நேற்று வலைப்பதிவுகளை பார்த்துக்கொண்டிருக்கும் போது நம்மவர் ஒருவர் ஒரு வீடியோ அதுவும் யூடியூபில் போட்டிருந்தார்.வீட்டில் இணைய இணைப்பில் பார்த்தேன் சும்மா அட்டகாசமாக இருந்தது.அதையே அலுவலகத்தில் சிலருடன் பகிந்துகொள்ள எண்ணினேன்.
குழுவாக செயல்படும் போது அதிக திறன் வெளிப்படுத்த வாய்புள்ளதை காண்பிக்க இந்த அசைவுப்படம் உதவும் என்று நினைத்தேன்.
இன்று காலை அலுவலகம் வந்தவுடன் இது ஞாபகம் வந்தது அதே சமயத்தில் யூ டியூப் இங்கு கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதால் அதை செய்ய முடியாத நிலை.
கூகிளில் தேடிய போதும் சில வலைத்தளங்கள் யூ டியூபில் உள்ள முகவரி கொடுத்தால் அந்த வீடியோவை தரவிரக்கம் செய்ய முடியும் என்று சொல்லியிருந்ததை பார்த்தேன்,முயற்சித்தேன் & தோற்றேன்,ஏனெனில் அவை நேராக யூ டியூப்பிக்கு சுட்டி கொடுத்திருந்தார்கள்.எங்களால் தான் அங்கு போக முடியாததால் வேறு பக்கங்களை தேடிக்கொண்டிருந்தேன்.
அப்படி சிக்கிய ஒரு தளம் தான் இது.இதில் உங்கள் யூ டியூப் முகவரியை கொடுத்து உடனே "தேடு" சுட்டியை அமுக்கிடாதீங்க.அந்த யூ டியூப் என்ற முகவரிக்கு பக்கத்தில் "kiss" என்று அடித்து பிறகு தேடுதலை தொடங்கவும்.
இப்படி செய்யும் போது அது உங்களை நேரடியாக யூ டியூப் பக்கத்துக்கு எடுத்துச்செல்லாமால் அதே சமயம் உங்களுக்கு வீடியோவை தரவிரக்கிக் கொடுக்கும்.மறக்காமல் அதனை .flv என்று மாற்றவும்.இப்படி மாற்றிய ஃபைலை எந்த FLV பிளேயரை கொண்டு பார்க்கலாம்.
நன்றி: youtube யில் ஏற்றியவரே!!
யூ டியூப் போக முடியாதவர்களுக்காக இங்கே ஏற்றியுள்ளேன்.
ஆமாம் யூ டியூபே போக முடியாவிட்டால் எப்படி அட்ரஸ் எடுப்பது என்று கேட்கிறீர்களா? எனக்கு அதில் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது.அவருடைய பதிவு தமிழ் மணத்தில் தெரிந்த போது அதில் முதலில் முகவரி தெரிந்தது அப்படியே வெட்டி/ஒட்டி வேலை மூலம் இதை செய்தேன்.:-))
4 comments:
Incredible Video!! :-)
குமார் - இது அலுவகங்களில் நம்மவர்களின் வேலைத்திறனை உயர்த்த பெரிதும் உதவும் என்று நம்புகிறேன் :)
யூட்யூப் முகவரியை எடுப்பது மிகவும் எளிது. படம் மறைக்கப்பட்ட பக்கத்தின் மீயுரை மூலத்தை (html source) பார்த்து அதில் யூட்யூப் என்று தேடினால் உடனே சிக்கிவிடும்.
உதாரணமாக ஃபயர்ஃபாக்ஸில்:
(Ctrl+u) (Crtl+f) {youtube.com} என்று அடித்தால் அடுத்த நொடியில் அதன் சுட்டி இருக்குமிடம் தெரிந்துவிடும்.
எக்ஸ்ப்ளோரரில் - வேண்டாம் என்னை வம்புக்கு இழுக்காதீங்க! :)
வாங்க CVR
நேற்று முழுவதும் இதே நினைப்பில் இருந்தேன்.
"துணிந்த பின் மனமே..." பாடல் தான் ஞாபகம் வந்தது.
வாங்க வெங்கட்
என்னையே நானே கூப்பிட்டுக்கொள்வது போல் இருக்கிறது.
உங்களால் இன்று ஒன்று கற்றுக்கொண்டேன்.
மிக்க நன்றி.
Post a Comment