Monday, January 19, 2009

எதுவும் முடியும்.

போன வாரம் நடிகர் சிவக்குமார் பேசிய "தாய்,மனைவி & மகள்" நிகழ்ச்சியை இணையம் மூலம் பார்த்தேன்.என்னவொரு அருமையான பேச்சு! வைத்த கண் வாங்காமல் முழுவதும் பார்த்துவிட்டு தான் நகர்ந்தேன்.சுமார் 1.30 மணிக்கு மேலேகா அந்த நகர்படம் இருந்தது.இணையத்தில் போட்ட புண்ணியவானுக்கு(இசைத்தமிழ்.நெட்) அதிகமான பேண்ட்விட்த் இருக்கு போல் இருக்கு,சுமார் 200 MB க்கு மேலுள்ள கோப்பை ஏற்றிவைத்திருந்தார்.

நாம் பெற்ற அனுபவத்தை வீட்டில் உள்ளவர்களும் பார்க்கட்டுமே என்று பயர்பாக்ஸ் நீட்சி முலம் அதை தரவிறக்கினேன்.ரியல் பிளேயர் (சமீபத்திய பதிப்பு) மூலமும் தரவிறக்கலாம்.இப்படி தரவிறக்கிய கோப்பு .flv என்ற வாலுடன் இருக்கும்.

இந்த பேச்சை பார்க்கும் போது தொலைக்காட்சியில் என்னென்ன விளம்பரங்கள் வந்ததோ அவை அனைத்தையும் பார்க்கும் படி ஏற்றிவைத்திருந்தார்கள்.என்னதான் எலிக்குட்டி மூலம் துரத்திவிட்டு பார்க்கலாம் என்றாலும் அந்த விளம்பரங்கள் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோனியது.AVI,MPEG என்ற வீடியோ கோப்பு என்றால் அதற்குரிய மென்பொருட்கள் மூலம் கழித்துகட்டி விடலாம் இதுவோ .flv யில் இருக்கு.இந்த கோப்பில் தேவையில்லாததை வெட்டிவிட்டு மறுபடியும் அதை .flv யாகவே சேமிக்க வேண்டும்.இந்த வேலைசெய்ய தகுந்த மென்பொருட்கள் இணையத்தில் தேடிய போது கூகிளார் பலவற்றை காண்பித்தார். அதில் எனக்கு ஓரளவு பரிட்சயம் உள்ள வெர்சுவல் டப்- VirtualDub என்கிற இந்த மென்பொருளை தேர்ந்தெடுத்தேன்.

மென்பொருளை நிறுவியவுடன் தான் தெரிந்தது அதனால் .flv ஓட விட முடியாது என்று,திரும்பவும் கூகிளாரிடம் கேட்டவுடன் அதற்கென்ற ஒரு ஒட்டை அடைப்பான் (plug-in) இருக்கு அதை நிறுவியவுடன் நீங்கள் நினைத்த மாதிரி செய்யலாம் என்றது.செய்தேன், இப்போது விளம்பரம் இல்லாத சொற்பொழிவை மட்டும் கேட்கமுடிந்தது.


அந்த பிளக் இன் கிடைக்கும் இங்கே.முயன்று பாருங்கள்.

இதே முறையை avidemux என்ற மென்பொருள் மூலமும் செய்ய முடிகிறதாம்,நான் இன்னும் முயற்சிக்கவில்லை.

6 comments:

துளசி கோபால் said...

இவ்ளொல்லாம் செய்யமுடியுமுன்னு தோணலை. அதான் மாசத்துக்கு 10 GB இருக்கேன்னு அப்படியே பார்த்தேன். கமர்ஸியல்ஸ் வரும்போது வாயை அடைச்சுருவேன்.

வடுவூர் குமார் said...

மாதத்திற்கு 10 ஜிபி போதுமா?ரொம்ப குறைவாக இருக்கே!

Tech Shankar said...

I have bookmarked your post. thanks

வடுவூர் குமார் said...

நன்றி தமிழ்நெஞ்சம்.

ரிஷபன்Meena said...

நான் இது போல எல்லாம் முயன்றதில்லை, அப்படியே தான் பார்ப்பது வழக்கம். இன்னைக்கு முயற்சி செய்கிறேன்.

வடுவூர் குமார் said...

வாங்க ரிஷபன்
நம்மிடம் அகலக்கட்டை இருப்பதால் இறக்கி பார்க்க முடிகிறது இல்லாதவர்கள் என்ன செய்வார்கள்?
அளவு குறைய குறைய எல்லோருக்கும் சௌகரியம் தானே.
முயன்று பாருங்கள்.