சில நாட்களுக்கு முன்பு நமது வலைப்பதிவர் மயூரன் ஃபிலைட்கியர் என்னும் திறவுற்று (Free Software) மென் பொருளை சொல்லி அது கிடைக்கும் இடத்தையும் சொல்லியிருந்தார்.
எனக்கு பறக்க பிடிக்கும் அதுவும் விமானம் பறக்க ஒரு மென்பொருள் காசு செலவழிக்காமல் கிடைக்கிறது என்றவுடன், உடனே தரவிரக்கம் செய்து நிறுவினேன்.எந்த வித பிழை செய்தி இல்லாமல் நிறுவியது.நிறுவியவுடன் கை துறு துறு என்று இருக்க மென்பொருளை துவங்கினேன். தேவையான விமானம் மற்றும் விமான நிலையம் தேர்வுசெய்த பிறகு மென்பொருள் துவங்கியது.பிரச்சனை இங்கு தான் ஆரம்பித்தது. எந்த கீயில் கன்ட்ரோல் இருக்கு என்று தெரியவில்லை எப்படி விமானத்தை துவங்குவது என்று தெரியவில்லை.உதவி பக்கத்தை படிக்காமல் வந்ததின் விளைவு.ஏதோதோ பட்டனை தட்டியவுடன் ஓட ஆரம்பித்து இரண்டு மூன்று முறை கீழே விழுந்தேன்.
சரி,இது வேலைக்கு ஆகாது என்று உதவி பக்கங்களை தேடியதில் மிக எளிதாக விளக்கி இருந்தார்கள்.அதை படிக்க நேரமில்லாதவர்களுக்கு சிறிய குறிப்பு கீழே.
Flight Gear ஆரம்பித்தவுடன் விமான மாடலை தேர்ந்தெடுக்கச்சொல்லும்,பிறகு விமான நிலையம்.இது முடிந்தவுடன் மென்பொருள் தன் வேலையை ஆரம்பித்து ஓடு பாதையில் உங்கள் விமானம் நிற்கும் நிலைக்கு வரும் அதோடு இன்ஜின் ஓடும் சத்தமும் கேட்கும். (ஸ்பீகரை ஆன்னில் வத்திருந்தால்)
நீங்கள் பார்க்கும் காட்சி விமானத்தின் உள் பகுதி இதில் இருக்கும் பல முட்கள் மற்றும் மீட்டர்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது மட்டும் அல்லாமல் இவை களை பார்க்காமலே நாம் ஓட்டமுடியும் என்பதால் மேலே சொல்கிறேன்.
முதலில் உங்கள் கீ போர்டில் "Num Lock" ஐ ஆனில் வைத்திருக்கவும்.பிறகு "v" ஐ ஒரு முறை தட்டவும்,காட்சி மாறி வெளியில் இருந்து விமானத்தை பார்பது போல் மாறும்.மீண்டும் "v" பட்டனை தட்டும் போது ஒவ்வொரு நிலையாக மாறும்.உங்களுக்கு எது சௌகரியமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். மேலே உள்ள படத்தின் கீழே விமானத்தை திசை திருப்பும் கருவி கொஞ்சமாக தெரிகிறதை பார்க்கவும்.
அடுத்து உங்கள் மவுசை இந்த கன்ரோல் ரூமில் வத்து வலது கிளிக் பண்ணினால் அது திசை திருப்பும் கருவியாக மாறிவிடும்.இன்னொரு முறை சொடுக்கினால் ஏதோ ஆகிறது,தெரிந்த பிறகு சொல்கிறேன்.:-)). மீண்டும் வலது சொடுக்கு போட பழைய மவுசுக்கு திரும்பிவிடும்.
வானூர்தி இருக்கு,ஓடு தளம் இருக்கு,திசை திருப்ப மவுஸ் இருக்கு...இன் ஜினுக்கு பவர் கொடுக்கவேண்டும்,அவ்வளவு தான்.அதற்கு "Page Up" கீயை அழுத்திக்கொண்டிருந்தால் போதும் ,விமானம் ஓடு தளத்தில் ஓடி மேலெழும்பிவிடும்.பிறகு கீயை விட்டுவிடலாம்.
ஓட்டிக்கொண்டே இருங்கள்...கீழே இறங்கனுமா?
முதலில் ஓடு தளத்தை கண்டுபிடியுங்கள்,பிறகு மவுசை மேல் நோக்கி நகர்த்தினால் விமானத்தின் மூக்கு கீழ் நோக்கி போகும்.கொஞ்சம் கொஞ்சமாக "Page Down" பட்டனை தட்டவும்.இது விமானத்தின் வேகத்தை குறைக்கும்.
நான் ஓடுதளத்தில் தான் இறக்க நினைத்தேன்,ஆனால் புல்வெளியில் தான் இறக்க முடிந்தது.
அடுத்த முறை எங்காவது போகனுமென்றால் ஒரு மெயில் கொடுங்க வந்து அழைத்துப்போகிறேன்.:-))
இது ஒரு சுகமான அனுபவம் ,ஓட்டிப்பாருங்கள்.
முக்கியமான பின் குறிப்பு: தரையை தொட்டவுடன் "b" பட்டனை அழுத்தவும்,அது தான் பிரேக்.இல்லாவிட்டால் ஏதாவது பில்டிங் பக்கம் ஓட்டுங்க,சுலபமாக நிறுத்திவிடலாம்.:-))
No comments:
Post a Comment