சற்று முன் ஒரு நகராட்சி வலைப்பக்கத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது அங்கு வேலை செய்பவர்களின் விபரங்களை (செல் பேசி எண் கூட இருக்கு) போட்டு இருந்தார்கள்.
வீட்டு முகவரி
செல் பேசி எண்
அவர்கள் படம்
மேலே சொன்ன அவ்வளவும் ஓகே தான் ஆனா அதோடு கூட அவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்கள் என்பதையும் வெளியிடனுமா?
எனக்கு புரியலை (TBCD - கொஞ்சம் கடன் வாங்கிக்கிறேன்),புரிஞ்ச மக்கள் யாராவது விளக்கினால் தேவலை.
அரசாங்கத்தையே கழகமாக்கிட்டாங்க போல் இருக்கு.
8 comments:
ஏன் குமார்? அது வார்ட் கவுன்சிலர்கள் பட்டியல். தேர்தல்ல நின்னு ¨ஜெயிச்சு¨ வந்தவங்கதானே?
வேலை எதாவது ஆகணுமுன்னா அந்தந்த கட்சி ஆளுங்க, அவுங்க கட்சிக்கு நபர்களுக்கே கொடுக்கறதைக் கொடுத்துக்கலாம். சொத்தும் வெளியே போகாது என்ற 'நல்ல' எண்ணமாக்கூட இருக்கலாம்:-)))))
ஓ! இதுவா? இவர்கள் எல்லாம் நகராட்சி கவுன்சிலர்கள்(நகர்மன்ற உறுப்பினர்கள்) மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், அலுவலர்கள் அல்ல. கட்சி வாரியாகப் போடுவது வழக்கம் தான். இவர்களில் எந்த கட்சியினர் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அவர்களில் ஒருவரை நகர் மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுப்பார்கள்.
வாங்க துளசி,நானும் அப்படித்தான் நினைச்சேன் ஆனா நம்ம ஜோதிபாரதி ஏதோ சொல்லியிருக்கார் பாருங்க.
வாங்க ஜோதிபாரதி
ஓ! அப்படியா?
நான் கூட ஏதோ அலுவலகர்கள் என்று நினைத்தேன்.
தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.
ஜோதிபாரதி சொன்ன பிறகு தான் கொஞ்சம் புரிந்தது திவா.
கட்சியோடத்தான் இருக்கனும் போல் இருக்கு.
கட்சிகாரர்கள் தான்.
பரவாயில்லை போடட்டும். செல் பேசி எண்ணையும் கொடுத்துள்ளார்களே..
பாராட்டுகள்
முதல் வருகைக்கு நன்றி வண்ணத்துப்பூச்சியாரே.
Post a Comment