கட்டுமானத்துறையில் சில சமயம் விசித்திரமான நிகழ்வுகள் ஏற்படுவது சகஜம் ஏனென்றால் தொழிலாளர்கள் கல்வி குறைவாக இருப்பதும்,தொழில் பற்றிய அறிவு குறைவாக இருப்பதும் தான்.நான் வேலை செய்ய ஆரம்பிக்கும் நேரத்தில் எல்லாம் பெரிய Board மற்றும் சில உபகரணங்கள் மூலம் வரை படம் தயாரித்து அதை பிரதி எடுத்து அனுப்புவார்கள்.தவறுகள் நேராமல் மிக நேரம் எடுத்து ஒவ்வொரு வரைப்படமும் செய்வார்கள்.வரை படத்தின் ஒரு பகுதி தவறானாலும் அப்படி தூக்கி கடாசிவிட்டு மறுபடியும் புதிதாக வரைய வேண்டும் என்பதால் வெகு சிரத்தையாக செய்வார்கள்.இப்போது வரைகலைக்கு என்றே மென்பொருட்கள் வந்துவிட்டதால் வரைவதும் எளிதாகி மாறுபாடுகள் செய்வதும் வெகு சுலபமாகிவிட்டது.
என்ன தான் எளிதாக வரைய முடியும்,பிரிண்ட் எடுக்க முடியும் என்றாலும் Site வேலை செய்பவர்கள் அந்த வரை படத்தை பார்த்து அதில் சொல்லியிருப்பது போல் செய்வது அதை மேற்பார்வை செய்பவரும் மற்றும் குத்தகைக்காரர்/அவருடைய தொழிலாளர்கள் கையில் தான் உள்ளது.கீழே உள்ள படத்தை பாருங்கள்.
ஆதாவது ஒரு வரைபடம் வரைந்து அதை மேம்படுத்தும் போது எந்த இடத்தை மேம்படுத்துகிறோம் என்பதை படம் வரைபவர்கள் மேகம் போல குறியிட்டு காண்பிப்பார்கள்.இங்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை,முன்னறிவு இல்லாத தொழிலாளி அந்த இடத்தில் அதே மாதிரி ஓட்டை வரவேண்டும் நிறைய முயற்சி எடுத்து இப்படி ஓட்டை போட்டுள்ளார்.இது ஒரு நகைச்சுவைக்காகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் நடக்காது என்று சொல்லமுடியாது.
9 comments:
அட, இப்படி கூட நடக்குமா? நல்ல வேளை படிக்கட்டு வேலை செய்யும்போது இப்படி நடக்கல..
:)))
வாங்க இளா
படிக்கட்டிலா? அவ்வளவு தான்!
நன்றி ஆயில்யன்.
வணக்கம்.உங்களது துறை சார்ந்த பதிவுகள்
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.நன்றி
நன்றி மின்னல்.
இன்னும் துபாய் பக்கம் தான் இருக்கிறீர்களா?
இல்லை.நான் சலாலா வில் இருக்கிறேன்
அட! இங்கு தானா? வண்டியில் வருவதென்றாலும் 10 மணி நேரமாகுமே!!
அந்த பக்கம் வந்தால் சொல்கிறேன்.
அடப்பாவி மக்கா,
க்லவுடு போட்டதை இப்படியா? சொதப்புவார்கள்,அது தான் இங்கும் ஷாப் ட்ராயிங் மேல் மிகவும் கவனமாய் இருப்பார்கள், ஒவ்வொர்ன்னும் செம டாகுமெண்டேஷனாய் இருக்கும்.
இதை என் அலுவலகத்தில் காட்டி சிரிக்கப்போறேன்.
இதுவும் அறிய தகவல்.
கார்த்திகேயன்,இப்படி கூட நடக்குமா? என்று ஆச்சரியமாக இருக்கு.
Post a Comment