என்ன தான் நம் பயணங்கள் நடை பாதையில் தொடங்கியிருந்தாலும் இன்னும் நம் நடைபாதைகள் அவ்வளவு சிறப்பாக இல்லையோ என்றே தோன்றுகிறது.
தினமும் இரவு சாப்பாட்டுக்கு பிறகு ஒரு மெதுநடை நடப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கேன்.நான் போகும் வழி கூகிள் எர்த்தில் கீழே காட்டியிருக்கேன்.சுமாராக 3.56 கி.மீட்டர் என்று காண்பித்தாலும் அவ்வளவு இருக்காதோ என்று தோன்றுகிறது.வழியெங்கும் மனிதர்கள்,கடைகள் என்று ஓரளவு சுறுசுறுப்பாக இருப்பதாலும் நடையில் அயர்ச்சி தெரிவதில்லை.
31ம் தேதி இரவு 9.15 இருக்கும்,என் வழியில் போய்கொண்டிருந்தேன்.அப்போது அல் முத்தினா சாலையின் இறுதியில் இருக்கும் ஜீபிரா கிராசிங் கடந்து அந்த பக்கம் போகும் போது ஒரு 1 வயது குழந்தையும் அதன் பெற்றொர்களும் கண்ணில்பட்டார்கள்.அந்த குழந்தை நடக்கும் அழகை ரசித்தபடி அவர்களை கடந்து போனேன்.இதே மாதிரி தினமும் ஏதாவது தம்பதிகள் அவர்கள் குழந்தைகளை நடுவில் ந்டத்தி கூட்டிக்கொண்டு போவது வழக்கம் என்பதால் எந்தவித வித்தியாசம் இல்லாமல் அவர்களை கடந்து போனேன்.என்ன தான் முன்னாடி போனாலும் திரும்பவும் சாலை விளக்குகள் மற்றும் பாத சாரி கடக்கும் இடத்தில் சிகப்பு விளக்குகள் இருந்தால் அங்கு காத்திருந்தேன்.சிறிது நேரம் அங்கு காக்கும்படி இருந்ததால் அந்த ஜோடியும் குழந்தையும் அங்கு வந்து சேர்ந்து பச்சை விளக்குக்காக காத்திருந்தார்கள்,இப்போது குழந்தை அப்பாவின் தோளில்.
இங்கு பாத சாரிகள் கடக்கும் விளக்கும் இந்த ஜீபிரா கிராசிங்ம் சேர்ந்தே இருக்கும் வந்த சில மாதங்களில் இது புரியவில்லை.இந்த இடங்களில் யாருக்கும் முக்கியத்துவம்?நான் இது வரை பார்த்த இடங்களில் ஜிபிரா கிராசிங் இருந்தால் அங்கு நடை மனிதர்களுக்குத்தான் முக்கியத்துவம்,வாகனங்கள் கட்டாயமாக நிற்கவேண்டும்.இங்கு ஜிபிரா கிராஸிங் அதே சமயத்தில் விளக்கு சமிக்கை இருக்கும் போது குழப்பம் நேர்கிறது.ஆதாவது வாகனம் ஏதும் வரவில்லை என்றால் நீங்கள் ஜிபிரா கிராஸிங்கை உபயோகப்படுத்தி கடக்கலாம் இல்லாவிட்டால் விளக்கு பச்சைக்கு மாறும் வரை காத்திருக்கவேண்டும்.சமிக்கை இல்லாத இடங்களில் ஜிபிரா கிராஸிங் இருந்தாலும் பெறும்பாலான வாகன ஓட்டிகள் நிறுத்துவதில்லை,நாம் தான் பார்த்து கடக்கவேண்டும்.வெளியூர்களில் இருந்து புதிதாக வந்திருப்பவர்கள் தான் வண்டியை நிறுத்தி நம்மை போக அனுமதிப்பார்கள்.
சரி,நம்ம அந்த ஜோடியை பார்ப்போம்... இப்போது வாகனங்கள் சிகப்பு விளக்குகள் மூலம் நிறுத்தப்பட்டு பாதசாரிகளுக்கு பச்சை விளக்கு போடப்பட்டது.நான் முதல் ஸ்டெப் எடுத்துவைக்க அந்த ஜோடியின் ஆண் குழந்தையுடன் கொஞ்சம் எனக்கு முன்னாடி போக..பக்கத்தில் நின்றிருந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு நான் இந்த பக்கம் பார்க்க ஒரு கார் அவரை உரசிக்கொண்டு நிற்காமல் சென்றுகொண்டிருந்தது.மனைவியின் அலறல் கேட்டு நின்றதால் குழந்தையும் கணவரையும் அப்பெண்ணால் காப்பாற்ற முடிந்தது.இது எதுவுமே உணராமல் அந்த மகிழுந்து சிகப்பு விளக்கையும் மீறி போய்கொண்டிருந்தது.இதே முறையில் சிங்கையிலும் ஒரு பெண் ஓட்டுனர் பாதசாரி கடக்கும் இடம் என்று தெரியாமல் நிற்காமல் போய்கொண்டே இருந்தார்.இப்படிப்பட்ட நிகழ்வுகள் பெறும்பாலும் வாகனம் ஓட்டுவர்கள் தங்கள் நினைவில் இருந்து தப்பி வேறு காரியம் செய்துகொண்டிருப்பாதால் தான் ஏற்படுகிறது.என்ன தான் சட்ட திட்டப்படி நாம் இருந்தாலும் அதை மீறுபவர்களால் கூட நாம் துன்பம் அனுபவிக்க நேரிடும் என்பது தான் இதன் மூலம் தெரிகிறது.
பிறக்கப்போகும் வருடத்தை சந்தோஷமாக கொண்டாட அந்த தம்பதியினர் இவ்விபத்தில் இருந்து தப்பியது ஒரு பெறும் பேறு.
No comments:
Post a Comment