Friday, December 11, 2009

சற்று முன்...

மஸகட் வந்த புதிதில் இங்குள்ள பொது ஜன அதிகாரியிடம் ”இங்கு எப்போது மழை பெய்யும்?” என்றேன்.அதெல்லாம் சொல்ல முடியாது 3 அல்லது 4 வருடங்களாக மழை பெய்யாமல் கூட இருக்கும் என்றார்.

இன்று மாலை வீட்டை விட்டு வண்டியில் வெளியே போகும் போதே மழை வரக்கூடிய அறிகுறியாக கருப்பு மேகங்கள் சூழ்ந்திருந்தன ஆனால் நாங்கள் வீட்டுக்கு வரும் வரை மழை பெய்யவில்லை.

இரவு சாப்பாட்டுக்காக சப்பாத்தி போட்டுக்கொண்டிருக்கும் போது சொட்டு சொட்டு என்று தண்ணீர் விழும் சத்தம் கேட்டது.சரி குளிர்சாதன பெட்டியில் இருந்து தான் தண்ணீர் சொட்டுகிறது போலும் என்று நினைத்துக்கொண்டு வேலையை பார்த்தேன்.சுமார் 5 நிமிடங்களுக்கு மேலாக அதுவும் சத்தம் அதிகமாக கேட்ட போது தெரிந்தது வெளியில் மழை பெய்துகொண்டிருப்பது.நம்மூரில் மழை வருவதற்கு முன்பு கொஞ்சம் வெக்கையாக இருக்கும் அல்லது குளிர்ந்த காற்று அடிக்கும் இங்கு அப்படி எந்த அறிகுறியும் இல்லாமல் ஒரு 20 நிமிடத்துக்கு மழை பெய்தது.

3 comments:

துளசி கோபால் said...

சென்னையில் மழை(?) வந்துருக்கு!

geethappriyan said...

பாஸ்,
அங்கேயும் மழையா?ஜாலிதான்

வடுவூர் குமார் said...

கார்த்திகேய‌ன்,அந்த‌ ப‌திவு போட்ட‌தில் இருந்து தின‌மும் ம‌ழை தான்.ம‌ழையால் இங்கு 4 பேர் சாவாம்.அவ‌ர்க‌ளுக்கே வேடிக்கையாக‌ இருக்கு.