Saturday, June 30, 2007

மேற்கு வானில்

நேற்று சுமார் 1 மணி நேரம் இங்கு சுற்றிக்கொண்டிருக்கும் போது இந்த வலைத்தளம் கிடைத்தது.இப்படிப்பட்ட ஒரு வலைத்தளத்தை தேடித்தேடி முன்பு அலுத்து விட்டுவிட்டேன்,அது இப்போது கிடைத்தவுடன் ஒரே சந்தோஷம்.

புதிய வலைத்தளத்தின் முகப்பிலேயே இன்று வீனசும் & சனியும் அருகருகே தெரிவதாக போட்டிருந்தார்கள்.கீழே உள்ள படம் சென்னை வானில் மேற்கு பக்கத்தில் இரவு 8 மணிக்கு இப்படி தெரியும்.



மற்ற தேசத்தில் உள்ளவர்கள் இந்த வலைத்தளத்துக்கு போனால் அங்கு interactive sky என்று வலது பக்கத்தில் இருக்கும் அதை சொடுக்கி தேவையான விபரங்கள் கொடுத்தால் உங்கள் ஊரில் வானம் எப்படியிருக்கும் என பார்க்கமுடியும்.புதிதாக வானவியலை கற்பவர்களுக்கு இது மிகுந்த உபயோகமாக இருக்கும்.

சரி,இது கணினியில் தெரிகிறது,வெளியில் கொண்டு போய் பார்க்க முடியாதவர்களுக்காக அந்த வரை படத்தை pdf ஆக மாற்றி கொடுக்கிறார்கள்.பிறகு என்ன கஷ்டம் அப்படியே ஒரு பிரிண்ட் எடுத்து ஓடுங்க மாடிக்கு.

4 comments:

ரத்தினகிரி said...

மிக்க நன்றி! இன்று பார்த்து விட வேண்டியது தான். வெறுங்கண்ணிற்கே தெரியும் தானே?

வடுவூர் குமார் said...

வாங்க ரத்தினகிரி
கடந்த சில வாரங்களாக வீனஸ் வெறும் கண்ணுக்கு தெரிந்துகொண்டு தான் இருக்கிறது,இப்போது சனியை பக்கத்தில் பார்கலாம் என்று பார்த்தால் மேக மூட்டமாக இருக்கிறது இப்போது.

Anonymous said...

குமார், நீங்கள் லினக்ஸ் பயன்படுத்துபவர் போல் தெரிகிறது. kstars பயன்படுத்தி பார்த்திருக்கீங்களா? எந்த வருடத்தின் எந்த நாளுக்குமான இரவு வானத்தை சிமுலேட் செய்யும் அற்புதமான மென்பொருள் அது.

வடுவூர் குமார் said...

Friendly Fire
I think its for KDE.Normally I feel ok with gnome,hence I didn't try.I tried some other software.. needs lot of dependecy issues,so gave up in Linux.
thanks for the link.