Wednesday, January 07, 2009

சீர்காழி முனிசிபாலிடி

சிங்கையில் இருந்த போது கல்யாண சான்றிதழா அல்லது உங்கள் மகன்/மகள் பிறந்த நாள் சான்றிதழோ வேண்டுமென்றால் நேரே போய் நம்ம ஹைகமிஷனில் 31 வெள்ளி கொடுத்தால் உங்கள் கடவுச்சீட்டை உதாரணம் காட்டி கொடுத்துவிடுவார்கள்.அதையே சிங்கை அரசாங்கமும் ஏற்றுக்கொண்டது.

ஆனால் இங்கு (ஐக்கிய அரபு எமிரேட்ஸில்) சிங்கையில் எடுத்ததை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் போலும் அதனால் மனைவி/குழந்தைகளை கூட்டிவருவதில் சிக்கல் இருக்கும் போல் உள்ளது.

சென்னை போயிருந்த போது நமது தலைமை செயலகத்தில் உள்ள மனிதவள அதிகாரியிடம் கேட்ட போது உங்கள் கல்யாணம் நடந்த இடத்தில் உள்ள முனிசிபாலிட்டியிடம் தான் வாங்க வேண்டும் என்றார்.அப்போது சீர்காழி போக நேரமில்லாத்தால் இங்கு வந்துவிட்டேன்.

இன்று மதியம் வலையில் உலாவிக்கொண்டிருந்த போது கூகிளில் சீர்காழி முனிசிபாலிடி என்று போட்டு தட்டினால் ....அட! என்று ஆச்சரியப்படவைக்கும் நிலையில் இப்பக்கம் திறந்தது.




தமிழ்நாடு/இந்தியாவில் இவ்வளவு விரைவில் வலைப்பக்கம் மற்றும் இணைய வசதிகள் வந்துள்ளது பலருக்கும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கமிஷ்னருக்கு மின்னஞ்சல் கொடுத்து விபரம் கேட்டிருக்கேன்,பார்ப்போம் பதில் வருகிறதா என்று.

2 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஆகா! அருமை!!
பரவாயில்லை, இது போல் மின் ஆளுமை(இ.கவர்னன்ஸ்) எல்லா துறையிலும் வந்துவிட்டால், வேலை இலகுவாக முடியும்.

வடுவூர் குமார் said...

வாங்க ஜோதிபாரதி
இதிலாவது அந்த கோப்பு வேண்டும் இந்த கோப்புவேண்டும் என்று சிகப்பு நாடா திட்டம் வராமல் மக்களுக்கு சேவை செய்தால் நல்லது,பார்ப்போம் நடக்கிறதா என்று.