Friday, December 25, 2009

25 வருடம் கழித்து.

என்னுடன் வேலை பார்த்த பழைய நண்பர்களை கண்டுபிடிப்பது என்பது பிரம்மப்பிரயத்தனமாக இருந்தது மஸ்கட் வரும் வரை.மஸ்கட்டில் நான் வேலை பார்த்த நிறுவனத்தின் கிளை இருப்பதை இணையம் மூலம் தெரிந்து இருந்தாலும் எவர் பெயரை சொல்லி தேடுவது என்ற குழப்பத்தில் ஒரு நாள் கூகிள் சாட்டில் வரும் நண்பரிடம் கேட்டேன்.அவர் இருப்பதோ வேறு அரபு நாட்டில் இவரிடம் என்ன விபரம் கிடைக்கும் என்ற சந்தேகத்திலேயே கேட்டேன்.அவரும் ஒருவர் பெயரை சொன்னதும் எனக்கு தெரிந்த பெயராகவும் இருந்ததால் அவர் அலைபேசி எண்ணை மட்டும் வாங்கிக்கொண்டேன்.தொடர்பு கொண்டு நான் நினைத்துக்கொண்டிருந்தவரும் இங்கு இருப்பவரும் ஒருவரே என்று தெரிந்தவுடன் பழைய கதைகளை பேசி மகிழ்ந்தோம்.மற்ற நண்பர்களை சந்திக்கும் எண்ணத்துடன் ஒரு உணவகத்துக்கு என்னை அழைத்து மற்ற நண்பர்களையும் அறிமுகபடுத்தி வைத்தார்.மதிய உணவே மாலை 4 மணி வரை போனது.அங்கு பேசிக்கொண்டிருக்கும் போது எனக்கு தெரிந்த மற்றொரு நபரின் பெயர் அடிபட்டவுடன் அவர் அங்க அடையாளங்களை சொல்லி “அவரா?” என்றேன். ஆமாம் அவரே தான் இங்கு தான் சோஹாரில் வேலை செய்கிறார் என்றார்கள்.எண்ணை வாங்கி பேசி மற்றொரு நண்பரை பிடித்தேன்.இப்படியே ஒரு சின்ன வட்டம் உருவானது.

கடைசியாக வாங்கிய எண் மூலம் எனக்கு 25 வருடத்துக்கு முன்பு பழக்கமான நண்பரை தொடர்பு கொண்டேன்.சிறிது நேரம் பேசிய பிறகு இன்று சந்திக்கலாம் என்று சொன்னார்.சொன்னது போல் காலையிலேயே தொலை பேசி Qurm பூங்காவிற்கு அருகில் சந்திக்கலாம் என்று சொல்லியிருந்தார்.

போன கொஞ்ச நேரத்திலேயே வந்த நண்பர் உடல் எடை குறைந்து முன்பை விட இளைத்து இருந்தார்.அவரே கூப்பிட்ட பிறகு தான் எனக்கு அடையாளம் தெரிந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

பூங்கா உள்ளே போய் சுமார் 2 மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம் அவர் மூலம் மேலும் சிலரின் தொடர்புகள் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.இணையம் மற்றும் சில தொடர்புகள் இல்லாவிட்டால் இவர்களை எல்லாம் திரும்ப சந்தித்து இருக்க முடியுமா? என்று தெரியவில்லை.

மணி ஒன்றானதும் மதிய சாப்பாடுக்கு எங்கு போகலாம் என்றவுடன் Ruwi இல் இருக்கும் சரவண பவன் போகலாம் என்றார்.போகும் போதே ஓட்டுனர் உரிமம் அதை எப்படி முயற்சிக்கனும் எவ்வளவு கால அவகாசம் எடுக்கும் என்ற விபரங்களை சொல்லிக்கொண்டு வந்தார்.சாப்பாடு முடிந்தவுடன் எங்கு போகலாம் என்று கேட்டார்,அப்படி எதுவும் முன் யோஜனையுடன் வரவில்லை என்பதால் “சினிமா” வுக்கு போகலமா என்றேன்.

சரி என்றார்.
முதலில் ஸ்டார் சினிமா போனோம் ஆனால் படம் எதுவும் சுவாரஸ்யமாக இல்லை.நாங்கள் எதிர்பார்த்ததோ “அவ்தார்”.அங்கு இல்லை என்றதும் Al Shatti திரை அரங்குக்கு போனோம் அங்கும் அதே தான் ஓடிக்கொண்டிருந்தது.அங்கும் அவதார் இல்லை,பிறகு அவரே சுமார் 40 கிமீட்டர் தள்ளி இருக்கும் Basta கடைதொகுதி கூட இருக்கும் சினிமா அரங்குக்கு கூட்டிப்போனார்,இதிலும் அதே படங்கள்.இத்தொகுதியின் கூரை வித்தியாசமாக இருந்தது.






வரும் வழியில் தென்பட்ட Grand Mosque.



வித்தியாசமான கோணத்தில் Qurm பாலம்.




சினிமா பார்பதில் அவ்வளவாக ஆர்வம் இல்லாத்தால் திரும்ப வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் அலவளாவி விட்டு போனார். வெகு நாள் கழித்து பழைய L&T-ECC கதைகளை பேசி மகிழ்ந்ததில் இன்றைய பொழுது ஓடிவிட்டது.

9 comments:

துளசி கோபால் said...

ஏகப்பட்டக் கொசுவத்தி ஏத்தி இருப்பீங்களே!

பழசுக்கு மவுசு கூடுதல்தான்:-)))))

வடுவூர் குமார் said...

வாங்க துளசி
கொசுவத்தி ஏத்தாமயா! அவர் ஏற்ற நான் ஏற்ற நேரம் போனதே தெரியலை.

geethappriyan said...

ஓகே ஓகே

ஆயில்யன் said...

எல் & டி இசிசியிலயா போற ரூட் பார்த்தா அவுங்க பகுதிக்கு போற மாதிரி ஒரு ஃபீல் நான் ஒரு ரெண்டு நாள் அங்க தங்கியிருந்தேனாக்கும் என் ப்ரெண்ட் எல்&டியில இருக்காரே :)))

வடுவூர் குமார் said...

oop! who is ur friend? Just mail me the name if possible.

கானா பிரபா said...

ஆகா 25 வருஷத்துக்குப் பின் சந்திப்பா, கட்டுமானப்படங்கள் அழகு

வடுவூர் குமார் said...

Thanks Kana Prabha.

கோவி.கண்ணன் said...

அட சுவையான அனுபவம் அண்ணா,

உங்களின் நண்பர்களின் படம் போட்டு அவர்களையும் மேலும் கவுரவப்படுத்தி இருக்கலாமே.

வடுவூர் குமார் said...

போட்டிருக்க‌லாம் கோவியாரே இருந்தாலும் 25 வ‌ருட‌ங்க‌ளில் அவ‌ர்க‌ள் என்ன‌ ம‌ன‌நிலையில் இருக்கிறார்க‌ள் என்று ஒரே நாளில் க‌ண்டுபிடிக்க‌ முடியாதே.கொஞ்ச‌ நாள் போக‌ட்டும் ம‌ற்றொரு ச‌ந்திப்பு ந‌ட‌க்காம‌லா போய்விடும்? அப்போது போட்டுவிடுவோம்