Saturday, December 27, 2008

மற்றொரு வெள்ளி

இப்போதெல்லாம் ஏன்டா வெள்ளிக்கிழமை(இங்கு பொது விடுமுறை) வருகிறது என்று இருக்கிறது.பொழுதை போக்குவது என்பது பிரம்பபிரயத்தனம் செய்யவேண்டியிருக்கு.

காலை 4.38 க்கெல்லாம் விழிப்பை ஏற்படுத்திவிட்டது 80 db மேலான குறட்டை அதுவும் மிக அருகில்.அந்த வெறுப்பிலும் அந்த குறட்டையை கைப்பேசியில் பிடிக்கமுடியுமா என்று தேடித் தேடி களைத்து படுக்கை எடுத்துக்கொண்டு சமயலறைக்கு போனேன்,நல்ல வேளை ஓரளவு இடம் இருந்தது.படுக்கையை விரித்து கதம்ப வாசனைக்கு ஊடே படுத்தேன்,மறக்காமல் கதவை மூடிவிட்டு.சிறிது நேரம் தூங்கி எழும்போது மணி 7 ஆக இருந்தது.இதற்கும் மேல் உடம்பு இடம் கொடுக்காததால் எழுந்து குளிக்கப்போனேன்.

8 மணிக்கு பேப்பர் முழுவதும் படித்துவிட்டேன்.பூஸ்டுடன் இரண்டு சிலைஸ் பிரட்டும் சாப்பிட்டுவிட்டேன்.இன்னும் குறட்டை குறைந்தபாடில்லை.ஜிக்கி வாசுதேவ் சொன்ன மாதிரி அதை கொஞ்சம் ரசிக்க ஆரம்பித்தால் வெறுப்பு வராதோ என்று நினைத்து ஆழ்ந்து கேட்டேன்....ஹூகும் அந்த நிலைக்கு போக இன்னும் நிறைய வருடங்கள் ஆகும் போலிருக்கு.

என்ன பண்ணலாம்? என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது பக்கத்தில் நடந்து கொண்டிருக்கும் வேலையில் நேற்று அந்த ஸ்டீல் பாலம் ரோட்டின் மீது கடந்து அடுத்த தூணில் நிப்பாட்டி முதல் சிலாபை வைத்திருந்தது ஞாபகம் வந்தது.கட்டுமானத்துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவுமே என்று கேமிராவை எடுத்துக்கொண்டு கதவை பூட்டிவிட்டு கிளம்பினேன்.

சாலையின் மறுமுனை வரை நீண்டிருக்கும் பீம்.



சிலாபின் முதல் பீஸ் கீழே



இது சில பகுதிகள் முடிந்ததின் படம்



வெள்ளிக்கிழமையில் மட்டுமே இப்படிப்பட்ட சாலைகளை காணமுடியும்





போகும் வழியில் ஒரு சைட்டில் புதுமாதிரியான லின்டல் பார்த்தேன், அதை பிடித்துவிட்டு பக்கத்தில் உள்ள மெட்ரோ க்கு போய் அங்கும் சில படங்களை பிடித்தேன்.இதற்கு மேலும் வீட்டிற்கு போகும் எண்ணம் இல்லாத்தால் அப்படியே நடையை தொடந்தேன்.என்ன தான் வெய்யில் அடித்தாலும் குளிர்ந்த காற்று அதை ஒன்றுமில்லாமல் செய்தது.வெய்யில் நடப்பது இதமாக இருந்தது.


ஏதோ ஒரு மெயின் ரோடின் முடிவில் ஒரு சின்ன மைதானத்தில் பலர் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தனர்.நமக்கு பிடித்த ஆட்டம் என்பதால் நின்று பார்க்க ஆரம்பித்தேன்.ஒரு குழுவில் ஹிந்தியும் தமிழும் பேசுபவர்கள் இருந்தார்கள்.மற்றொரு குழுவில் முழுக்க ஹிந்தி பேசுவர்கள் .அப்படியே சில படங்கள் எடுத்துவிட்டு நகர்ந்தேன்.

கீழே உள்ள படத்தில் பந்துவீச்சு நம்மாள் (தமிழர்).



வெய்யில் பளிச் வெளிச்சம் கண்ணை என்னவோ செய்ய கையை மறைப்பாக வைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்த போது மணி 10.

இன்னும் குறட்டை சத்தம் ஓயவில்லை.எனக்கு முன் தலை மற்றும் கழுத்து பகுதியில் நம நம என்று வலி தோன்றுவதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தன.இன்று மாலை வரை நீளப்போகும் தலைவலியுடன் பொழுதை போக்கனும்.

8 comments:

நாகை சிவா said...

ரொம்பவே நல்ல உள்ளம் படைத்தவர் போல... தூங்க கொடுத்து வச்சு இருக்கார் ;)

வடுவூர் குமார் said...

வாங்க சிவா
கொடுத்துவைத்தவர்?? நற.. நற.. :-))
என்ன பண்ணுவது இப்போதைக்கு வேறு வழியில்லை.

Tech Shankar said...

உலகத்தை நினைச்சேன் சிரிச்சேன் - அப்படின்னு செந்தில் வசனம் பேசுவார் ஒரு படத்திலே.

அது இங்கே அநியாயத்துக்கு work out ஆகுதுங்க.

jeevagv said...

//என்ன பண்ணலாம்?//
திருப்பாவை, திருவெம்பாவை படிக்கலாம்!
;-)

ஆனா, கட்டாயம் படம் எடுக்கணும்! இல்லைனா, நாங்க எப்படி இப்படி கட்டிட (அட சந்தம் வருது) படங்களை பார்க்கறது!

வடுவூர் குமார் said...

என்னங்க பண்ணுவது தமிழ்நெஞ்சம்.
நாட்களை எண்ணிக்கொண்டு ஓட்டவேண்டியது தான்.

வடுவூர் குமார் said...

வாங்க ஜீவா
படிக்கலாம் தான், அதற்கு தகுந்த சூழ்நிலை வந்தால் அதிலேயே முழுகலாம்.பார்ப்போம் எப்போதாவது வருகிறதா? என்று.

Vadielan R said...

நம்ம தமிழ்மண்ணில் இந்த மாதிரி சாலைகளையும் மேம்பாலங்களையும் பார்க்கபோறோமோ இங்கேயும்தான் ஸ்டாலின் கட்டறார் நல்லாவே இல்ல இந்த புது கல்லூரி மேம்பாலத்தில் இருந்து வந்தீங்கன்னா அந்த காலத்தில மன்னர்கள் குதிரைல வந்த மாதிரியே இருக்கும். இளசுகளுக்கு ரொம்ப ஜாலி!

வடுவூர் குமார் said...

வடிவேலன்
நம்மூரில் முதன் முதலில் கவனிக்கப்பட வேண்டிய துறை என்றால் அது நெடுஞ்சாலை துறை தான்.இன்னும் பல இடங்களில் சாலைகளை பழைய மாதிரியே போட்டு அடுத்த குத்தகைக்கு தயார் பண்ணுகிறார்கள்.
உலக தரம் உள்ள நிறுவனங்களுக்கு அரசியல் குறுக்கீடு இல்லாமல் வேலை கொடுத்து பார்த்து மகிழ நம் ஆட்கள் மனநிலை இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது.