் என்று இருக்கும் போது கணினி திறையை மூடிவிட்டார்கள்.ஜன்னல் ஓர சீட்டு என்பதால் வெளிப்புற அழகை பார்த்துக்கொண்டு வந்தேன்.அடிக்கடி விமானம் திரும்புவதை உணர்ந்த போது கீழிறிருக்கும் இடம் திரும்ப திரும்ப 4 முறை வந்தது.ஊருக்கு வெளியே இருக்கும் Toll Gate தெரிந்தது.சுமார் 40 நிமிடங்கள் சென்னைக்குள் நுழைய அனுமதிகிடைக்காமல் வெளியே சுற்றிக்கொண்டிருந்தோம்.சென்னை விமான நிலையம் மிக நெருக்கடியான நிலமையை நோக்கிப்போய்கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு அடையாளம்.ஒரு வழியாக ஒரு மணி நேர தாமதமாக 4.10 க்கு தரையிறங்கினோம்.

குடியேற்றம் மற்றும் Baggage கள் ஒரு வழியாக முடிந்து வெளியே வந்தவுடன் Under Pass ஐ நோக்கி நடந்தேன்.தள்ளு வண்டியை திரிசூலம் வரை கொண்டு வரும்படி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.பயணச்சீட்டு வாங்குவதற்கு படியேறி செல்ல வேண்டும்.சரியான அறிவிப்பு பலகை இல்லை. பிளாட்பார்ம் 2 மற்றும் 4 என்று போட்டிருக்கிறார்கள்.இந்த இரண்டு பிளாட்பார்ம்களில் என்ன வண்டி வரும் என்ற தகவல் பலகை இருந்தால் புதியவர்களுக்கு சௌகரியமாக இருக்கும்.பிளாட்பார்ம் நுழையும் பகுதி இடது பக்கம் படிகளும் மறு பகுதியில் சரிவான ஏறும்/இறங்கும் நடைபாதை உள்ளது.இது ஒரு வேளை உடல் ஊனமுற்றவர்களுக்காக இருக்கக்கூடும்,அப்படியிருந்தால் மோட்டார் உள்ள சக்கரவண்டி தான் சரிப்படும்.பொதுவாக உபயோகப்படும் வண்டிகள் இந்த Slope இல் உபயோகப்படுத்த முடியாது.கைப்பிடி மட்டும் தரையில் பிடிப்பு இருக்கும் மாதிரி இருந்தால் ஊனமுற்றோருக்கு உதவியாக இருக்கும்.இதன் பயண்பாடு சரியாக தெரியாததால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.

ரூபாய் 5 கோடி செலவில் கட்டப்பட்டதாக சொல்லப்படும் இப்பணி உள்ளூர் மக்களை மனதில் நிறுத்தி செய்யப்பட்டதாகவே தோனுகிறது.இந்த மாதிரி வடிவமைப்பு மற்றும் உபயோகத்தனமையை பார்க்கும் போது நாம் போக வேண்டிய தூரம் வெகு அதிகம் என்பது மட்டும் புலப்படுகிறது.

No comments: